Chennai 2nd Airport: சென்னையில் 2-வது விமான நிலையம்: பரந்தூரா பன்னூரா? : மத்திய அரசு விளக்கம்..
Chennai 2nd Airport: சென்னைக்காக விரைவில் அமைய உள்ள 2-வது விமான நிலையம் எங்கு உருக்கப்பட உள்ளது என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
சென்னைக்காக விரைவில் அமைய உள்ள 2-வது விமான நிலையம் எங்கு உருக்கப்பட உள்ளது என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூருக்கு மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதித்ராதிய சிந்தியா அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
''சென்னையில் 2ஆவது விமான நிலையத்திற்காக மாநில அரசு பரிந்துரைத்த இடங்களில் பன்னூர், பரந்தூர் ஆகிய இரண்டு தளங்களை இந்திய விமான நிலைய ஆணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்துக்கு மாநில அரசு முதலில் சென்னையை அடுத்த குழு பன்னூர், பாரந்தூர், திருப்போரூர், படலம் ஆகிய நான்கு இடங்களைப் பரிந்துரைத்தது. அங்கு இந்திய விமான ஆணையத்தின் தொழில்நுட்பக் குழு தமிழ்நாடு அரசுடன் இணைந்து ஆய்வு செய்தது. கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை ஆய்வு நடைபெற்றது. தொடர்ந்து இங்கு விமான நிலையத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கையைத் தாக்கல் செய்தது.
இந்த சூழலில் இந்திய விமான ஆணையம் வான்வெளி மற்றும் இயற்கை அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டு பரந்தூர் அல்லது பன்னூரில் கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தை அமைக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. எனினும் ஏரிகள், புகையை வெளியிடும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட செயற்கைத் தடைகள் மேற்குறிப்பிட்ட இடங்களில் உள்ளன. இங்கு நில ஆய்வு மேற்கொண்ட பிறகு இறுதி முடிவு வெளியிடப்படும்.
இந்த ஆய்வை மேற்கொள்ள இந்திய விமான ஆணையம் இதுகுறித்த முன் சாத்தியக்கூறு அறிக்கையை, மாநில அரசுக்கு அனுப்பியுள்ளது''.
இவ்வாறு மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதித்ராதிய சிந்தியா தெரிவித்துள்ளார்.
பன்னூர்
சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி வட்டத்தில், பன்னூர் கிராமம் அமைந்துள்ளது. திருவள்ளூரையும் காஞ்சிபுரத்தையும் இணைக்கும் மாநில நெடுஞ்சாலையில் பன்னூர் அமைந்துள்ளது.
பரந்தூர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் வட்டாரத்தில் பரந்தூர் ஊராட்சி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்