மேலும் அறிய
Advertisement
செங்கல்பட்டு தடுப்பூசி மையம் செயல்படாததற்கு காரணம் என்ன..? - அன்புமணி அதிர்ச்சி தகவல்
செங்கல்பட்டில் பாட்டாளி மக்கள் கட்சி மூத்த முன்னோடிகளுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு
செங்கல்பட்டு மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளை சந்திப்பு கூட்டம், செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு மத்திய மற்றும் தெற்கு மாவட்ட கட்சி முன்னோடிகளுடன், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துரையாடி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இதனை அடுத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி செய்தியாளர்களை சந்தித்தபோது கூறுகையில், ”சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, 20 ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்ட சாலைகளில் பயன்பாட்டில் உள்ளது. நாளொன்றுக்கு 35 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே சென்ற சாலையில், இப்பொழுது 1 லட்சத்து 40 ஆயிரம் வாகனங்கள் நாள் ஒன்றுக்கு சென்று கொண்டிருக்கிறது. செங்கல்பட்டில் இருந்து திருச்சி வரை இருக்கும் சாலையை 8 வழி சாலையாக விரிவு படுத்த வேண்டும். இந்த சாலையில் அதிகளவு விபத்து ஏற்படுகிறது. கடந்த நான்காண்டுகளில் பல்வேறு சாலை விபத்துகளில் இந்த பகுதியில் மட்டும் 4000 பேர் உயிரிழந்துள்ளனர். வெளிநாடுகளில் இது போன்ற நிலைமை இருப்பது கிடையாது, குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தால் அதற்கான காரணம் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கும் சட்டம் அந்த நாட்டில் இருக்கிறது.
உள்ளூர் மக்களுக்கு வேலை
செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கி வரும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில், தமிழ்நாடு மக்களுக்கே வேலை வழங்குவது கிடையாது. இதுகுறித்து பாமக பலமுறை போராட்டம் நடத்தியுள்ளது. அதேபோல் அதிகளவு தொழில் நிறுவனங்கள் இந்த மாவட்டத்தில் உள்ளன. இங்க இருக்கும் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80% பேர் பணியாற்ற வேண்டும். அதிலும் குறிப்பாக 50 சதவீதம் பேர் உள்ளூர் மக்களாக இருக்க தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும். உள்ளூர் மக்களுக்கே வேலை என்ற சட்டம் ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ளது என்பதை மேற்கோள் காட்டினார்.
தடுப்பூசி மாஃபியா
செங்கல்பட்டில், தான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பொழுது, கட்டிய உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த தடுப்பூசி மையம், பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமலே இருக்கிறது. போதிய வசதிகள், போதிய விஞ்ஞானிகள் இருந்தும் அங்கு தடுப்பூசி தயாரிக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் என்ன, என கேள்வி எழுப்பினார். மேலும், கொரோனா தடுப்பூசி மட்டுமில்லாமல் அனைத்து வகையான தடுப்பூசிகளின் இங்கு தயாரிக்க முடியும். இந்த நிறுவனத்தில் தடுப்பூசி உருவாக்கும் பட்சத்தில், உலக அளவிலேயே தடுப்பூசியின் விலை குறையும். இந்த நிறுவனம் செயல்படாமல் இருப்பதற்கு பின்னணியில் தடுப்பூசி மாஃபியா உள்ளது. உடனடியாக இதை பயன்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டம் முழுவதும் போதை
செங்கல்பட்டு மாவட்டத்தில் போதை பொருள் மாணவர்களிடம் எளிதில் கிடைக்கிறது. கஞ்சா, ஸ்டாம்ப் உள்ளிட்ட போதை பொருட்கள் கிடைப்பதால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் போதையிலேயே செல்கின்றனர். முதலமைச்சர் போதை பொருட்களை தடை செய்ய ஒரு முறை கூட்டம் நடத்தினார். அதன் பிறகு 10 நாட்கள் வேலை செய்தார்கள். ஆனால் மீண்டும் போதை பொருள் விற்பனை நடைபெற்ற தான் வருகிறது. முதலமைச்சர் இதுகுறித்து மாதம் கூட்டம் நடத்தி, காவல்துறை அதிகாரிகளிடம் உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
விழுப்புரம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion