Vanangaan Review: திரும்பி வந்தாரா பழைய பாலா? வணங்கான் முழு விமர்சனம் இதோ
Vanangaan Review Tamil: பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் படத்தின் முழு விமர்சனத்தை இதில் காண்போம்
Bala
Arun Vijay, Samuthirkani, Roshini Prakash, Mysskin
இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு வெளியாகியுள்ள வணங்கான் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் காண்போம்.
பாலாவின் வணங்கான்:
சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாலா பிதாமகன் , நந்தா , நான் கடவுள் , பரதேசி , அவன் இவன் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி பாதையை உருவாக்கிய இயக்குநர்களுள் இவரும் ஒருவர். பாலா திரையுலகத்திற்குள் அடி எடுத்து வைத்து 25 ஆண்டுகள் கடந்துள்ளது. தற்போது அருண் விஜய் நடிப்பில் பாலா இயக்கியுள்ள படம் வணங்கான். ரோஷினி நாயகியாகவும் , மிஸ்கின் , சமுத்திரகனி உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
படத்தின் கதை:
கன்னியாகுமரியில் ஒரு ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் வேலை செய்து வருகிறார் அருண் விஜய், அருண் விஜயால் வாய் பேசவும் காதும் கேட்க முடியாத இளைஞராக வருகிறார். அவரது தங்கையின் மீது பாசம் வைத்திருக்கும் அண்ணன் கதாப்பாத்திரம்.
இதையும் படிங்க: Vanangaan Released: முடிவுக்கு வந்த கேடிஎம் பிரச்சனை... திரையரங்குகளில் வெளியானது வணங்கான்
அந்த காப்பகத்தில் பெண்கள் குளிப்பதை மூவர் திருட்டுத்தனமாக பார்க்க ஹீரோ அருண் விஜய் கொலை செய்து போலீஸ்சில் சரணடைகிறார்.காவல்துறையினரின் விசாரணையில் உண்மையை சொன்னாரா? மூன்றாவது நபரை கொன்றாரா என்பதை தனது பாணியில் சஸ்பென்ஸ் உடன் சொல்லியிருப்பது தான் படத்தின் மீதி கதை.
நடிப்பு எப்படி?
வாய் பேசவும் காது கேட்காத இளைஞராக நடிப்பில் முத்திரை பதித்துள்ளார் அருண் விஜய், அவரது கதாப்பாத்திரம் பிதாமகன் விக்ரம் சாயலில் அமைத்துள்ளார் இயக்குனர் பாலா. தங்கையுடனான காட்சிகளிலும் சரி, நாயகி ரோஷினி உடனான காட்சிகளிலும் சரி அருண் விஜய் அப்லாஸ் அள்ளுகிறார்.
அடுத்தப்படியாக அவருடைய தங்கை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ரிதாவும், நாயகி ரோஷிணியும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
இயக்குனர் மிஷ்கின் நேர்மையுள்ள நீதிபதியாகவும், கம்பீரமான காவல்துறை அதிகாரியாகவும் சமுத்திரக்கனி தங்கள் கதாப்பாத்திரத்தை சரியாக நடித்துள்ளனர்.
பிளஸ் & மைனஸ்:
படங்களுக்கு உரிய சில வன்முறை காட்சிகள் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளது, அற்புதமான கதைக்களத்தை தயார் இயக்குனர் பாலா, அதை திரைக்கதையாக கொண்டுவருவதில் சற்று தடுமாறியிருக்கிறார், இரண்டாம் பாதியில் சில காட்சிகளுக்கு இன்னும் பாலாவின் பேனா வேலை செய்திருந்தால் அந்த காட்சிகளின் வீரியம் நம்மை இன்னும் பாதித்திருக்கும். அதே போல ஜி.வி பிரகாஷின் பாடல்கள் சுமாராக இருந்தது. ஆனால் சாம் சி.எஸ்-ன் பின்னணி இசை படத்திற்கு பலத்தை சேர்க்கிறது.
மொத்ததில் இந்த வணங்கான் இயக்குனர் பாலாவின் கம்பேக் இல்லை என்றாலும், அருண் விஜய் நடிப்பு படம் சொல்ல வரும் கருத்துக்காக நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.