(Source: ECI/ABP News/ABP Majha)
World Coconut Day: இன்னைக்கு தேங்காய் தினமா? இந்த கொண்டாட்டம் எதற்காக? வாங்க தெரிந்து கொள்வோம்..!
”மக்களின் வாழ்வில் ஒன்றி போன உணவுகளில் இன்றியமையாத பொருளாய் மாறி போன தேங்காய்களின் முக்கியத்துவத்தை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் நிறுவப்பட்டது”
உலக தேங்காய் தினம்:
இந்திய மக்களின் மிகவும் விருப்பமான உணவு பொருட்களில் ஒன்று தேங்காய். அன்றாட சமையல் முதல் பலகாரம் வரை தேங்காய் பயன்படுத்தும் வழக்கம். குறிப்பாக இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் முக்கிய பயிராக தேங்காய் விளைவிக்கப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தின் முக்கிய ஆதாரமாகவும் இது உள்ளது. பல்வேறு சத்துக்கள் நிறைந்த தேங்காயை ஒவ்வொரு ஆண்டும் செப் 2 ஆம் தேதி உலக தேங்காய் தினமாக கொண்டாடி வருகிறோம். அதாவது தென்னையின் ஊச்சட்டத்து, பொருளாதாரம் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. நமது அன்றாட வாழ்வில் தேங்காய்களின் முக்கியத்துவத்தையும், உலக பொருளாதாரத்தில் அவற்றின் தாக்கத்தையும் அங்கீகரித்து அதனை ஊக்குவிக்கும் பொருட்டு உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது.
கொண்டாட்டத்தின் வரலாறு:
உலக தேங்காய் தினமானது முதன்முதலில் செப் 2 ஆம் தேதி 2009 ஆம் ஆண்டு ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் தென்னை தொழிலின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கும் அமைப்பான ஆசிய மற்றும் பசுபிக் தேங்காய் சமூகத்தால் (APCC) கொண்டாடப்பட்டது. இந்தோனேசியா நாட்டின் ஜகார்த்தா எனுமிடத்தில் இந்த அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ளது. இந்த அமைப்பானது ஆசிய நாடுகளில் தேங்காய்களின் பயிரிடல், அதன் உற்பத்தி, விற்பனை மற்ரும் ஏற்றுமதியை ஆதரிப்பதற்காக 1969 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியா, மலேசியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, கென்யா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் APCC அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன.
மக்களின் வாழ்வில் ஒன்றி போன உணவுகளில் இன்றியமையாத பொருளாய் மாறி போன தேங்காய்களின் முக்கியத்துவத்தை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் நிறுவப்பட்டது. முக்கியமான இந்த பயிரையும், இதனை பயிரிடும் மக்களை ஊக்குவித்து அவர்களை கெளரவப்படுத்தும் விதமாகவும் பல்வேறு நாடுகளில் இந்த கொண்டாட்டமானது வளர்ந்துள்ளது. மக்களின் வாழ்வியலோடு ஒன்றிய தேங்காயில் பல்வேறு சத்துக்களும், பல்வேறு நன்மைகளும் அதிக அளவில் உள்ளது.
தேங்காயில் உள்ள சத்துக்கள் & நன்மைகள்:
தேங்காயில் நார்ச்சத்து, தாதுக்கள் அதாவது பொட்டாசியம், மாங்கனீஸ், செலினியம், இரும்பு மற்றும் தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் என உடல் இயக்கத்திற்கு தேவையான அனைத்து சத்துகளும் உள்ளன
- உலர்ந்த தேங்காயை உட்கொள்வதால் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
- இதயத்திற்கு நல்லது, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க உதவுகிறது
- இரத்த சோகையை குறைக்கிறது.
- மூளைக்கு நல்லது
- கூந்தல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும்
- எலும்புகள் வலுவடையும்
- இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை ஆதரிக்க உதவும்
- தேங்காய்கள் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு உணவு என பல்வேறு நன்மைகள் உள்ளது.
நன்மை இருக்கும் இடத்தில் தீமையும் இருக்கும் என்பது போல அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது வாயுப்பிரச்சினை, கலோரி அதிகமாதல், சுகர் மற்றும் கொழுப்பு, அதோடு அலர்ஜி போன்றவைகளையும் ஏற்படுத்துகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை போல சரியான அளவில் எடுத்துக் கொண்டு அதன் எல்லா விதமான நன்மைகளையும் பெற்று ஆண்டுதோறும் இந்நாளில் உலக தேங்காய் தினத்தை அனைவரும் கொண்டாடுவோம்......!!!!