மேலும் அறிய
Advertisement
Abp Nadu Exclusive : மேல்மருவத்தூர் : நீர்நிலை ஆக்கிரமிப்பில் அடிகளார் குடும்ப திருமண மண்டபம்.. வெளியான ஆர்.டி.ஐ தகவல்
மேல்மருவத்தூரில் அடிகளார் திருமண மண்டபம், திருமதி அம்மா திருமண மண்டபம் ஏரியை ஆக்கிரமித்து உரிமம் பெறாமல் கட்டப்பட்டுள்ளது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்.
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் உள்ள அருள்திரு அடிகளார் மண்டபம் மற்றும் திருமதி அம்மா திருமண மண்டபம் நீர்நிலை பிடிப்பு பகுதியான ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது மற்றும் அதற்கான உரிமம் பெறப்படவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுகா, சோத்துப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி செய்யூர் பொது தகவல் அலுவலர் மற்றும் தலைமையிடத்து துணை வட்டாட்சியரிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேல்மருவத்தூரில் உள்ள அருள்திரு. அம்மா மற்றும் அடிகளார் மண்டபங்களில் கட்டிட உரிமம் சான்று, இயங்கியவரின் உரிமம் எண் மற்றும் உத்தரவு எண், கட்டட உரிமம் பெறப்பட்ட ஆண்டு, உரிமம் எண் புதுப்பிக்கப்பட்ட ஆண்டு குறித்து தகவல் கேட்டுள்ளார். அதற்கு மூன்றாம் தரப்பினருக்கு தகவல் வழங்க இயலாது என்று பிப்ரவரி 28 ஆம் தேதி பதில் அளித்துள்ளார் பொது தகவல் அலுவலர்.
அதன் பின்னர், மனுதாரர் ராஜா, தான் கேட்ட தகவலுக்கு முழுமையான தகவல்கள் வழங்கப்படவில்லை என்று 2019 ஆண்டு மார்ச் 29-ஆம் தேதி மற்றும் மே 20-ஆம் தேதி மாநில பொது தகவல் ஆணையத்திற்கு மேல்முறையீட்டுக்கு சென்று வழக்கு பதிவு செய்கிறார். அதன் பின்னர், மாநில பொது தகவல் ஆணையர் மனுதாரர் ராஜா, தனது தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 6 (1) கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில் கோரியுள்ள தகவலை வழங்க வேண்டும். தகவல்கள் வழங்காத பட்சத்தில் பொது தகவல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்பதை தமிழ்நாடு தகவல் ஆணையம் எச்சரித்து உத்தரவிடுகிறது.
அதன் பின்னர், செய்யூர் பொது தகவல் அலுவலர் மனுதாரர் ராஜாவிற்கு, மாநில பொது தகவல் ஆணையம் உத்தரவிட்ட பின்னர், மனுதாரர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். புல எண்: 13/2 ஆதிபராசக்தி அடிகளார் திருமண மண்டபம் கட்டப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. என் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. மொத்தமுள்ள 19 ஏர்ஸ் (47 சென்ட்) நிலத்தில் 15.29 ஏர்ஸ் (38 சென்ட்) அருள்மிகு ஆதிபராசக்தி அடிகளார் திருமண மண்டபம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. கட்டடத்திற்கு கட்டட உரிமம் பெறப்படவில்லை என்றும் இந்த இடம் ஏரி வகைப்பாடு சார்ந்தது என்று கிராம கணக்கில் பதிவாகி செய்யப்பட்டுள்ளது. அருள் திரு அடிகளார் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்திற்கான கட்டட வரைபடம் உரிமம் பெறப்படவில்லை என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி சம்பந்தப்பட்ட துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நீதிமன்றம் மேல்மருவத்தூர், சோத்துபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் இருக்கும் இடங்களைக் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கணக்கெடுத்து, அவற்றை பாரபட்சமில்லாமல் நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion