செக்ஸுக்கு கேப் விட்டா இந்த பிரச்னையெல்லாம் வரும்! டாக்டர்ஸ் சொல்வது இதுதான்!
தனிமையில் இருப்பவர்களும், தங்கள் பார்ட்னர்களுடன் வசிப்பவர்களுக்குக்கும் கூட அவர்களுடைய செக்ஸ் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அலை அலையாக நகர்ந்து கொண்டிருக்கிறது கொரோனா தொற்றுநோய். அதன் மூன்றாவது அலையில் தற்போது அடியெடுத்து வைத்துள்ளோம். நீண்ட காலமாக லாக்டவுன் நடப்பதால், பிற கட்டுப்பாடுகளுக்கிடையே மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதும் மிகவும் கடினமாக உள்ளது. நிஜ வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் பார்ப்பதும் சந்திப்பதும் கிட்டத்தட்ட பிரிவிலேஜ்ஜாக மாறியுள்ளது. இந்தக் காலங்களில், தனிமையில் இருப்பவர்களுக்கு சமூக வாழ்க்கை என்பதே ஒட்டுமொத்தமாக காலியாகிவிட்டது எனப் பார்த்தால், இந்தப் பக்கம் தங்கள் பார்ட்னர்களுடன் வசிப்பவர்களுக்குக்கும் ஒன்னும் சொல்லிக்கொள்வது போல இல்லை. குறிப்பாக அவர்களுடைய செக்ஸ் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. டிண்டர் பம்பிள் ஸ்வைப் செய்வது வெறும் ஸ்வைப் செய்வதோடு மட்டுமே நின்றுவிட்டது டேட்டிங் எல்லாம் மறந்தே போய்விட்டனர் மக்கள். இப்படிச் சிறிதுகாலம் உங்களது பார்ட்னருடையே ஸ்பரிசமே பட்டிருக்காவிட்டால் என்ன ஆகும் என்பதை விளக்குகிறார்கள் நிபுணர்கள்.
மக்கள் நீண்ட காலத்திற்கு உடலுறவைத் தவிர்க்கும்போது, அவர்களின் லிபிடோ அளவில் தாக்கம் ஏற்படும் . நீங்கள் தவறாமல் உடலுறவு கொள்ளும்போது, நீங்கள் தொடர்ந்து செக்ஸுவலாக உணர்வீர்கள். அதேசமயம் செக்ஸிலிருந்து விலகியிருக்கும் காலங்களில், உங்கள் லிபிடோ குறைவதை நீங்கள் உணராமல் இருக்கலாம். இதை சரிசெய்ய என்ன செய்வது?. கவலை வேண்டாம், உங்கள் செக்ஸ் லைஃப் இயல்புநிலைக்குத் திரும்பும்போது லிபிடோவின் அளவு இயல்புநிலைக்குத் திரும்பும். எனவே நிரந்தரமாக பாதிக்கப்பட்டுவிடுவோமோ என்பது பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.
செக்ஸ் ஆக்ஸிடாஸின் மற்றும் செரோடோனின் போன்ற நல்ல ஹார்மோன்களை சுரக்க உதவுகிறது. இந்த ஹார்மோன்கள் மகிழ்ச்சியை ஊக்குவிக்கின்றன மற்றும் உங்கள் மனதின் சூழலை இது மேம்படுத்துகிறது. உடலுறவு குறையும் நிலையில் இந்த ஹார்மோன்களின் உற்பத்தியும் குறையத் தொடங்குகிறது, இதனால் ஹார்மோன்களின் அளவுகளில் மாற்றம் ஏற்பட்டு அது மனச்சோர்வு மற்றும் பதட்டத்தை உண்டுபன்னுகிறது. இருப்பினும், உச்சமடைவதற்கு செக்ஸ் மட்டுமே ஒரே வழியில்லை. நீங்கள் சுய இன்பம் செய்யும்போது கூட இந்த வகை ஹார்மோன்கள் சுரக்கத் தொடங்குகிறது. அது மீண்டும் மனநிலையை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
நீங்கள் உடலுறவில் ஈடுபடும் போது, பிறப்புறுப்பு ஈரப்பதமான நிலையில் இருக்கும், ஆனால் உடலுறவு இல்லாத காலங்களில் வறண்ட தன்மை உண்டாகிறது.அதனால் பாலியல் ரீதியாக நீங்கள் தூண்டப்பட மாட்டீர்கள், மேலும் உங்கள் பிறப்புறுப்பு வறண்டு அசௌகரியமாக சிலகாலம் உணரலாம். இந்த வறட்சி உங்களுக்கு உடல் ரீதியாக மனரீதியாகவும் சிக்கல்களை உண்டு செய்யும். அசௌகரியத்தைத் தவிர்க்க. உங்களுக்கான நேரத்தை ஒதுக்கி சுயஇன்பம் செய்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
Lip Lock : உதட்டில் முத்தம்.. காதலுக்கு மட்டுமில்ல.. இந்த விஷயங்களுக்கும் நல்லது..
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )





















