மேலும் அறிய

அட இப்படி கூட செய்யலாமா..? நூதன முறையில் போட்டி வைத்த நகரமன்றத் தலைவர்..

நகரமன்றத் தலைவர் எம்.கே.டி கார்த்திக் பொதுமக்களிடம் நூதன முறையில் விழிப்புணர்வு செய்வதற்காக சில போட்டிகளை அறிவித்துள்ளார்

ஒரு ஊர் அல்லது நகரத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தூய்மை பணியாளர்களின்  பங்கு மிக முக்கியமான ஒன்று.  தூய்மை பணியாளர்களின் சுமையை நாம் குறைக்க வேண்டும் என்றால், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையை பிரித்து தர வேண்டியது நம்முடைய கடமை ஆகும்.  அடுத்த தலைமுறைக்கு நாம் இந்த பூமியை,  மாசுபடுத்தாமல் விட்டுச் செல்வதற்கும் ,குப்பையை தரம் பிரித்து தருவது  மிக இன்றியமையாத ஒன்று.
 
இதுகுறித்து உலக அளவில் பல்வேறு  வகையில் விழிப்புணர்வுகள்   ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில்,  நூதன முறையில்  குப்பையை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது

அட இப்படி கூட செய்யலாமா..? நூதன முறையில் போட்டி வைத்த நகரமன்றத் தலைவர்..
 
நூதன முறையில் விழிப்புணர்வு போட்டி வைத்த நகரமன்றத் தலைவர்
 
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இந்தநிலையில் நகராட்சி முழுவதிலும் தூய்மையாக வைத்துக்கொள்ள பல்வேறு அறிவிப்பு பலகைகள் மற்றும் ஆங்காங்கே மக்கும் குப்பை , மக்காத குப்பை என இரண்டு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நகர மன்ற தலைவர்எம்.கே.டி கார்த்திக் பொதுமக்களிடம் நூதன முறையில் விழிப்புணர்வு செய்வதற்காக சில போட்டிகளை அறிவித்துள்ளார்.

அட இப்படி கூட செய்யலாமா..? நூதன முறையில் போட்டி வைத்த நகரமன்றத் தலைவர்..
 
சமூக வலைதளத்தில் விளம்பரம்
 
நம் நகரம் நம் தூய்மை என்ற தலைப்பில் உங்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு அதை என் whatsapp நம்பருக்கு அனுப்புங்கள் முதலில் வெற்றி பெறும் மூன்று நபர்களுக்கு சைக்கிள் வழங்கப்படும் எனவும், போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து பெண்களுக்கும் நிச்சயம்  பரிசு வழங்கப்படும் என அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் கூடுவாஞ்சேரியில் உள்ள 1500-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது வீட்டு வாசலில் கோலமிட்டு அதை நகர மன்ற தலைவர் எம்.கே.டி கார்த்திக் அவரது whatsapp எண்ணிற்கு அனுப்பி வைத்தனர்.

அட இப்படி கூட செய்யலாமா..? நூதன முறையில் போட்டி வைத்த நகரமன்றத் தலைவர்..
 
போட்டி போட்டுக் கொண்டு பரிசுகள் வாங்கிய ஊர் மக்கள்
 
இதில் வெற்றி பெற்ற முதல் மூன்று நபர்களுக்கு சைக்கிளும் ,அடுத்த மூன்று நபர்களுக்கு பட்டுப்புடவை வழங்கப்பட்டது. வீட்டிலும் போட்டியில் பங்கேற்ற 1716 பெண்களுக்கு  தலா  5 கிராம் வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட்டது. அதேபோல சிறுவர்கள் சிறுமிகளுக்கும் நம் நகரம் நம் தூய்மை என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடைபெற்றது.
 
அட இப்படி கூட செய்யலாமா..? நூதன முறையில் போட்டி வைத்த நகரமன்றத் தலைவர்..
 
இதில் வெற்றி பெற்ற முதல் 3 நபர்களுக்கு சைக்கிளும் வழங்கப்பட்டது. நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய நகர மன்ற தலைவர் எம்.கே.டி கார்த்திக் அவர்களுக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
கொடைக்கானலில் வேன் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்; திருமண நிகழ்விற்கு சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்
கொடைக்கானலில் வேன் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்; திருமண நிகழ்விற்கு சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்
Embed widget