World Radiography Day 2023: இன்று உலக கதிரியக்க நாள்: எதற்கு கொண்டாடப்படுகிறது? முக்கியத்துவம் என்ன?
ஸ்கேன், எக்ஸ்ரே எடுப்பது, ஒரு ரேடியோகிராஃபரின் பங்கு என அனைத்து குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளில் நோக்கமாகும்.
World Radiography Day 2023: ஸ்கேன், எக்ஸ்ரே எடுப்பது, ஒரு ரேடியோகிராஃபரின் பங்கு என அனைத்து குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளில் நோக்கமாகும்.
உலக கதிரியக்க தினம்:
இன்றைய மருத்துவ உலகத்தில் நோயின் தன்மையை அறிய பெரிதும் பயன்படக் கூடியது x-RAY. புற்றுநோய்க்கான சிகிச்சையிலும் இந்த கதிர்கள் பெரிதும் பயன்படுகின்றன. மருத்துவ பரிசோதனைகள் வரிசையில் எக்ஸ் கதிர்களின் கண்டுபிடிப்பு முக்கியமான திருப்பு முனையாக உள்ளது. ஜெர்மனியைச் சேந்த விஞ்ஞானி வில்ஹெல்ம் கான்ராட் 1895ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இந்த கதிர்களை கண்டிபிடித்தார். பல ஆராய்ச்சிகளை செய்து கொண்டிருந்த இவர், அப்போது உருவான எதிர்மின் கதிர்களால் அருகே இருந்த ஃபெரினோ பிளாட்டினோ சயனைடு பூசப்பட்டிருந்த அட்டையானது ஒளிர்வதைக் கண்டுபிடித்தார்.
அதைத் தொடர்ந்து, இருட்டு அறையிலும் பல சோதனைகளை செய்து பார்த்தபோது, இந்த ஒளிர்தலுக்கு கண்ணுக்கு தெரியாத கதிர்கள் தான் காரணம் என்று கண்டுபிடித்தார். ஆனாலும் அதன் பண்புகள் பற்றி தெரியாததால் எக்ஸ் கதிர்கள் என்று பெயர் வைத்தார். இந்த x-RAY கண்டுபிடிப்பிற்காக 1901ல் உலகின் இயற்பிலுக்கான முதல் நோபல் பரிசு வில்ஹெல்ம் கான்ராட்டுக்கு வழங்கப்பட்டது.
முக்கியத்துவம்:
இந்த நாளே உலக கதிரியிக்க தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஐரோப்பியன் ரேடியாலஜி சொசைட்டி, வட அமெரிக்க ரேடியாலஜிக்கல் சொசைட்டி, அமெரிக்க ரேடியாலஜி கல்லூரி உட்பட பல்வேறு நிறுவனங்கள் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறது. மனிதர்களின் உடல்கள் மற்றும் விலக்குகளின் உள் உறுப்புகளில் இருக்கும் பிரச்னைகளை கண்டிபிடித்து அதற்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்துவது தான் x ray. ஒரு நோயை கண்டுபிடிப்பதற்கும், ஒரு நோய்க்கும் சிகிச்சை அளிப்பதற்கும் பல்வேறு வகை படங்கள் தொழில்நுட்பங்கள் மூலம் எடுக்கப்படுகிறது. இதில் பல வகைகள் உள்ளன.
கருப்பொருள்:
அதன்படி, கம்ப்யூடம் டோமோகிராஃபி (CT Scan), மேக்னடிக் ரெசோனென்ஸ் இமேஜிங் (MRI), எக்ஸ்ரே ரேடியோகிராஃபி, பொசிட்ரோன் எமிசன் டோமோகிராஃபி, ஃப்ளுரோஸ்கோப்பி ஆகியவை ஆகும். ஸ்கேன், எக்ஸ்ரே எடுப்பது, ஒரு ரேடியோகிராஃபரின் பங்கு என அனைத்து குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளில் நோக்கமாகும். இந்நாண்டின் கருப்பொருளானது 'நோயாளிக்கு பாதுகாப்பு கொடுத்தல்' (Celebrating Patient Safety) என்பதாகும். ரேடியசனில் இருந்து பாதுகாப்பதையும் கடந்து, நோயாளிகளியின் பாதுகாப்பு முக்கியம் என்பதை உறுதிப்படுத்துவதும் ஆகும்.
மேலும் படிக்க