Metro: மெட்ரோவில் போறீங்களா சென்னை மக்களே...! வெளியான முக்கிய அறிவிப்பு
ஆலந்தூர் மெட்ரோவில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யும் பணி நடைபெறுவதால் மாற்றுப்பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள ஆலந்தூர் விமான நிலையம் மெட்ரோ வழிதடத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு சீர்செய்யும் நடைபெறவுள்ளது.
ஆகையால் இன்று இரவு சேவை பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம் செல்வோர் ஆலந்தூரில் இறங்கி, நீல வழித்தடத்தில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது சரி செய்யப்பட்டு, நாளை காலை ( மார்ச் 04 ) முதல் மீண்டும் வழக்கம் போல், சேவை தொடரும் எனவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
View this post on Instagram
கூடுதல் மற்றும் விரிவான தகவல்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளவும்
Press Release- 03-03-2023 pic.twitter.com/lyGlVtgwmx
— Chennai Metro Rail (@cmrlofficial) March 3, 2023






















