Corona Updates : வெளியூர் செல்ல பேருந்து முன் பதிவு செய்யலாம்
தமிழ்நாட்டில் வரும் 10ஆம் தேதி காலை 4 மணி முதல் 24ஆம் தேதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Background
கடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் கொரோனா தொற்றால் 15 கோடியே 75 லட்சத்து 25 ஆயிரத்து 414 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 லட்சத்து 83 ஆயிரத்து 196 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13 கோடியே 47 லட்சத்து 79 ஆயிரத்து 45 உள்ளது. ஒரு கோடியே 94 லட்சத்து 63 ஆயிரத்து 173 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 600 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 2வது இடத்திலும் பிரேசில் 3வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
முழு ஊரங்கு காரணமாக மெட்ரோ ரயில் சேவை ரத்து
முழு ஊரடங்கு காரணமாக மே 10ம் தேதி காலை 4 மணி முதல் - மே 24ம் தேதி காலை 4 மணி வரை - மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
வெளியூர் செல்ல பேருந்து முன் பதிவு செய்யலாம்
சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கும் பொதுமக்கள், கடைசி நேர கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, www.tnstc.in இணையதளத்தில் மற்றும் tnstc official app ஆகியவற்றின் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் செயல்படும் முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்து கொள்ள வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.





















