![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Yoga For Mental Health: மனநலத்தை பாதுகாக்கும் 5 யோகாசனங்கள் இதோ....
நிறைவான வாழ்க்கையை வாழ வேண்டுமானால், நமது மன ஆரோக்கியத்தைப் பேண வேண்டும், என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த 5 பயனுள்ள யோகா ஆசனங்களை இங்கே.
![Yoga For Mental Health: மனநலத்தை பாதுகாக்கும் 5 யோகாசனங்கள் இதோ.... Yoga Day 2023 Yoga asanas poses for improving your mental health Yoga For Mental Health: மனநலத்தை பாதுகாக்கும் 5 யோகாசனங்கள் இதோ....](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/21/e7d51b71e253e9f09d4412503f490db21687336046349109_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நம் உடல்நலம் மனநலத்தின் பிரதிபலிப்பு என்பது பல அறிஞர்கள் கூறும் உண்மை. ஆனால் மன ஆரோக்கியத்தை நாம் உடல் ஆரோக்கியம் அளவுக்கு கவனிப்பதில்லை. ஏனெனில் அதன் விளைவுகளை நாம் அறிவதில்லை. மோசமான மனநலத்தால் அவதிப்படும் போது நாம் நிறைய விஷயங்களை இழக்கிறோம். நம்மிடம் இருப்பதை வைத்து நிறைவடைய முடியாமல் போவது நமது மனநல பிரச்சினையின் முதல் படி. உடற்பயிற்சி நிபுணர்களின் கூற்றுப்படி, மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு காலை அல்லது மாலையில் செய்யக்கூடிய சில யோகாசனங்கள் உள்ளன. நிறைவான வாழ்க்கையை வாழ வேண்டுமானால், நமது மன ஆரோக்கியத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தை நாம் அங்கீகரிக்க வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த 5 பயனுள்ள யோகா ஆசனங்களை இங்கே:
- சுகாசனம்
உள்ளங்கைகளை முழங்கால்களில் வைத்து, சித்த முத்திரையை உருவாக்கி, இரண்டு கால்களையும் நீட்டி தண்டாசனத்தில் நேராக உட்காரவும். இடது காலை மடக்கி வலது தொடையின் உள்ளே வையுங்கள், பின்னர் வலது காலை மடக்கி இடது தொடையின் உள்ளே வையுங்கள். அப்படியே மூச்சு பயிற்சி செய்வது மன அமைதியையும், மகிழ்வையும் உருவாக்கும்.
- பகாசனம்
கைகள் இரண்டையும் தரையில் சமமாக வைத்து, மெதுவாக உடலை சாய்த்து, எடையை கைகள் மேல் கொடுக்கவும். பின்னர் மெதுவாக கால்களை பினால் உயர்த்தி, ஒட்டுமொத்த எடையையும் கைகளில் கொடுத்து அப்படியே நிற்கவும். உங்கள் கால்களை ஒன்றாக இணைத்து, உங்களால் முடிந்தவரை உங்கள் கைகளை நேராக வைத்து, ஒரு இடத்தில் கவனம் செலுத்தி, இந்த ஆசனத்தை சிறிது நேரம் பிடித்து வைக்கவும்.
- பாசிமோத்தனாசனம்
தண்டாசனாவை அனுமானித்து தொடங்கி, கால்களை முன்னால் நீட்டி முதுகெலும்பை நேராக வைத்து, கைகளை மேல்நோக்கி உயர்த்தவும். மூச்சை வெளியேற்றி, அப்படியே உடலை தொடை மேல் சாய்த்து முழுமையாக மடித்து படுக்கவும். உங்கள் மூக்கால் உங்கள் முழங்கால்களைத் தொட முயற்சிக்கவும். இந்த நிலையை 30 விநாடிகள் வைத்திருங்கள்.
- சக்ராசனம்
மலர்ந்து படுத்துக் கொள்ளுங்கள். உங்கள் கால்கள் தரையில் உறுதியாக பதிக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்து கொண்டு, கைகளை தலைக்கு பின் வைத்து அழுத்தவும். ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து, உங்கள் கால்கள் மற்றும் உள்ளங்கைகளுக்கு அழுத்தம் கொடுத்து, உடலை வில் போல வளைத்து மேலே எழுப்பவும். முதுகெலும்பு வளைந்து உடல் முழுவதும் மேலே இருக்கவேண்டும். கைகளும், கால்களும் மட்டும் சமமாக உடல் எடையை தாங்க வேண்டும். 15 முதல் 20 விநாடிகள் இந்த நிலையில் இருக்க வேண்டும்.
- பாலாசனா
பாயில் மண்டியிட்டு குதிகால்களின் மேல் அமரவும். மூச்சை உள்ளிழுத்து, கைகளை உங்கள் தலைக்கு மேல் உயர்த்தவும். மூச்சை வெளியே விட்டு உங்கள் மேல் உடலை முன்னோக்கி வளைத்து, நெற்றியை தரையில் வைக்கவும். இப்போது முதுகு வட்டமாக இருக்க வேண்டும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)