மேலும் அறிய

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வீடு கட்ட 4.50 லட்சம் உதவி - கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் தகவல்

வாரியத்தில் பதிவுபெற்ற தொழிலாளர்களுக்கு திருமண உதவி தொகை, பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறுக்கான உதவி தொகை, கல்வி உதவி தொகை உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தின் சார்பில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 3 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பொன்குமார் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் தலைமை வகிக்க, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் கட்டுமான தொழிலாளர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து வாரியத்தலைவர் பொன்குமார் இடம் நேரடியாக தெரிவித்தனர் அதற்கு உடனடியாக பிரச்சனைகள் தீர்வு காணப்படும் என தெரிவித்தார் மேலும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தலைவர் பொன்குமார் அவர்கள் தெரிவித்ததாவது… தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசானது கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பயன்பெறும் பொருட்டு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் அமைத்து நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசானது அமைப்புசாரா தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கென தனி வாரியம் ஏற்படுத்தி தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் மற்றும் இதர 16 நலவாரியங்கள் துவங்கியது.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வீடு கட்ட 4.50 லட்சம் உதவி - கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் தகவல்
திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நலவாரியம், தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் நலவாரியம், தமிழ்நாடு சலவைத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு முடி திருத்துவோர் நலவாரியம், தமிழ்நாடு தையல் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு கைவினை தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறிப்பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு காலணி, தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடும் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு ஓவியர் நலவாரியம், தமிழ்நாடு பொற்கொல்லர் நலவாரியம், தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு வீட்டுப் பணியாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு பாதையோர வணிகர்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு சமையல் தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தி தொழிலாளர்கள் நலவாரியம் என மொத்தம் 18 நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நலவாரியங்களில் 41,030 பதிவு பெற்ற உறுப்பினர்கள் உள்ளனர். தமிழக முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற நாள் முதல் தமிழக மக்களுக்காக தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். 

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வீடு கட்ட 4.50 லட்சம் உதவி - கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் தகவல்
அதிலும் குறிப்பாக தொழிலாளர்களுக்கு தேவையான திட்டங்களில் தனிகவனம் செலுத்தி வருகிறார்கள். அந்தவகையில், வாரியத்தில் பதிவுபெற்ற தொழிலாளர்களுக்கு திருமண உதவி தொகை, பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறுக்கான உதவி தொகை, கல்வி உதவி தொகை, ஓய்வூதியம், விபத்து மரணத்திற்கான உதவி தொகை, விபத்து ஊனம் அல்லது நிரந்தர ஊனத்திற்கான உதவி தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமசடங்கு உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், குடியிருப்பு வீடு இல்லாத பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்டுவதற்கு உதவி தொகையாக ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வரை அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் மூலமாக வழங்கப்படுகிறது. இன்றைய தினம், இயற்கை மரணம் அடைந்த உறுப்பினர்களின் வாரிசுதாரர்களான 6 நபர்களுக்கு இயற்கை மரண உதவிதொகை, 31 நபர்களுக்கு கல்வி உதவி தொகை, 15 நபர்களுக்கு ஓய்வூதியம், 3 நபர்களுக்கு திருமண உதவி தொகை, விபத்தின் காரணமாக மரணமடைந்த உறுப்பினரின் வாரிசுதாரர் ஒருவருக்கு விபத்து மரண உதவி தொகை என மொத்தம் 56 நபர்களுக்கு 3 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. தமிழக முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு தொடர்ந்து நலத்திட்டங்களை செயல்படுத்தி தொழிலாளர்களுக்கு உறுதுணையாக திகழ்ந்து வரும் என தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பொன்குமார் அவர்கள் தெரிவித்தார்.  
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
"பக்திமானா இருப்பார் போல" பெட்ரோல் பங்கில் சாமியை கும்பிட்டுவிட்டு ஆட்டைய போட்ட திருடர்!
"அவங்களுக்கு தகுதி இருக்கு" மம்தா தலைமையில் இந்தியா கூட்டணி? பயங்கர வியூகமா இருக்கே!
Vijay - Seeman:
Vijay - Seeman: "திருமாதான் வேண்டும்" சீமானை கண்டுகொள்ளாத விஜய்! அப்செட்டில் அண்ணன்!
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
Embed widget