மேலும் அறிய
4 மாவட்டங்களில் அனல்காற்று வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டின் நான்கு மாவட்டங்களில் அனல்காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மாதிரி படம்
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வெப்பநிலை உயர்வால் திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் அனல்காற்று வீசக்கூடும். ஏனைய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையும் உயரக்கூடும். இதனால், பொதுமக்கள், விவசாயிகள் திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்’ என அறிவுறுத்தியுள்ளது.

மேலும், ‘வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக இன்று வடதமிழக உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
கிரிக்கெட்
வணிகம்





















