மேலும் அறிய
Advertisement
”இனி எல்லாம் நலமே” : மீண்டு வந்த வியாபாரிகள்.. காஞ்சிபுரத்தில் மகிழ்ச்சியாக கொண்டாடப்படும் ஆயுத பூஜை..
காஞ்சிபுரம் பகுதியில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நவராத்திரி விழா:
நவராத்திரி விழா, செப்டம்பர் 25-ஆம் தேதி முதல் அக்டோபர் 3- ஆம் தேதி வரையிலான ஒன்பது நாட்கள் இவ்வருடத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களும் தெய்வத்தின் பெண் தன்மையை கொண்டாடும் விழாவாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்கள், உமா தேவியின் மூன்று குணங்களாக வகைப்படுத்தப்படுகிறது. முதல் மூன்று நாட்கள் தேவி உக்கிரமாக இருப்பார், அதாவது துர்கா காளி வடிவங்கள் போன்று காணப்படுவார். அடுத்த மூன்று நாட்கள் சாந்தமாக தேவி இருப்பார், அதாவது செல்வ வளத்திற்கு ஏற்றவராக லஷ்மி வடிவில் இருப்பார். அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதி வடிவில் இருப்பார், அதாவது ஞான வடிவில் இருப்பார்.
மீண்டும் கொண்டாட்டங்கள்
நவராத்திரி விழாவில் மிக முக்கிய விழாவாக ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடப்படும். குறிப்பாக ஆயுத பூஜையை அன்று சாதி மதம் பார்க்காமல் அவரவர் செய்யும் தொழில்களை மையமாக வைத்து பூஜை செய்வது, தங்களுக்கு உதவிகரமாக இருக்கும் ஆயுதங்களுக்கு பூஜை செய்வது உள்ளிட்டவற்றை பிரதானமாக இடம்பெற்றிருக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக வைரஸ் தோற்றின் காரணமாக பொருளாதார முடக்கம் ஏற்பட்டதால் ஆயுதபூஜை திருவிழாவை, விமரிசையாக கொண்டாடாமல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடந்து சென்றனர். இந்த தற்பொழுது வைரஸ் தொற்றிலிருந்து நாடு விடுபட்டுக்கொண்டு வரும் நிலையில், பொருளாதார சரிவிலிருந்து வியாபாரிகள் மீண்டு வருகின்றனர்.
இதனால் காஞ்சிபுரம் பகுதியில் பொருட்களை வாங்க பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். ஆயுத பூஜைக்கு பொறி, பூ, பழம் உள்ளிட்ட பொருட்களை வாங்க காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் பகுதி, பூக்கடை சத்திரம் பகுதி ஆகிய இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்துள்ளனர்.
வியாபாரிகள் மகிழ்ச்சி
ஆயுத பூஜை முன்னிட்டு கடந்த ஆண்டு விட பல மடங்கு உயர்ந்த பூக்களின் விலை. மல்லி, முல்லை ,சாமந்தி ஆகிய பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மல்லி பூவின் விலை கிலோ 700 முதல் 900 ரூபாய் வரை விற்கிறது. அதேபோல சாமந்திப் பூவின் விலையானது கடந்த வாரத்தை விட மும்மடங்கு அதிகரித்ததாக வியாபாரிகள் கூடுகின்றனர். தற்போது, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஒரே நேரத்தில் பூக்கடை சத்திரம் மற்றும் ராஜாஜி மார்க்கெட் பகுதியில் குவிந்த பொருட்களை வாங்குவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆயுத விழா நடைபெற்றதே தெரியாமல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக கொண்டாட்டங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. பூ பழம் மற்றும் கடைகளுக்கு தேவையான அலங்கார பொருட்கள் ஆகியவற்றை ஏராளமான வாங்கி செல்வதால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என தெரிவித்தனர்.
ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடைகளில் குவிந்து வருவதால் காஞ்சிபுரம் நகர போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்து வருகிறது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion