மேலும் அறிய
Advertisement
Crime : தாயை வன்கொடுமை செய்ய முயன்ற கொடூரம்.. கொலையாளியாக மாறிய 12-ஆம் வகுப்பு மாணவன்
செங்கல்பட்டு மேல்மருவத்தூர் அருகே தாயிடம் தவறாக நடந்து கொண்ட முதியவரை கொலை செய்த சிறுவன்
கடந்த ஜூன் மாதம் 17ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள ராமாபுரம் காட்டுப்பகுதியில் அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் இருப்பதாக மேல்மருவத்தூர் காவல்துறையைக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மேல்மருவத்தூர் காவல்துறையினர், உயிரிழந்த நிலையில் இருந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அப்பொழுது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உயிரிழந்த முதியவரின் பெயர் கன்னியப்பன் ( 60). இவர் விவசாயம் செய்து வருவதும் செய்ய வந்தது. முதியவரின் உயிரிழப்பு காரணம் என்ன என்பது குறித்து மேல்மருவத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் முதியவரின் மீது, கல்லைக் கொண்டு தாக்கி கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. முன்விரோதம் யாராவது அவரை கொலை செய்தாரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டனர். அதேபோல அந்த காட்டுப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கடந்த சில நாட்களாக வந்து சென்றவர்கள் யார் யார் என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அதே பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவனின் தாயிடம் முதியவர் கன்னியப்பன் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ததை மாணவன் தட்டி கேட்டு உள்ளான். தட்டி கேட்ட மாணவனை முதியவர் தாக்கியதால் மாணவன் கல்லால் முதியவரை கொலை செய்துள்ளதாக விசாரணைடயில் தெரிய வந்துள்ளது . இதனை அடுத்து சிறுவனை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தேர்தல் 2024
திரை விமர்சனம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion