அனுப்புனர் , பெறுநர் பெயர் இல்லாமல் சென்னைக்கு வந்த பார்சல் - அதிர்ந்த அதிகாரிகள்
அனுப்புனர் , பெறுநர் முகவரி இல்லாமல் டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த பார்சல்.
சென்னையில் தொடர்ச்சியாக கெட்டுப் போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு எழும்பூர் ரயில் நிலையத்தில் 1500 கிலோ கெட்டுப்போன ஆட்டு இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கடந்த பத்து நாட்களுக்கு முன்பு சைதாப்பேட்டை மார்க்கெட்டில் உள்ள ஆட்டிறைச்சி கடைகள் மற்றும் குடோனில் நடந்த சோதனையில் பாதுகாப்பற்ற முறைகளில் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த சுமார் 700 கிலோ ஆட்டுக்கால்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த வகையில் , சென்ட்ரல் பார்சல் அலுவலகம் முழுக்க கடும் துர்நாற்றம் வீசி உள்ளது. இதனை தொடர்ந்து உரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, வால்டாக் சாலையில் உள்ள சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய பார்சல் அலுவலகத்தில் டெல்லியில் இருந்து கொண்டு வரப்பட்ட 1500 கிலோ கெட்டுப்போன ஆட்டு இறைச்சியை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் தெரிவித்ததாவது ;
கெட்டுப் போன ஆட்டு இறைச்சி ஆட்டுக்கால் , கெட்டுப் போன காளான்கள் , போன்றவை பார்சல் ஆக வந்துள்ளது. அனைத்து பொருட்களும் புழு அடங்கி நிலையில் உள்ளது. கடந்த சனிக்கிழமை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலம் டெல்லியில் சென்னைக்கு கெட்டுப்போன இறைச்சி வந்திருக்கிறது. அதில் அனுப்புனர் பெறுநர் குறித்த எந்த விவரமும் இல்லை. இந்த ஆட்டு கெட்டுப் போய் வந்திருப்பதற்கு யாரு பொறுப்பேற்க வேண்டும் என்கிற செய்தியாளர்கள் கேள்விக்கு ?
ரயில்வே போலீசார் தான் இது தொடர்பாக கண்காணிக்க வேண்டும் என தெரிவித்தார்.
ரயில்வே துறையில் அலட்சியத்துடன் இருக்கிறார்களா ? என்கிற செய்தியாளர்கள் கேள்விக்கு ?
இது தொடர்பாக நாங்கள் ரயில்வே போலீசாரிடம் உரிய முறையில் பார்சல் அனுப்புமாறு வலியுறுத்தியுள்ளோம். என தெரிவித்தார்.
இறைச்சியை ரயிலில் கொண்டு செல்லும் பொழுது கால்நடைத்துறை மருத்துவரிடம் ஒப்புதல் தேர்தல் அவசியமா வேண்டும் எனினும் இதில் அவ்வாறு நடக்கவில்லை.
அனைத்து ஓட்டல்களும் இறைச்சியை வெளி மாநிலத்திலிருந்து வாங்குவது விட்டதாகவும், அடுத்ததாக தள்ளு வண்டி கடைகளுக்கு இது போன்ற கெட்டுப் போன இறைச்சி வாங்க கூடாது என்று அறிவுரை கூறி கெட்டுப்போன இறைச்சியை வாங்குவதை தவிர்க்கும் நடவடிக்கைகளை உணவு பாதுகாப்பு துறை எடுக்கும் என தெரிவித்தார்.