மேலும் அறிய

இந்த முடிவை உடனடியாக அரசு திரும்பப் பெற வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்

கால்பந்து திடல்களை தனியாரிடம் ஒப்படைப்பது விளையாட்டு வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும் - அன்புமணி ராமதாஸ்

கால்பந்து திடல்களை தனியாரிடம் ஒப்படைப்பது விளையாட்டு வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும் எனவும் இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...

சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

சென்னையில் சைதாப்பேட்டை, வியாசர்பாடி , திரு விக நகர் உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான  செயற்கை புல்தரை கால்பந்து விளையாட்டுத்  திடல்கள் தனியாருக்கு ஒப்படைக்கப்படும் என்றும், இனி அங்கு விளையாடச் செல்லும் இளைஞர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு 120 ரூபாய்  வீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

விளையாட்டுகளின் வீழ்ச்சிக்குத் தான் வழிவகுக்கும்

சென்னையில் மக்கள்தொகையுடன் ஒப்பிடும் போது விளையாட்டுத்  திடல்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு ஆகும். அவற்றின் எண்ணிக்கையை அதிகரித்து பொதுப் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் தான் விளையாட்டை வளர்க்க முடியும்.  விளையாட்டுத் திடல்களை தனியாரிடம் ஒப்படைத்து அங்கு விளையாடுவதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டால் ஏழை மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் விளையாட முடியாது. அது விளையாட்டுகளின் வீழ்ச்சிக்குத் தான் வழிவகுக்கும்.

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான டென்னிஸ் திடல்,  பேட்மிண்டன் திடல் , ஸ்கேட்டிங் மைதானம் , டேபிள் டென்னிஸ் மைதானங்கள் போன்றவற்றை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டதால், அங்கு சென்று விளையாடுவோரின் எண்ணிக்கை குறைந்து விட்டது. அதேபோன்ற நிலை கால்பந்துக்கும் ஏற்பட்டு விடக்கூடாது. எனவே,  தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்ட, ஒப்படைக்கப்படவுள்ள அனைத்து விளையாட்டுத் திடல்களையும் சென்னை மாநகராட்சியே  மீண்டும் எடுத்து நடத்த வேண்டும்.

அதேபோல், கல்வி, இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகளை  ஓரளவு குறைந்த வாடகையில் நடத்துவதற்கு இடமளித்து வந்த  தியாகராய நகர் சர்.பிட்டி தியாகராயர் அரங்கம்,   செனாய் நகர் அம்மா அரங்கம் ஆகியவற்றை தனியாருக்கு குத்தகைக்கு விட சென்னை மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதும் ஆபத்தானது. இந்த அரங்குகள் தனியாரிடம் சென்றால் சாதாரணமான அமைப்புகளால் இனி சென்னையில் நிகழ்ச்சி நடத்த முடியாத நிலை உருவாகி விடும். எனவே, இரு அரங்கங்களையும் தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவையும் மாநகராட்சி திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
Trump Vs Iran: ட்ரம்ப் மிரட்டலுக்கு பணிந்ததா ஈரான்.? பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
ட்ரம்ப் மிரட்டலுக்கு பணிந்ததா ஈரான்.? பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்ற கணவர்; புனேவில் சிக்கியது எப்படி?
மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்ற கணவர்; புனேவில் சிக்கியது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Admk Pmk Alliance: ”பாமகதான் வேணுமா?” எடப்பாடிக்கு பிரேமலதா செக்! திமுக கூட்டணியில் தேமுதிக?TVK Meeting : தவெக முதல் பொதுக்குழு கூட்டம்விஜய்யின் முக்கிய முடிவுகள்!ஆட்டத்தை தொடங்கிய ஆதவ்Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Coimbatore | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
Trump Vs Iran: ட்ரம்ப் மிரட்டலுக்கு பணிந்ததா ஈரான்.? பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
ட்ரம்ப் மிரட்டலுக்கு பணிந்ததா ஈரான்.? பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்ற கணவர்; புனேவில் சிக்கியது எப்படி?
மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்ற கணவர்; புனேவில் சிக்கியது எப்படி?
Myanmar Earthquake: மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: தரைமட்டமான கட்டடங்கள்! தலைதெறிக்க ஓடிய மக்கள்
Myanmar Earthquake: மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: தரைமட்டமான கட்டடங்கள்! தலைதெறிக்க ஓடிய மக்கள்
TVK: த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டம்; விஜய் என்ன பேசினார்? தீர்மானங்கள் - ஹைலைட்ஸ்!
TVK: த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டம்; விஜய் என்ன பேசினார்? தீர்மானங்கள் - ஹைலைட்ஸ்!
Udhayanidhi: ”டெல்லியில் 3 கார் ஏறிய எடப்பாடி” - விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு - DY CM உதயநிதி அறிவிப்பு
Udhayanidhi: ”டெல்லியில் 3 கார் ஏறிய எடப்பாடி” - விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு - DY CM உதயநிதி அறிவிப்பு
Karthigai Deepam: கண்டிஷன் போடும் கார்த்தி! கண்டுகொள்ளாத ரேவதி! வேண்டா வெறுப்பாக கல்யாணம்!
Karthigai Deepam: கண்டிஷன் போடும் கார்த்தி! கண்டுகொள்ளாத ரேவதி! வேண்டா வெறுப்பாக கல்யாணம்!
Embed widget