தீபாவளி ஆஃபர்: 3 நாள்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில்கள்... நெரிசல் நேரங்களில் 5 நிமிடங்களுக்கு குறைவான இடைவெளியில் சேவை!
நெரிசல் மிகு நேரங்களில் 5 நிமிடங்களுக்குக் குறைவான இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் வரும் 22ஆம் தேதி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நெரிசல்மிகு நேரங்களில் 5 நிமிடங்களுக்குக் குறைவான இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ”2022ஆம் ஆண்டு அக்டோபர் 20, 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் மாலை நெரிசல்மிகு நேரங்களில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள் நீட்டிக்கப்படுகின்றன.
View this post on Instagram
தீபாவளியை முன்னிட்டு, நெரிசல்மிகு நேரங்களில் மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவைகள், 2022ஆம் ஆண்டு அக்டோபர் 20, 21 மற்றும் 22ஆம் தேதிகளில் மட்டும் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், நெரிசல்மிகு நேரங்களில் கூடுதல் மெட்ரோ இரயில்கள் இயக்கப்பட்டு மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவைகள், மேற்குறிப்பிட்டுள்ள மூன்று நாட்கள் மட்டும், 5 நிமிடத்திற்கும் குறைவான இடைவெளியில் இயக்கப்படும்.
எனவே 2022 அக்டோபர் 20, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலான நெரிசல்மிகு நேரங்களில் பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட கூடுதல் மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நீட்டிப்பு சேவைகள் 20.10.2022 (வியாழன்), 21.10.2022 (வெள்ளிக்கிழமை) மற்றும் 22.10.2022 (சனிக்கிழமை) ஆகிய தேதிகளுக்கு மட்டுமே” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.