பெண் எஸ்.ஐ.,யை வசைபாடிய ஆட்டோ டிரைவர் ‛அரெஸ்ட்’
பெரம்பூர் பகுதியில் தனது ஆட்டோவை பறிமுதல் செய்த ஆத்திரத்தில், பெண் காவல் அதிகாரியை ஒருமையில் பேசிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரோனாவின் இரண்டாம் அலை இந்திய அளவில் மிகவும் வேகமாக பரவிவருகின்றது. தமிழகத்திலும் கொரோனாவின் இரண்டு அலை கோரத்தாண்டவம் ஆடிவருகின்றது. இந்நிலையில் தொற்றின் அளவை குறைக்க தமிழ்நாடு உள்பட பல மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கின் ஒரு பகுதியாக ஈபாஸ் திட்டம் கடந்த ஓர் ஆண்டாக அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பிற ஊர்களுக்கு செல்ல ஈ பாஸ் தேவைப்பட்ட நிலையில் தற்போது சில அதிக கட்டுப்பாடுகளால் உள்ளூருக்குள்ளும் சென்று வர வாகனங்களுக்கு ஈபாஸ் அவசிய என்று அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்று காலை முத்தியால்பேட்டை போலீசார் அந்த பகுதி சப்-இன்ஸ்பெக்டர் கிருத்திகா தலைமையில் பாரதி கல்லுரி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோக்காரரிடம் ஈபாஸ் வைத்துள்ளாரா என்ற சோதனையில் ஈடுபட்டுள்ளார் சப்-இன்ஸ்பெக்டர் கிருத்திகா. அப்போது அந்த ஆட்டோவின் ஓட்டுநர் ஆஸ்கர் அலி, தான் சமூகசேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஊனமுற்றோரை தனது ஆட்டோவில் ஏற்றி செல்வதாகவும் பல பதில்களை முன்னுக்குப்பின் முரணாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ஈ-பாஸ் உள்ளதா என்று கேட்ட பெண் காவல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் ஆட்டோ ஓட்டுநர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் போலீஸ் அதிகாரி கிருத்திகா ஆட்டோவின் சாவியின் எடுத்துள்ளார். இதனை கண்ட ஆட்டோ ஓட்டுநர் கிருத்திகாவை ஒருமையில் பேசி திட்டியுள்ளார். தான் மரியாதையுடனும் சட்டப்படியும் நடப்பதாக காவல் அதிகாரி கூற அவர் கையில் இருந்து ஆட்டோ சாவியை பறிக்க முயன்று தகராறு செய்தார் ஆஸ்கர் அலி. இதனை தொடர்ந்து சட்டப்படி ஆட்டோவை கிருத்திகா பறிமுதல் செய்ய அந்த இடத்தில் இருந்து ஆட்டோவை விட்டுட்டு சென்றுள்ளார் ஆஸ்கர் அலி. இந்த வீடியோ நேற்று வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரியை அவருடைய பணியை செய்ய விடாமல் தடுத்த குற்றம் உள்ளிட்ட 7 சட்ட பிரிவுகளில் ஆஸ்கர் அலி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
‛இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே...’ கலெக்டர் பெயரிலும் பேஸ்புக் பண மோசடி!
தமிழ்நாட்டில் தற்போது படிப்படியாகக் தொற்றின் அளவு குறைந்து வருகின்றது. நேற்று தொற்றின் அளவு 20 ஆயிரத்துக்கும் குறைவாகப் பதிவாகியுள்ளது. நேற்று, ஒரு லட்சத்துக்கு 60 ஆயிரத்து 385 பேரிடம் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 19ஆயிரத்து 448 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. முந்தைய சில நாள்களைப் போலவே, குணமானவர்களின் எண்ணிக்கை தொற்றுப்பதிவை விட அதிகமாகவே இருக்கிறது. கொரோனா பாதிப்பிலிருந்து நேற்று 31ஆயிரத்து 360 பேர் குணமாகியுள்ளனர். தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருந்தவர்களில் 351 பேர் உயிரிழந்தனர்.