மேலும் அறிய
Advertisement
Bogi Pongal Celebration : நாளை பிறக்கிறது தை..! நல்வழி பிறக்கட்டும்..! போகி மேளம் அடித்துக்கொண்டாடிய காஞ்சி மக்கள்..!
"தங்கள் வீடுகளை சுத்தம் செய்து சேகரித்த தேவையற்ற பொருட்களை, குழந்தைகள் மேளம் கொட்டிட தீயிட்டு கொளுத்தி மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்."
தை பிறந்தால் வழி பிறக்கும் என கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தை மாதத்தின் முதல் நாளான நாளை கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக மார்கழி மாதத்தின் கடைசி நாளை போகிப் பண்டிகை என கொண்டாடுவது தமிழ் மக்களின் மரபு. அந்த வகையில் மார்கழி மாதத்தில் கடைசி நாளான இன்று போகிப் பண்டிகை காஞ்சிபுரம் பகுதியில் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
புகையில்லா போகிப் பண்டிகையை கொண்டாட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், காஞ்சி நகர மக்கள் அதிகாலை நேரத்திலேயே குடும்பத்துடன் எழுந்து, பழையன கழிதலும், புதியன புகுதலும்,எனும் பழமொழிக்கு ஏற்ப மனதில் உள்ள தீய எண்ணங்களை விலக்கி,புதிய நல்லெண்ணங்களை வரவேற்கும் விதமாக, தங்கள் வீடுகளை சுத்தம் செய்து சேகரித்து வைத்த, தேவையற்ற பொருட்களை தங்கள் வீடுகளின் வாசல்கள் முன்பு குவித்து , சிறுவர் சிறுமியர்களான தங்கள் குழந்தைகள் போகி மேளத்தை கொட்டிட தீட்டு கொளுத்தி போகிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி தைப்பொங்கலை வரவேற்று வருகின்றனர்.
தீயவை போக்கும் போகி..வரலாறும், போகி கொண்டாட்டத்துக்கான காரணமும் தெரியுமா?
மழையின் கடவுளான இந்திரனை போற்றும் வகையில் போகி பண்டிகை வெகு விமரிசையாக நாடெங்கிலும் கொண்டாடப்படுகிறது. வரும் காலங்களில் நல்ல விளைச்சலைப் பெற விவசாயிகள் இறைவனை வேண்டுகின்றனர். மக்கள் தங்கள் கலப்பை மற்றும் பிற விவசாய உபகரணங்களையும் அன்று வணங்குகிறார்கள்.
மக்கள் தங்கள் வீட்டில் உள்ள பழைய மற்றும் பயனற்ற வீட்டுப் பொருட்களை விறகு மற்றும் மாட்டு சாணம் பிண்ணாக்குகள் கொண்டு கொளுத்தப்பட்ட தீயில் வீசி எரிக்கிறார்கள். இந்த வழக்கம் 'போகி மந்தலு' என்று அழைக்கப்படுகிறது. இது பொதுவாக உங்கள் வாழ்க்கையிலிருந்து பழைய மற்றும் எதிர்மறையான விஷயங்களை அகற்றிவிட்டு புதிதாகத் தொடங்குவதைக் குறிக்கிறது. மக்கள் இந்த நாளில் புதிய ஆடைகளை அணிந்து அந்த நெருப்பைச் சுற்றி கோஷமிடுகிறார்கள்.
மக்கள் தங்கள் வீட்டை சாமந்தி மாலைகள் மற்றும் மாவிலைகளால் அலங்கரிக்கின்றனர். இது அவர்களின் வீட்டில் நேர்மறை ஆற்றலை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது. விவசாய கழிவுகளையும் மக்கள் தீயில் எரிக்கிறார்கள். மக்கள் சூரியக் கடவுள் மற்றும் பூமித்தாய்க்கு சந்தனம் மற்றும் குங்குமத்தை இட்டு காணிக்கை செலுத்துகிறார்கள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion