மேலும் அறிய

Headlines December 09: நண்பகல் 12 மணி தலைப்புச் செய்திகள்! இதுவரை உங்களைச் சுற்றி நடந்தது இதுதான்..!

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • மாண்டஸ் புயல் சென்னையில் இருந்து 260 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளதாக வானிலை மையம் தகவல்
  • தீவிர புயலாக இருந்த மாண்டஸ் புயல் தற்போது வலு குறைந்து புயலாக மாறியுள்ளதாக வானிலை மையம் தகவல்
  • மாண்டஸ் புயல் காரணமாக 27 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக மாறியது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
  • கனமழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் முதல் கட்டமாக 100 கன அடி நீர் திறக்கபடவுள்ளது. 
  • கனமழை எச்சரிக்கை காரணமாக, இன்று நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா, சென்னை, அம்பேதகர் சட்ட பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளது. 
  • சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இரவு நேரங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படாது என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. 
  • மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என வானிலை மையம் தகவல்
  • மதுரையில் இன்று தூய்மைப்பணியாளர் மேம்பாட்டு திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 
  • இன்று இரவு ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

இந்தியா:

  • மக்கள் சக்திக்கு தலைவணங்குகிறேன் என குஜராத் வெற்றி குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
  • இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் 40 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
  • வட்கம் தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக  ஜிக்னேஷ் மேவானி வெற்றிபெற்றுள்ளார்.
  • குஜராத் மாநில முதலமைச்சராக பூபேந்திர படேல் வருகின்ற டிசம்பர் 12ம் தேதி பதவி ஏற்கிறார்.
  • போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 6 இந்தியர்களில் நிர்மலா சீதாராமனும் இடம்பிடித்துள்ளார்.
  • பிரதமர் மோடி மீது குஜராத் மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் - மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்
  • விளையாட்டுத்துறையில் சாதி ஆதிக்கம் உள்ளதை களைய வேண்டும் என மக்களவையில் கனிமொழி எம்.பி பேச்சு.  
  • தலைநகர் டெல்லியில் சூட்கேசில் அழுகிய நிலையில் பெண்ணின் பிணம் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏறபட்டுள்ளது. 

உலகம்:

  • உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார் எலான் மஸ்க்.
  • பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி; துறைமுகத்தில் ரூ. 44.47 கோடி இறக்குமதி பொருட்கள் தேக்கம்
  • இந்தோனேசியாவில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5 ஆக பதிவு
  • உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62.77 கோடியாக உயர்ந்துள்ளது.
  • இலங்கையில் கொரோனா கட்டுப்பாடுகள் கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
  • சீனாவில் ஒரே நாளில் புதிதாக 25,321 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

வணிகம்

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து  ரூ. 40,376 ஆக விற்பனையாகிறது.  22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.24 உயர்ந்து  ரூ.5,047 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 43,592 ரூபாயாகவும், ஒரு கிராம் ரூ.5,449  ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்:

சென்னையில் வெள்ளி விலை 1.20 காசுகள் உயர்ந்து ரூ.72.50 ஆக விற்பனையாகிறது.  பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.72,500ஆக விற்பனையாகிறது

விளையாட்டு:

  • அறுவை சிகிச்சையின்போது ஒருவர் உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடரை பார்த்து ரசித்த சுவாரசிய சம்பவம் போலந்தில் நடைபெற்றுள்ளது.
  •  வங்கதேசத்திற்கு எதிராக மூன்றாவது சிக்ஸரை அடித்ததன்மூலம், ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார்.
  • ஃபிபா உலகக்கோப்பை கால்பந்தில் கால் இறுதிப் போட்டி இன்று முதல் நடக்கவுள்ளது.
  • இந்தியா - வங்காளதேசத்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி நாளை நடக்கவுள்ளது. 
  • இந்திய கிரிக்கெட் அணி அடுத்த 3 மாதங்களுக்கு அடுத்தடுத்து பங்கேற்க உள்ள,  கிரிக்கெட் தொடர்களுக்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Embed widget