Test Review : நயன்தாரா , மாதவன் , சித்தார்த் நடித்துள்ள டெஸ்ட் எப்டி இருக்கு...முழு விமர்சனம் இதோ
Test Movie Review in Tamil : நயன்தாரா , மாதவன் , சித்தார்த் நடித்து ஓடிடியில் வெளியாகியுள்ள டெஸ்ட் படத்தின் முழு விமர்சனத்தை பார்க்கலாம்
S. Sashikanth
Madhavan , Nayanthara , Siddharth
டெஸ்ட்
எஸ்.சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா , மாதவன் , சித்தார்த் ஆகியோ நடித்துள்ள படம் டெஸ்ட். ஏப்ரல் 4 ஆம் தேதி இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. சக்திஶ்ரீ கோபாலன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விளையாட்டு சூதாட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் முழு விமர்சனம் இதோ
டெஸ்ட் கதை
இந்திய கிரிக்கெட் வீரரான அர்ஜூன் (சித்தார்த்) மிக மோசமான ஃபார்மில் இருக்கிறார். ஒரு காலத்தில் ஒட்டுமொத்த நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டவர் தற்போது ரிடையர் ஆவாரா என்று பலர் எதிர்பார்க்கிறார்கள். இன்னொரு பக்கம் அங்கீகாரத்திற்காக போராடும் சைண்டிஸ்ட் சரவணன். எம்.ஐ.டியில் கோல்டு மெடல் வாங்கிவிட்டு தண்ணீரில் இருந்து எரிவாயு எடுக்கும் தனது திட்டத்தை எப்படியாவது நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று போராடுகிறார். சரவணனின் மனைவி குமுதா (நயன்தாரா) பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். ஒரு குழந்தை பெற்றுக் கொண்டு அண்ணை என்கிற உணர்வை உணர தவிக்கிறார்.
கிரிக்கெட் விளையாட்டின் ஜாம்பவானாக இருந்த அர்ஜூன் தனது வீழ்ச்சியை ஏற்றுக் கொள்ள மறுக்கிறான். அர்ஜூனின் மகன் தனது தந்தையின் கவனத்திற்காக ஏங்குகிறான். ஆனால் அர்ஜூன் முழு நேரமும் தனது விளையாட்டின் மீதே கவனம் செலுத்துகிறான். சரவணனும் குமுதாவும் ஒருவரை ஒருவர் அதிகமாக நேசிக்கிறார்கள். தனது கண்டுபிடிப்பிற்கு அரசு ஒப்புதல் வாங்க நினைக்கும் சரவணன் குமுதாவிற்கு தெரியாமல் கடன் பிரச்சனையில் மாட்டியிருக்கிறார். இன்னொரு பக்கம் குமுதா குழந்தை பெற்றுக் கொள்ள செயற்கை கருத்தரிப்பு மையத்திற்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்.
வாழ்க்கையே ஒரு டெஸ்ட் தான். பிடிக்கிறதோ இல்லையோ களத்தில் இறங்கிதான் ஆக வேண்டும். எல்லா விதங்களிலும் அது நம்மை சோதிக்கும் என்கிற வசனத்தோடு தொடங்குகிறது படம். இந்த மூன்று கதாபாத்திரங்களின் வாழ்க்கையிலும் அந்த பலபரீட்சை வருகிறது. அவர்கள் இந்த பரீட்சையில் வெற்றி பெற்றார்களா? தோல்வி ஒரு மனிதனை எந்த எல்லைவரை செய்ய வைக்கும் என்பதே டெஸ்ட் படத்தின் கதை.
டெஸ்ட் பட விமர்சனம்
திருப்பு முனைகளையோ , விறுவிறுப்பையோ சாந்திருக்காமல் முழுக்க முழுக்க உணர்வுகளை சார்ந்தே நகரும் படம் டெஸ்ட். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு மையப் பிரச்சனை இருக்கிறது. இந்த கதாபாத்திரங்களை வைத்து சில ஆழமான கேள்விகளையும் எழுப்புகிறார்கள். ஆனால் கதாபாத்திரங்களோடு உணர்வு ரீதியாக ஒன்ற முடியாததே டெஸ்ட் படத்தின் பெரிய மைனஸ். இந்த கதாபாத்திரம் இந்த பிரச்சனையில் இருக்கிறது என்பதை ஒரு ஐடியாவாக புரிந்துகொள்ள முடிகிறதே தவிர அந்த கதாபாத்திரத்தின் மன நிலையில் நம்மை பெரிதாக பாதிப்பதில்லை.
மாதவன் , நயன்தாரா , சித்தார்த் மூவரும் தங்கள் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்கள். சித்தார்த்தின் மனைவியாக வரும் மீரா ஜாஸ்மின் சிறப்பாக நடித்திருந்தாலும் அவரது கதாபாத்திரத்திற்கு ஒரே வரியில் பேக்ஸ்டோரி சொல்லி முடிக்கிறார்கள். சக்தி ஶ்ரீ கோபாலனின் இசை காட்சிகளை நெருடாமல் இயல்பாக உள்ளது.





















