செங்கல்பட்டு: கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!
Chengalpattu School Leave: "செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது"

தொடர்ந்து மழை பெய்து வருவதால் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாளை (22-10-2025) மழை முன்னறிவிப்பு என்ன ?
தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், திருச்சிராப்பள்ளி, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் (23-10-2025) மழை முன்னறிவிப்பு என்ன ?
வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரி விடுமுறை - Chengalpattu District Leave
நாளை செங்கல்பட்டு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கனமழை காரணமாக (22.10. 2025) புதன்கிழமை அன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா உத்தரவிட்டுள்ளார்.





















