மேலும் அறிய
Advertisement
திமுகவில் முற்றிய கோஷ்டி பூசல்...!-மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரான அதிமுக வேட்பாளர்...!
திமுகவுக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதலால் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவருக்கான தேர்தலில் எதிர்பாராத விதமாக அதிமுகவைச் சேர்ந்த கீதா கார்த்திகேயன் வெற்றி பெற்றார்.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. இதில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வெற்றி பெற்றவர்கள் அந்தந்த மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. கடந்த புதன்கிழமை பதவியேற்ற ஊராட்சி பிரதிநிதிகள், இன்றைய தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் அந்தந்த மாவட்டங்களில் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மறைமுக தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்தல் தொடங்கியவுடன் உறுப்பினர்களின் பெயர்களை பதிவு செய்து கையெழுத்து பெற வேண்டும் என்றும், பெரும்பான்மைக்கும் குறைவான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வந்திருந்தால் தேர்தலை நடத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மறைமுகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. மதுராந்தகம் ஒன்றியத்தில் இன்று காலை தேர்தல் நடைபெறுவதற்கான அனைத்து வித ஆயத்தப் பணிகளும் நடைபெற்று கொண்டிருந்தது. மதுராந்தகத்தில் ஒன்றியத்தில் 22 வார்டுகள் உள்ளன. அவற்றில திமுக கூட்டணி 11 இடங்களில் வென்றிருந்தது. அதேபோல் அதிமுக கூட்டணி 8 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. சுயேச்சைகள் மூன்று பேர் வெற்றி பெற்றிருந்தனர். இதனால் இந்த ஒன்றியத்தை திமுக கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் நிறைய இருந்தது.
ஆனால் இன்று நடைபெற்ற தேர்தலில் திமுகவை சேர்ந்த பத்மபிரியா நந்தகோபால் மற்றும் ஒப்பிலால் சத்திய சாய் ஆகிய இரண்டு வேட்பாளர்களும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால் இரு தரப்புக்கு இடையே மோதல் வெடித்தது. இரண்டு தரப்பும் வார்த்தைகளால் மாறி மாறி திட்டிக் கொண்டுதால், சலசலப்பு ஏற்பட்டது. இதனால் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து மதுராந்தகம் ஒன்றிய தலைவர்கள் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் கீதா கார்த்திகேயன் மற்றும் திமுக சார்பில் ஒப்பிலால் மற்றும் பத்மாவதி ஆகியோர் போட்டியிட்டனர்.
நடைபெற்ற வாக்கெடுப்பின் போது, அதிமுகவை சேர்ந்த கீதா கார்த்திகேயன் 10 வாக்குகள் பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட ஒப்பிலால் திமுக 5 வாக்குகளும், பத்மபிரியா 7 வாக்குகளும் பெற்றனர். வெற்றி பெறுவதற்கு 50 சதவீத வாக்கு வேண்டும் என்ற விதி உள்ளதால் மறு தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுகவின் கீதா கார்த்தியேன் 15 வாக்குகளும், திமுகவின் பத்மபிரியா 7 வாக்குகளும் ஒப்பிலால் வாக்குகளும் 5 பெற்றனர். அதிமுகவுக்கு போடப்பட்டுள்ளது. இதனால் எதிர்பாராதவிதமாக அதிமுகவை சேர்ந்த வேட்பாளர் கீதா கார்த்திகையேன் ஒன்றிய குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் அதிமுகவினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். இதனால் மதுராந்தகம் ஒன்றியத்தை திமுக கவுன்சிலர்களின் ஆதரவுடன் அதிமுக கைப்பற்றியுள்ளது. திமுக கோஷ்டி பூசலால், அதிமுக கைப்பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion