“சென்னைக்கு வடக்கில் கரையை கடந்தது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்” - வானிலை மையம்
”சென்னைக்கான ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது”
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடந்தது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சூறாவளிக் காற்று வீசும்
புயல் சின்னம் கரையை கடக்கும்போது சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் சூறாவளிக் காற்றுடன் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
புயல் சின்னமானது இன்று காலையில் சென்னைக்கு அருகில் தெற்கு ஆந்திரா இடையேகரையை கடந்து உள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் கூட ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
ரெட் அலெர்ட் வாபஸ்
இந்நிலையில், சென்னைக்கு அதி கன மழைக்காக விடுக்கப்பட்டிருந்த ரெட் அலெர்டை நேற்று வானிலை ஆய்வு மையம் வாபஸ் வாங்கிக் கொண்டது. ஆய்வு மையம் கணித்தது மாதிரி பெரிய அளவில் சென்னைல் மழை பெய்யவில்லை என்பது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், ரெட் அலெர்ட் அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வாபஸ் வாங்கிக் கொண்டது.