World Breastfeeding Week : உலக தாய்ப்பால் வாரம்: குழந்தைகளின் வளர்ச்சியில் தாய்ப்பாலின் பங்கு என்ன தெரியுமா?
உலக தாய்ப்பால் வாரம், ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
உலக தாய்ப்பால் வாரம், ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
முதன்முதலாக 1992 ஆம் ஆண்டு தான் சர்வதேச தாய்ப்பால் வாரத்தை கடைபிடிப்பது என முடிவு செய்யப்பட்டது. தாய்ப்பால் புகட்டுவதன் முக்கியத்துவம், தாய்ப்பால் புகட்டுவதால் குழந்தைக்கும், தாய்க்கும் ஏற்படக்கூடிய நன்மைகள் ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இது முன்னெடுக்கப்பட்டது.
கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையின் மகப்பேறு நல மருத்துவர் நேஹா அபிஜித் பவார் தாய்ப்பால் அவசியம், நன்மைகள் குறித்து தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றின்படி தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருக்கின்றனர் எனத் தெரிகிறது. தாய்ப்பால் அருந்தும் பிள்ளைகளுக்கு பின்னாளில் உடல் எடை அதிகரிக்கும் உபாதை, சர்க்கரை நோய் ஆகியன ஏற்படுவதில்லை. புதிதாய் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலைவிட சிறந்த உணவே இல்லை. அது குழந்தைக்கு தேவையான ஆன்ட்டிபாடிக்கள் இருக்கின்றன. பச்சிளங் குழந்தைகளை தாக்கும் நோய்களில் இருந்து தற்காக்கிறது.
குழந்தைகளுக்கு என்ன நன்மை?
* தாய்ப்பால் புகட்டும்போது குழந்தைக்கும், தாய்க்கும் இடையே ஒருவித உணர்வுப்பூர்வ பிணைப்பு உண்டாகிறது.
* குழந்தையின் முதல் ஒரு வருடத்தில் அதற்கு தேவையான அத்தனை ஊட்டச்சத்துகள் தாய்ப்பாலில் நிறைவாக இருக்கிறது
* இதில் உள்ள இம்யூனோகுளோபுளின்ஸ் குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை நிறைவாக தருகிறது. குறிப்பாக காது, நுரையீரல் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. அதேபோல் வயிற்றோட்டம், அலர்ஜி ஏப்றடாமல் காக்கிறது.
* ஓராண்டு வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைளை தாக்கும் ரத்த புற்றுநோய், ஆஸ்துமா, டெர்மாடிடிஸ் போன்றவை ஏற்படுவதில்லை
* டைப் 2 டயபடீஸ், ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமன் வியாதி ஆகியன பின்னாளில் ஏற்படுவதில்லை.
தாய்மார்களுக்கு ஏற்படும் நன்மைகள்:
* தாய்ப்பால் புகட்டுவதால் ஆக்ஸிடாசின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது குழந்தைப்பேறுக்கு பின்னர் கர்ப்பப்பை சுருங்க உதவுகிறது. இதனால் பிரசவத்திற்குப் பின்னர் உதிரப்போக்கு குறைகிறது. பிரசவத்திற்குப் பின்னர் சீக்கிரமாக இயல்பு நிலைக்கு திரும்பமுடிகிறது.
* தாய்ப்பால் கொடுப்பது இயற்கையான கருத்தடை மாத்திரைகளாக செயல்படுகிறது. தாய்ப்பால் கொடுத்தால் பிரசவத்திற்கு பின் 8 முதல் 10 மாதங்கள் வரை கர்ப்பம் தரிப்பது தடைபடுகிறது.
* தாய்ப்பால் புகட்டும் தாய்மார்களுக்கு போஸ்ட் பார்டம் டிப்ரஸன் எனப்படும் குழந்தை பேறுக்கு பிந்தைய மன அழுத்தம் குறைவாகவே உள்ளது.
* தாய்ப்பால் புகட்டும் தாய்மார்களுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஏற்படுவதும், ஓவரியன் கேன்சர் ஏற்படுவதும் குறைவாக இருக்கிறது.
இதனையறிந்து இளம் தாய்மார்கள் தயக்கமின்றி தாய்ப்பால் புகட்ட வேண்டும் என்று மருத்துவர் நேஹா கூறுகிறார். வேலைக்குச் செல்லும் பெண் என்றாலும் கூட தாய்ப்பாலை பாட்டிலில் பீய்ச்சி வைத்து அதை பதப்படுத்தி பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )