திமுக அரசு பணம் சம்பாதிக்க முடிவெடுத்த 2 துறைகள் இதுதான் - எச்.ராஜா
அமைச்சர் சேகர்பாபு விபூதி , குங்குமம் வைத்து கொண்டாலும் உள் மனதில் அவர் ஒரு கிருத்துவர்.
திருப்பதி லட்டில் மாமிச கொழுப்பு
சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள கமலாலயத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜா செய்தியாளர்கள் சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், கடந்த இரண்டு நாட்களாக திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் மிக புனிதமாக கருதுகின்ற கோவில் பிராசாதத்தில் பயன்படுத்தப்படும் நெய்யில் மிருக கொழுப்பு கலக்கபடுவதாக ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஜெகன் மோகன் ரெட்டி காலத்தில் ஹிந்து இல்லாத நபர்களை கோவில் நிர்வாகத்தில் அமைத்துள்ளனர். கோவில் நிர்வாகத்தில் ராஜசேகர் ரெட்டி அவர்களின் குடும்பத்தினர் ஹிந்து மக்கள் வாக்குக்காக தான் பொறுப்பில் இருக்கின்றனர் என்று கூறியுள்ளனர்.
உலக , இந்து மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சி காலத்தில் நடந்த செயல்கள் உள்ளது. இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள் ஆட்சியில் இருந்தால் ஹிந்து கோவில்களை பாதிக்கும், கோவில்கள் புனிதம் காக்க வேண்டும். இந்து மதம் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தான் பொறுப்பில் இருக்க வேண்டும்.
பொருட்களை வாங்க கூடாது
திண்டுக்கல் பகுதியில் ஏ.ஆர் புட்ஸ் என்ற நிறுவனம் தான் திருப்பதியில் இருக்கும் பிரசாதம் செய்ய பயன்படுத்தப்படும் நெய் வழங்கப்பட்டது வருகிறது , இந்த நிறுவனத்திலிருந்து எந்த கோவிலுக்கும் பொருட்கள் வாங்க கூடாது.
இத்தகைய நபர்களை கோவிலின் தர்க்காராக நீடிக்க வைக்க கூடாது இதில் திமுக அரசின் நிலை தெரிகிறது , இதை புகாராக சொன்னால் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மீது எப்.ஐ.ஆர் பதிவிடுகிரார்கள். நாட்டின் பிரதமரை பீஸ் பீசாக வெட்டுவேன் என்று ஒரு அமைச்சர் தாமே அன்பரசன் கூறி உள்ளார் அவர் மீது ஏன் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை ?
RSS பேரணி அனுமதி மறுப்பு
ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது , ஆனால் மாநில அரசு நீண்ட நாட்களாக அனுமதி மறுத்து வருகிறார்கள். தொடர்ந்து கண்டனங்களுக்கு உள்ளாகும் மாநில அரசு ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியது கண்டிக்கத்தக்கது.இந்த நடவடிக்கையை திருத்தி கொள்ள வேண்டும்.
கோவில்கள் மீது அவதூறு
பழனி கோவிலில் பல கோடி ரூபாய்க்கு முன்பாகவே உறுதியாக எந்த விதமான சேதாரமும் இல்லாத கோவில் சுவற்றை இடித்து மீண்டும் சரி இல்லாத சுவற்றை ஹிந்து சமைய அறநிலையத்துறை வீட்டிற்க்கு செலவு செய்யும் பணத்தை 40-50 சதவீதம் வீட்டுக்கு எடுத்து செல்ல முயற்ச்சி செய்கிறது.
தனியார் கோவில்கள் நன்றாக தான் இருக்கிறது, ஆனால் அவரின் மீது தமிழக அரசும் இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்து அவதூறு செலுத்தி வருகிறது.
திமுக நிர்வாகிகள் கொண்டுள்ள கோவில்களில் வருடத்தில் 1000 ஏக்கருக்கு 90 ஆயிரம் மட்டுமே கொடுக்கின்றனர். ஆண்டவனை சந்திக்க ஏன் கட்டணம் வழங்க வேண்டும் , அறநிலைய துறை நிர்வாகிகள் கடமை தவறியவர்கள் என பல நீதிபதிகள் கூறியுள்ளனர்.
எந்த விதமான கட்டணங்கள் இல்லாமல் உண்டியல் கூட இல்லாத கோவில்கள் மீது அவதூறுகளை பரப்பி வருகிறார்கள்.
திருப்பதி குற்றசாட்டில் விடுவிக்கும் வரை ஏ.ஆர் புட்ஸ் நிறுவனத்திடமிருந்து , முதல்வர் தமிழகத்திலிருந்து ஒரு கோவிலுக்கு கூட நெய் கொள்முதல் செய்யப்பட கூடாது.
அமைச்சர் தா.மோ அன்பரசன் கைது செய்ய வேண்டும்
முதலாக இந்த நாட்டின் இறையாண்மையை எதிர்த்து பேசும் அமைச்சர் தா.மோ அன்பரசன் கைது செய்ய வேண்டும் , அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் பாஜக நிர்வாகிகள் ஒருவர் மீது கூட எப்.ஐ.ஆர் பதிவு செய்ய கூடாது.
காவல் துறையில் கரை வேட்டி காட்டாமல் மட்டுமே உள்ளனர் , காவல்துறையினர் சீருடை சிவப்பு கருப்பாக மாறிவிட்டது என நான் நினைக்கிறேன்.
சேகர் பாபு ஒரு தொடர் பொய் பேசுபவர், ஒரு சொட்டு நிலம் கூட அறநிலையத்துறைக்கு சொந்தம் இல்லை, இருக்கும் நிலத்தினை மேம்படுத்த திமுக அரசுக்கு துப்பு இல்லை, திமுக அரசு பணம் சம்பாதிக்க முடிவெடுத்த இரண்டு துறைகள் ஒன்று டாஸ்மாக் மற்றொன்று கோவில்கள் ,
அல்லேலூயா சொன்ன அமைச்சர் சேகர்பாபு
எதற்கு அறங்காவலர்கள் , டி, சி மற்றும் ஜெ, ஸி ஆகியோருக்கு சம்பளம் தேவை ? தமிழக கோவில்களை சூரையடிக்க முயல்கிறது. உற்சாகம் வந்தவுடன் முருகனுக்கு அரோகரா என்று கூற மறுத்து அல்லேலூயா என்று கூறினார் அல்லேலூயா சேகர்பாபு.
சீமான் - இது போன்ற முட்டாள்கள்
லட்டில் மாட்டு கொழுப்பு இருந்தாலும் உண்ண உகந்தது தான் என சீமான் பேசியுள்ளார் என்று எழுப்பிய கேள்விக்கு ,
இது போன்ற முட்டாள்கள் , அவர் எப்போதுமே இது போன்று பேசி பழக்கம் உள்ளவர். " அப்பத்தாவுக்கு வரி , அம்பானிக்கு வரி இல்லை " என எவ்வளவு முட்டாள் தனமான Statement இது. பெட்ரோலியம் பொருட்களுக்கும் வரி இருக்கு. ஆனால் இவரின் விளக்கம் என்ன ? அந்த மாதிரி தான் இந்த லட்டு விவகாரமும்.
ஈ.வே.ரா வை பெரியவர் என்று கூறுபவர்கள் அனைவரும் முட்டாள்கள் என்று தான் நான் நினைக்கிறேன். அர்ச்சகர்களாக இருப்பவர்கள் மிகவும் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிரார்கள். சேகர்பாபு விபூதி குங்குமம் வைத்து கொண்டாலும் உள் மனதில் அவர் ஒரு கிருத்துவன்.
காங்கிரஸ் கட்சியில் தலைவராக வேறு யாருமே இல்லையா ?
காமராஜர் பற்றி முதலாக செல்வப்பெருந்தகை பேசக்கூடாது , காங்கிரஸ் கட்சியில் நபர்களே இல்லாதது போல் செல்வப் பெருந்தகை அவர்களை தலைவராக வைத்துள்ளனர். காங்கிரஸ் கட்சியினர் பலர் அவர்களுடைய துயரத்தை என்னிடம் கூறியுள்ளனர்.