மேலும் அறிய
Advertisement
Kanchipuram: சாமி முன்னே சண்டை போட்டுக் கொள்ளும் வடகலை - தென்கலை பிரிவினர்..! முகம் சுளிக்கும் பக்தர்கள்..!
சாமி மண்டகபடியின் போது சுமார் 1மணி நேரம் நடைபெற்ற பிரச்சனையால் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் முகம் சுளித்தனர்.
சங்கரமடம் அருகே ஆஞ்சநேயர் கோவில் அருகே மண்டபடியின் போது பிரபந்தம் பாடுவதில் பிரச்சனை ஏற்பட்டு நித்தியபடி நெய்வேத்திய பிரசாத விநியோகத்தில் இருபிரிவினருக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வடகலை - தென்கலை
காஞ்சிபுரம் ( Kanchipuram ) : உலக பிரசித்தி பெற்ற அத்திவரதர் எழுந்தருளிய காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் என்று அழைக்கப்படும் தேவராஜ சுவாமி திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தில் காண கொடியேற்றம் கடந்த புதன்கிழமை அன்று தொடங்கியது. இந்த நிலையில் மூன்றாம் நாளான காலை கருட சேவை உற்சவம் அதனை தொடர்ந்து இரவு ஹனுமந்த வாகன உற்சவமும் நடைபெற்றது. மழையின் காரணமாக திருக்கோவிலிருந்து சுமார் 8 மணிக்கு மேலாகவே வீதியுலாவானது நடைபெற்றது. திருக்கோவிலிருந்து வடகலை பிரிவினரின் வேத பாராயணங்கள் முழங்க வந்து சங்கரமடம் அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோவிலில், மண்டகபடியாக கண்டருளி பட்டாட்சாரியர்களின் வேத பாராயணங்களும் பாடப்பட்டது . அப்போது வடகலை, தென்கலை பிரிவினருக்கிடையே வேத பாராயணம் பாடிய போது சிறு சலசலப்பு ஏற்பட்டு நித்தயபடி பூஜைகளும் நடைபெற்றன.
வேத பிராயணம்
சாமிக்கு நெய்வேத்திய நித்தியபடி செய்த பிரசாதமானது வழங்கும்போது, வடகலை பிரிவினரே வேத பிராயணம் பாடியபடி வந்த நிலையில் எதற்காக தென்கலை பிரிவினருக்கு வழங்கப்படுகிறது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அவை இருதரப்பினருக்குமிடையே தள்ளு முள்ளுவாக மாறி வீடியோ எடுத்த செல்போன்கள் தட்டிவிடப்பட்டு, செல்போன்கள் பரந்தன. இதனால் மண்டபடி நடைபெற்ற இடத்தில் கூச்சல் குழப்பமானது ஏற்பட்டு பகதர்கள் முகம் சுழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு, சிலர் சாமி தரிசனம் செய்திட முடியாது புறப்பட்டும் சென்றனர். இதனையெடுத்து சுமார் 1 மணி நேர வாக்குவாத தள்ளு பிரச்சனைக்கு பின் பின் களைந்தனர்.
சற்று தாமதமாகவே சாமி
இதனால் மண்டபடி எழுந்தருளிய இடத்தில் கால தாமதமாகி சற்று தாமதமாகவே சாமி புறப்படாகி நள்ளிரவில் திருக்கோவிலை சாமி சென்றடையும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஏற்கனவே வடகலை தென்கலை பிரிவினருக்கு பல ஆண்டு காலமாக பிரச்சனைகள் தொடர்ந்து வரக்கூடிய நிலையில் இரண்டு தரப்பினருமே வேத பாராயணம் முழங்க நீதிமன்றமானது அறிவுறுத்தி தீர்ப்பு வழங்கி இருக்கக்கூடிய நிலையில், தென்கலை பிரிவினர் மீண்டும் நீதிமன்றத்தினை நாடிய போது இருபிரிவினமே பாட வேண்டும் என மீண்டும் அறிவுறுத்தியதனால், தென்கலை பிரிவினர் வேத பாராயணம் பாடாமல் தங்களுக்கு சாதகமான தீர்வு வரும் வரை பாடாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
விழுப்புரம்
உலகம்
இந்தியா
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion