மனமே ரிலாக்ஸ்: அதிக அக்கறை.. திரும்ப கிடைக்காத அன்பு.. மனதுக்கு தீங்காகும் சிக்கல்கள்! செய்ய வேண்டியது என்ன?
தன்னலமற்ற அக்கறை மனப்பான்மை மனநல கோளாறுகளுக்கு வழிவகுக்கும் அளவுக்கு ஆழமானது
உறவில் அன்பைப் போலவே அக்கறையும் அவசியமானதுதான், ஆனால் அதற்கும் ஒரு அளவு உண்டாம். சில சமயங்களில், அந்த நபரை நாம் தேவைக்கதிகமாக கவனித்துக் கொள்கிறோம். இது நமது உணர்ச்சி ஆற்றலைக் குறைத்து, நமது வாழ்க்கை இலக்குகளிலிருந்து நம்மை விலகச் செய்கிறது. அப்படி நடக்காமல் தடுக்க நீங்கள் முயற்சி செய்யவேண்டிய பயனுள்ள தீர்வுகளின் பட்டியல் இங்கே.
மறுமுறையில் இருந்தும் அதே அக்கறை வருகிறதா?
தன்னலமற்ற அக்கறை மனப்பான்மை மனநல கோளாறுகளுக்கு வழிவகுக்கும் அளவுக்கு ஆழமானது. கவனிப்பு முக்கியமானதுதான், ஆனால் நாம் மறுமுனையில் இருந்து அதே கவனிப்பை பெறாதபோது, அது நம்மை மேலும் கவலையடையச் செய்கிறது.
உங்களை இழக்காதீர்கள்…
ஒரு அக்கறையுள்ள நபராக, மற்றவர்களுக்காக உங்களை நீங்களே இழப்பது உங்களுக்கு எளிதாகவும் பிடித்த விஷயமாகவும் இருக்கலாம். ஆனால் அதன் காரணமாக உங்கள் தேவைகளையே கூட நீங்கள் மறந்துவிடலாம். உங்கள் மீது அன்பைப் பொழிந்து, ஆழ்ந்த பெருமூச்சு விடுங்கள்… உங்கள் வாழ்க்கை எங்கு செல்கிறது என்று சிந்தியுங்கள்.
தொடர்புடைய செய்திகள்: Vijay Sethupathi : "என் வாழ்க்கையிலயும் ஒரு ஜானு இருந்தாங்க...." : ஃப்ளாஷ்பேக் சொல்லி உருகிய விஜய் சேதுபதி..
உங்கள் தேவையை கண்டறியவும்…
உங்கள் உள்மனது சொல்வதைக் கேட்டு, உங்களுக்கு எது முக்கியம் என்பதைக் கண்டறியவும். உங்கள் எண்ணங்கள், உணர்வுகள், நம்பிக்கைகள், ஒழுக்கம் மற்றும் மதிப்புகள் பற்றி சிந்தியுங்கள். நீங்கள் அவர்களுடன் இணைந்திருக்கிறீர்களா என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கவும்.
உங்கள் உணர்வுகளை மதியுங்கள்
அந்த நபரைப் பற்றி நீங்கள் கவலைப்பட வைக்கும் அந்த விஷயம் அல்லது பழக்கம் என்ன என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கவும். உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள். கவனிப்பது எளிதான காரியம் அல்ல. அதற்கு அதிக அளவு உணர்ச்சி ஆற்றல் தேவை. எனவே புத்திசாலித்தனமாக அதனைப் பயன்படுத்தவும்.
சுயபரிசோதனை அவசியம்
உங்கள் உணர்ச்சி சக்தியை சிந்தித்துப் பிரிக்கவும், இது வாழ்க்கையில் ஒரு தீர்க்கமான திசையைப் பெற உதவும். உங்கள் உணர்வுகளை அடக்க முயற்சிக்காதீர்கள். அதற்கு மதிப்பு கொடுத்து வளர்க்கவும். அது வளர்ந்து மலரட்டும். உங்கள் தேவைகளையும் அவற்றை அடைவதற்கான வழிகளையும் கண்டறியவும். சுய சுயபரிசோதனை அதற்கு மிகவும் அவசியம். எதிர்காலத்தில் அதைத் தக்கவைக்க நிகழ்காலத்தில் கவனம் செலுத்துங்கள். உங்கள் எதிர்காலத்தை நம்புங்கள். உங்கள் உணர்ச்சிப்பிணைப்புகளுக்கு எல்லைகளை அமையுங்கள். உங்களுக்கு நீங்களே முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அக்கறை நல்லது, ஆனால் அதிகப்படியான அக்கறை மன நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்