மேலும் அறிய

Bike Taxi: தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு தடை இருக்கா? இல்லையா? - அமைச்சர் சொன்ன பதில்

பைக் டாக்சிகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளதால் தமிழகத்தில் பைக் டாக்சிகளாக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படாது.

பணிமனைகளை கணிணி மயமாக்கும் திட்டம் தொடக்கம்

சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறையில் கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை வழங்கி, அரசுப் பணிமனைகளை கணினி மயமாக்கும் செயல்பாட்டை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் 

பைக் டாக்சி குறித்து தமிழ்நாடு அரசு மட்டும் முடிவெடுக்க முடியாது, ஒன்றிய அரசுடன் இணைந்து தான் முடிவெடுக்க முடியும். ஒன்றிய அரசு இருசக்கர வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. எனவே அது இந்தியா முழுவதற்கும் பொருந்தும்.

ஆனாலும் நீதிமன்றங்களில் பைக் டாக்சிகளுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலவித கருத்துகள் கூறப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் சார்பில் உயர் அலுவலர்கள் மூலம் குழு அமைத்து பைக் டாக்சி தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம். 

பைக் டாக்சியில் பயணிப்போரின் பாதுகாப்பு முக்கியம். எனவே தான் பைக் டாக்சியை முழுமையாக தணிக்கை செய்ய சொல்லியுள்ளோம்.  வாடகை அல்லாத வாகனங்களில் ஒருவர் பயணிப்பது சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. சிறு விபத்து ஏற்பட்டாலும் நீதிமன்றத்தில் நிவாரணம் மறுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

பைக் டாக்சி மூலம் வேலை வாய்ப்பு

எனவே பைக் டாக்சிகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என ஆய்வு செய்து வருகிறோம். ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் பைக் டாக்சியை எதிர்க்கின்றனர். பைக் டாக்சி மூலம் லட்சக்கணக்கானோர் வேலை பெறுகின்றனர். ஆட்டோ ஓட்டுநர்கள் அதை தங்கள் தொழிலுக்கு ஆபத்தாக உணர்கின்றனர். ஒன்றிய அரசின் நடைமுறையையும், நீதிமன்ற உத்தரவையும் பின்பற்ற வேண்டிய தேவை எங்களுக்கு உள்ளது. எனவே ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டியுள்ளது. பைக் டாக்சியில் பயணிப்போர் விபத்தில் சிக்கினால் இன்சூரன்ஸ் பெறுவதில் வித்தியாசம் உள்ளது. 

ஒன்றிய அரசு அது குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கிறோம். வாகனத்தை பறிமுதல் செய்யும் நிலைக்கு தற்போது செல்லவில்லை, அபராதம் மட்டுமே விதிக்கிறோம். அனைத்து துறையிலும் காலச்சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் நடக்கின்றன. எனவே அதற்கேற்ப விதிகளை மாற்றும் தேவை இருக்கிறது.

பொதுமக்களை பாதிக்கக் கூடாது என்பதால் போக்குவரத்துத்துறை இழப்புகளை சந்தித்து வரும் நிலையிலும் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. 

தமிழகத்தில் ஒரு கி.மீ க்கு 52 காசு தான் பேருந்துப் பயணக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது . அருகில் உள்ள மாநிலங்களில் 1.10 காசு வரை  ஒரு கி.மீ  க்கு கட்டண வகிதமாக உள்ளது. போக்குவரத்து துறை ஒரு சேவைத்துறை , எனவே நட்டம் வருவது இயற்கை , ஆனால் அரசு அதை ஈடுசெய்து வருகிறது.

பேருந்து போக்குவரத்தால் தான் தமிழகத்தில் சமச்சீர் வளர்ச்சி இருக்கிறது. மகளிர் கட்டணமில்லா பயணத்திட்டமான விடியல் பயணத் திட்டத்திற்கான தொகை போக்குவரத்து துறைக்கு தமிழக அரசால் வழங்கப்படுகிறது. எனவே போக்குவரத்து துறை சிரமமின்றி செயல்படுகிறது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ஒன்றாம் தேதியே சம்பளம் கொடுக்க விடியல் பயணத் தொகையை தமிழக அரசு போக்குவரத்துத் துறைக்கு வழங்குவதே காரணம். பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாததே போக்குவரத்து துறை இழப்புக்கு முக்கியக் காரணம் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Google Search 2024: கதறிய கூகுள்- மாங்காய் ஊறுகாய், ஹனுமன், ஹர்திக் என தேடி திரிந்த இந்தியர்கள் - பிரதமர் மோடி எங்கப்பா?
Google Search 2024: கதறிய கூகுள்- மாங்காய் ஊறுகாய், ஹனுமன், ஹர்திக் என தேடி திரிந்த இந்தியர்கள் - பிரதமர் மோடி எங்கப்பா?
School Leave: மாணவர்களே..!  ரெட் அலெர்ட் - இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அரசு அதிரடி அறிவிப்பு
School Leave: மாணவர்களே..! ரெட் அலெர்ட் - இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அரசு அதிரடி அறிவிப்பு
Paracetamol: என்னயா சொல்றீங்க..! ”பாராசிட்டமால் தரமானதாக இல்லையா” மத்திய அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி
Paracetamol: என்னயா சொல்றீங்க..! ”பாராசிட்டமால் தரமானதாக இல்லையா” மத்திய அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி
TN Govt CAG Report: இதுதான் சமூகநீதியா முதல்வரே..! தவிக்கும் மக்கள், செலவழிக்கப்படாத ரூ.1,000 கோடி, பட்டியலினத்தின் வளர்ச்சி எங்கே?
TN Govt CAG Report: இதுதான் சமூகநீதியா முதல்வரே..! தவிக்கும் மக்கள், செலவழிக்கப்படாத ரூ.1,000 கோடி, பட்டியலினத்தின் வளர்ச்சி எங்கே?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Google Search 2024: கதறிய கூகுள்- மாங்காய் ஊறுகாய், ஹனுமன், ஹர்திக் என தேடி திரிந்த இந்தியர்கள் - பிரதமர் மோடி எங்கப்பா?
Google Search 2024: கதறிய கூகுள்- மாங்காய் ஊறுகாய், ஹனுமன், ஹர்திக் என தேடி திரிந்த இந்தியர்கள் - பிரதமர் மோடி எங்கப்பா?
School Leave: மாணவர்களே..!  ரெட் அலெர்ட் - இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அரசு அதிரடி அறிவிப்பு
School Leave: மாணவர்களே..! ரெட் அலெர்ட் - இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அரசு அதிரடி அறிவிப்பு
Paracetamol: என்னயா சொல்றீங்க..! ”பாராசிட்டமால் தரமானதாக இல்லையா” மத்திய அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி
Paracetamol: என்னயா சொல்றீங்க..! ”பாராசிட்டமால் தரமானதாக இல்லையா” மத்திய அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி
TN Govt CAG Report: இதுதான் சமூகநீதியா முதல்வரே..! தவிக்கும் மக்கள், செலவழிக்கப்படாத ரூ.1,000 கோடி, பட்டியலினத்தின் வளர்ச்சி எங்கே?
TN Govt CAG Report: இதுதான் சமூகநீதியா முதல்வரே..! தவிக்கும் மக்கள், செலவழிக்கப்படாத ரூ.1,000 கோடி, பட்டியலினத்தின் வளர்ச்சி எங்கே?
Ajith:  ”கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க” உங்க குடும்பத்தை கவனிங்க: அஜித் அறிக்கை.!
Ajith: ”கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க” உங்க குடும்பத்தை கவனிங்க: அஜித் அறிக்கை.!
TN CAG Report: அதிர்ச்சியளிக்கும் சிஏஜி அறிக்கை.! தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கடன் 3 மடங்கு அதிகரிப்பு
TN CAG Report: அதிர்ச்சியளிக்கும் சிஏஜி அறிக்கை.! தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கடன் 3 மடங்கு அதிகரிப்பு
வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி மரணம்.. ராணிப்பேட்டையில் பரபரப்பு!
வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி மரணம்.. ராணிப்பேட்டையில் பரபரப்பு!
TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
Embed widget