மேலும் அறிய

World Mental Health Day : மனநலனை பாதுகாப்பது எப்படி? நிபுணர்களின் பரிந்துரை இதோ!

World Mental Health Day 2024: மனநல ஆரோக்கியத்தை பாதுகாக்க தினமும் பின்பற்றவேண்டிய சிலவற்றை நிபுணர்கள் பரிந்துரைப்பதை காணலாம்.

மாறிவரும் வாழ்க்கை முறை, அதிகரிக்கும் அலுவலக பணிச்சுமை உள்ளிட்ட பல காரணங்களால் மனசோர்வு, மன அழுத்தம் ஆகிய மனநலன் பிரச்சனை அதிகரித்து வருகிறது.

மனநலன் ஆரோக்கியத்தை பாதுகாப்பது மிகவும் அவசியம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மன சோர்வு, மன அழுத்தம், எப்போதும் சோகமாக உணர்தல், உணர்வுகளை கையாள்வதில் சிரமம் இப்படி நிறைய சிக்கல்கள் ஏற்படலாம். அவரச வாழ்க்கை, அன்றாட வேலைகள் ஆகியவற்றை தொடர்ந்து சமாளிப்பது, தனக்கான நேரத்தை ஒதுக்காமல் இருப்பது, கடந்த காலங்களில் ஏற்பட்ட இழப்பு, பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் மனநலன் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. மனசோர்வு, மன அழுத்தம் ஆகிய உணர்வு ஏற்படுவதை கவனித்து அதற்கான காரணம் அறிந்து மருத்துவரை அணுவது நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது.

ஸ்ட்ரெஸ் கவனிக்கப்படாமல் விட்டால், அது நீண்ட நாள் பிரச்சனையாக பல்வேறு பாதிப்புகளை ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உறக்கமின்மை, பசியின்மை, எடை அதிகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

உடற்பயிற்சியை போலவே மன ஆரோக்கியத்திற்கும் நேரம் ஒதுக்கு சில விசயங்களை செய்ய வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

காரணமறிதல்: 

இயல்பில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது, எதற்காக பதற்ற உணர்வு ஏற்படுகிறது, எந்த விசயங்கள் எல்லாம் உணர்வு ரீதியிலாக உங்களை தொந்தரவு செய்கிறது என்பதை கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

திட்டமிடல்:

ஒரு செயலை செய்வதற்கு திட்டமிடுவது மிகவும் உதவியாக இருக்கவும் எனவும் அது நல்ல பலனை தரும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். திட்டமிடுவதைப் பழக்கப்படுத்திக்கொண்டால் அது ஸ்ட்ரெஸ்ஸை குறைக்க உதவும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

ஒரு நேரத்தில் ஒரு வேலை:

ஒரு நேரத்தில் எல்லாவற்றையும் செய்து முடித்துவிட வேண்டும் என நினைக்க வேண்டாம். One Step at a time என்ற முறையில் செய்யலாம்.

யோகா:

தினமும் யோக அல்லது அமைதியாக உங்கள் மூச்சுக் காற்றை கவனிக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். காலை எழுந்ததும் மொபல் ஃபோனில் சமூக வலைதளங்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. காலை எழுந்ததும் உங்களுக்கான நேரத்தை ஒதுக்கி பிடித்தவற்றை செய்யவும். பிறகு, அன்றைய நாளுக்கான வேலைகளை செய்யலாம்.  அமைதியாக எந்த யோசனையும் இல்லாமல் டீ அருந்துவது போன்ற மனது மகிழ்ச்சி தரும் செயல்களில் ஈடுபடலாம்.

உடற்பயிற்சி:

தினமும் உடற்பயிற்சி செய்வது மனதை அமைதியாக வைத்துகொள்ள உதவும். குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது தினமும் உடற்பயிற்சி செய்ய ஒதுக்கலாம். நடைப்பயிற்சி, ஜாகிங், சைக்கிள் ஓட்டுவது, ஜிம் செல்வது என உங்களுக்கு ஏற்றதை / இயன்றதை பின்பற்றலாம். 

தூக்கம்:

தினமும் ஓரே நேரத்திற்கு தூங்கி எழுவது உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்று நிபுணர்கள் சொல்கின்றனர். தூக்கம் பரபரப்பான வேலைகளில் இருந்து ஓய்வெடுக்கும் வழியாகும். உழைப்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு ஓய்வு எடுப்பது முக்கியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தினமும் உங்களுக்குப் பிடித்த ஒன்றை கற்கலாம். கலை, எழுத்து, இசை, ஓவியம் வரைதல் என்று ஏதாவது ஒன்றின் மூலம் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவது ரிலாக்ஸாக இருக்க உதவும். பிரச்சனைகளை கையாள முடியாத சூழல் நீடித்தால் அதை நிச்சயம் உங்களைப் புரிந்து கொள்பவர்களிடம் வெளிப்படுத்தலாம். மனநலன் தொடர்பாக உதவியை பெற மருத்துவர்களை அணுகுவதில் தயக்கம் காட்டக்கூடாது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

''ஆசிரியர்களை விற்கத் துடிக்கும் பள்ளிக் கல்வித்துறை; பெரும் அவமானம்''- அன்புமணி கண்டனம்; காரணம் என்ன?
''ஆசிரியர்களை விற்கத் துடிக்கும் பள்ளிக் கல்வித்துறை; பெரும் அவமானம்''- அன்புமணி கண்டனம்; காரணம் என்ன?
”நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் மனு தள்ளுபடி” விரைவில் கைதாக வாய்ப்பு..!
”நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் மனு தள்ளுபடி” விரைவில் கைதாக வாய்ப்பு..!
Kanguva movie : காலையிலே சோகம்.! கங்குவா பார்த்து நொந்து போன சூர்யா ரசிகர்கள்.. நீங்களே பாருங்க!
Kanguva movie : காலையிலே சோகம்.! கங்குவா பார்த்து நொந்து போன சூர்யா ரசிகர்கள்.. நீங்களே பாருங்க!
”ஆதவ் அர்ஜூனா வீட்டில் ED ரெய்டு”  சிக்குகிறாரா லாட்டரி மார்டின்..?
”ஆதவ் அர்ஜூனா வீட்டில் ED ரெய்டு” சிக்குகிறாரா லாட்டரி மார்டின்..?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vignesh Mother | ’’ஒழுங்கா TREATMENT பாக்கலடாக்டர் தரக்குறைவா நடத்துனாரு’’விக்னேஷின் தாய் கதறல்Khalistani Terrorist attack Ram Temple | ”ராமர் கோயிலை இடிப்போம்”தேதி குறித்த தீவிரவாதிகள்Guindy Doctor Stabbed Accused Video | டாக்டருக்கு சரமாரி  கத்திக்குத்து!கூலாக நடந்து வந்த இளைஞன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
''ஆசிரியர்களை விற்கத் துடிக்கும் பள்ளிக் கல்வித்துறை; பெரும் அவமானம்''- அன்புமணி கண்டனம்; காரணம் என்ன?
''ஆசிரியர்களை விற்கத் துடிக்கும் பள்ளிக் கல்வித்துறை; பெரும் அவமானம்''- அன்புமணி கண்டனம்; காரணம் என்ன?
”நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் மனு தள்ளுபடி” விரைவில் கைதாக வாய்ப்பு..!
”நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் மனு தள்ளுபடி” விரைவில் கைதாக வாய்ப்பு..!
Kanguva movie : காலையிலே சோகம்.! கங்குவா பார்த்து நொந்து போன சூர்யா ரசிகர்கள்.. நீங்களே பாருங்க!
Kanguva movie : காலையிலே சோகம்.! கங்குவா பார்த்து நொந்து போன சூர்யா ரசிகர்கள்.. நீங்களே பாருங்க!
”ஆதவ் அர்ஜூனா வீட்டில் ED ரெய்டு”  சிக்குகிறாரா லாட்டரி மார்டின்..?
”ஆதவ் அர்ஜூனா வீட்டில் ED ரெய்டு” சிக்குகிறாரா லாட்டரி மார்டின்..?
Breaking News LIVE 14th Nov 2024: அப்போலோ மருத்துவமனையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனுமதி.
Breaking News LIVE 14th Nov 2024: அப்போலோ மருத்துவமனையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனுமதி.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வார்டன் வேலைக்கு செல்லலாம்; அரசின் அறிவிப்பால் எழும் எதிர்ப்புகள்!
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வார்டன் வேலைக்கு செல்லலாம்; அரசின் அறிவிப்பால் எழும் எதிர்ப்புகள்!
Doctors Strike: அய்யய்யோ! தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் இன்று வேலைநிறுத்தம் - லட்சக்கணக்கான மக்கள் அவதி
Doctors Strike: அய்யய்யோ! தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் இன்று வேலைநிறுத்தம் - லட்சக்கணக்கான மக்கள் அவதி
Kanguva: உலகெங்கும் ரிலீசானது கங்குவா! தியேட்டரை திருவிழாவாக மாற்றும் சூர்யா ஃபேன்ஸ்!
Kanguva: உலகெங்கும் ரிலீசானது கங்குவா! தியேட்டரை திருவிழாவாக மாற்றும் சூர்யா ஃபேன்ஸ்!
Embed widget