AIADMK Protest: ”அதிமுகவினரும் சிறைக்கு சென்றனர்; ஆனால் விசாரணைக்கு யாரும் சிறுநீர் கழிக்கவில்லை” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து திமுக அரசை கண்டித்து சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திமுக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் அத்தியாவசிய பொருட்கள் விலை 70 விழுக்காடு வரை உயர்ந்து இருப்பதை கண்டித்தும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து திமுக அரசை கண்டித்து சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் மேடையில் சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், “ இன்றைய தினம் ஒரு எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் அண்ணன் எடப்பாடி தலைமையில் தமிழகம் முழுவதும் சட்ட ஒழுங்கு பாதிக்க பட்டு அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை ஆவதி பூங்காவாக திமுக விடியா அரசு மாற்றிவிட்டனர்
விலை வாசி உயர்வு வின்னை தொடும் வகையில் உள்ளது , தக்காளி சாதம் வீட்டில் யாராலும் பார்க்க முடியவில்லை , தக்காளி காய்ச்சல் வந்த நிலையில் தக்காளி ,இஞ்சி , வெள்ளம் , வெங்காயம் ஆகிய பொருட்களின் விலையை கேட்டால் காய்ச்சல் வருகிறது
ஒரு நாளுக்கு ஆயிரம் ரூபாய் செலவு செய்தால் தான் குடும்பத்தை ஒட்டும் நிலை இன்றைக்கு உள்ளது. விடிந்தவுடன் குடிக்க வைப்பது தான் இந்த விடியா அரசின் சாதனை , டாஸ்மாக்கில் விலை உயர்த்தியது இந்த விடியா அரசின் சாதனை. தமிழகத்தின் தலைநகரம் இன்றைக்கு கொலை நகரமாக மாறிவிட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் வீட்டு சாப்பாடு , தொலைக்காட்சி ஆகியவை அனைத்து உள்ளது , திமுகவினர் சிறைச்சாலையில் தான் அதிகமாக இருக்கின்றனர்.
அடுத்ததாக பொன்முடி மற்றும் அனிதா இராதாகிருஷ்ணன் சிறைக்கு செல்ல உள்ளனர். ஒரு குற்றவாளிக்கு தலைகாணி , வீட்டு உணவு, தொலைக்காட்சி ஏன் தேவை ? இதை நீதி அமைச்சகம் ஒரு சோதனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்தில் பாலாஜி வாயை திறக்க ஆரம்பித்து விட்டார். இதனால் பல நபர்களுக்கு வியர்வை வடிய தொடங்கி விட்டது. அதிமுகவினரும் சிறைக்கு சென்றனர். விசாரணை செய்யப்பட்டனர். ஆனால் விசாரணை என்று வந்தால் நாங்கள் யாரும் சிறுநீர் கழிக்கவில்லை.” என தெரிவித்தார்.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது, “விடியாத அரசு ஆட்சியில் விலைவாசி விண்ணை தொடுகின்றது, சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது. ஊழல் தலைவிரித்து ஆடுகின்றது
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு முழுவதும் கழகம் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் போராட்டம் எழுச்சியான முறையில் நடைபெற்றது. திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளில் எந்த தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை.
சென்னை கொலை நகரத்தின் தலைநகரமாக மாறிவிட்டது. சட்ட ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டு தமிழ்நாடு ஒரு அமளி பூங்காவாக மாறிவிட்டது திமுக அரசு தமிழக மக்களுக்கு கவனம் செலுத்தாமல் ஊழல் செய்வது எதிர்க்கட்சிகளை பழிவாங்குவது ஊடகங்களை பழி வாங்குவது என ஜனநாயகத்திற்கு விரோதமான செயலை தான் செய்து கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை வளர்ச்சி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் நெசவாளர்கள் விவசாயிகள் அரசாங்க ஊழியர்கள் என அத்தனை பேரும் வீதியில் நின்று போராடுகின்றனர். மு க ஸ்டாலின் ஒரு பொம்மை முதலமைச்சர் ஆக இருந்து கொண்டு அவருக்கு நாட்டில் என்ன நடக்கின்றது என்பதே தெரியவில்லை
தனது குடும்பம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றும் கோடி கோடியாக கொள்ளையடித்து ஆசியாவிலேயே தனது குடும்பம் தான் பணக்கார குடும்பமாக திகழ வேண்டும் என்றும் இவர் செய்யும் ஊழலினால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பரிதவிக்கின்றனர்
வீட்டு வரி தண்ணீர் வரி மற்றும் மின்சார வழி ஆகியவை கூட்டி மக்களின் நலன் பற்றி எங்களுக்கு கவலை இல்லை எனவும் எங்களுக்கு ஊழல் தான் முக்கியம் என்ன போலி ஆட்சி நடத்தி இன்னும் சிறிது காலத்தில் வீட்டுக்கு திரும்ப செல்ல உள்ளது திமுக அரசு. திமுக அரசின் அமைச்சர்கள் மருத்துவ தொகை என்றால் கூட மருத்துவமனையை எட்டிப் பார்க்காதவர்கள், தமிழ்நாட்டில் மருத்துவத்துறை மிக மோசமாக உள்ள நிலைமையில் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருக்கும்போது அனைத்து அமைச்சர்களும் சென்று கவனிப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பினர்