’அமைதியாக ஓய்வெடுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன்’ - ராகவா லாரன்ஸ் ட்வீட்..
நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன் எனத் தெரிவித்திருக்கிறார் ராகவா லாரன்ஸ்..
தமிழ் திரைப்படங்களில் உழைக்கும் வர்க்க கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துவந்த தீப்பெட்டி கணேசன் என்று அழைக்கப்படும் நடிகர் கார்த்திக் உடல்நலக்குறைவால் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலமானார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ரேணிகுண்டா, பில்லா 2, நீர்ப்பறவை போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்த நடிகர்தான் தீப்பெட்டி கணேசன் என்னும் கார்த்திக். ஆனால் காலங்கள் நகர நகர அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து வந்தன. ஒரு கட்டத்தில் தனது இரண்டு குழந்தைகளில் பசியாற்றக்கூட பணமில்லாமல் தவித்து வந்தார் கார்த்திக்.
சகா நடிகர்கள் மற்றும் மக்களிடம் தனக்கு உதவுமாறு காணொளி ஒன்றை வெளியிட்டார் கார்த்திக். அதனை தொடர்ந்து ராகவா லாரன்ஸ், சினேகன் உள்ளிட்ட பல நடிகர்கள் உதவிக்கு வந்த நிலையில் ராகவா லாரன்ஸ் அவர்கள் கார்த்திக்கின் இரண்டு குழந்தைகளின் ஓர் ஆண்டு படிப்பு செலவை ஏற்றார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று காலமானார்.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Brother, I will take care of your children’s. Rest in peace 🙏 <a href="https://t.co/EaBsblZiMl" rel='nofollow'>pic.twitter.com/EaBsblZiMl</a></p>— Raghava Lawrence (@offl_Lawrence) <a href="https://twitter.com/offl_Lawrence/status/1373959348406251524?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>March 22, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
தற்போது அவருடைய மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தியையும் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் "நடிகர் தீப்பெட்டி கணேசன் இன்று காலை காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். இவ்வருடம் அவர்களின் பிள்ளைகளின் படிப்புச்செலவை நான் ஏற்றுக்கொண்டு செய்தேன், இனி வரும் காலத்திலும் என்னால் இயன்ற உதவியை அவருடைய பிள்ளைகளுக்கு செய்வேன்" என்று கூறி பதிவிட்டுள்ளார்.