குழந்தைகளோடு நெருக்கமாக இதை பண்ணுங்க போதும்!
பெற்றோர்க்கும் குழந்தைக்குமான உறவு பலபட பெற்றோரின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும்.
பெற்றோர்க்கும் குழந்தைக்குமான உறவு பலபட பெற்றோரின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் குழந்தைகள் அந்தந்த வயதுக்கான வளர்ச்சியை எட்டி இருக்கின்றனரா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இன்றிய சூழ்நிலையில் பல பெற்றோர்க்கு தங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள், என்னவெல்லாம் கற்று கொள்கின்றனர்என்பதில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். வீட்டை தாண்டி அவர்கள் கற்று கொள்ளும் சூழல் பெரியதாக இருக்கிறது. அவர்கள் எதை பார்க்கிறார்கள், எதில் இருந்து கற்று கொள்கிறார்கள் இன்றைய ஸ்மார்ட் கேட்ஜெட் உலகத்தில், குழந்தைகள் அதிகமாக ஈர்க்க படுகின்றனர்.
வீடு - குழந்தைகளுக்கு விவரம் தெரிய ஆரம்பித்ததில் இருந்து மிகவும் பாதுகாப்பாக உணரும் ஒரு இடம் வீடு தான். வீட்டில் அவர்களுக்கு இனிமையாவும், அவர்களுக்கு பிடித்தமாதிரியும் மாற்றி கொள்வது நல்லது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கூடுதல் நேரம் செலவழிக்க வேண்டும். குழந்தைகளுக்கு எந்த துஸ்பிரயோகமும் வீட்டில் நடக்காமல், பார்த்து கொள்ள வேண்டும்.
சுத்தம் - குழந்தைகள் வளர வளர தானாக அனைத்து வேலைகளையும் செய்வதற்கு பழக்க படுத்த வேண்டும். பல் துலக்குவது, குளிப்பது, தானாக உணவை சாப்பிடுவது, இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்து கொள்வது , விளையாடுவது, மற்றவர்களுடன் பழகுவது போன்றவற்றை செய்ய வேண்டும். இவை அனைத்தும் பெற்றோரின் கவனிப்பில் நடக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு உரிய நேரத்தில் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகளை கவனிக்க வேண்டும். வயதுக்கு ஏற்ற வளர்ச்சி இருக்கிறதா என்பதும், அந்தந்த வயதில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் கண்காணித்து தேவையான சிகிச்சை எடுக்க வேண்டும்.
ஆதரவுடன் இருக்க வேண்டும் - குழந்தைகள் புதிதாக செய்யும் அனைத்து வேலைகளுக்கும், உறுதுணையாகவும், அவர்களுக்கு உத்வேகம் அளிக்கவும், புதிய முயற்சிகள் செய்வதற்கு ஊக்கு விக்க வேண்டும். நேர்மறையான சிந்தனையுடன் அணுகுவதற்கு சொல்லி கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு அன்பையும் அதே நேரத்தில் கண்டிப்பையும் காட்டி வளர்க்கும் போது குழந்தை சிறந்து வளர்வதற்கு உதவும்.
சுய மரியாதை கற்றுக்கொடுங்கள் - உங்கள் குழந்தைகளின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து அவர்கள் சொல்வதை முதலில் கேளுங்கள். அவர்களை ஒரு போதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். குழந்தையை எப்படி நடத்துகிறீர்கள் என்பதை நன்றாக நினைவில் வைத்து இருக்கும். அதனால் அவர்களை மரியாதையுடன் நடத்துங்கள். அவர்களை சுயமாக சிந்திக்க அனுமதியுங்கள். அதற்கான இடைவெளி அவர்களுக்கு தேவை.
குழந்தைகளை பாதுகாப்பாக வைத்து இருங்கள் - குழந்தை யாருடன் பேசுகிறது, எப்படி நெருக்கமாக இருக்கிறது என்பதை கவனியுங்கள். யாருடன் எப்படி பேசவேண்டும், அவர்கள் என்ன நோக்கத்துடன் பேசுகிறார்கள் என்பதை சொல்லி கொடுக்க வேண்டும். நேர்மறை மற்றும் எதிர்மறை இரண்டையும் சொல்லி கொடுத்து புரிய வைக்க வேண்டும்.
குழந்தைகளுடன் நேரத்தை செலவழியுங்கள் - குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி கொடுங்கள். உரையாடுங்கள். அவர்களுக்கான நேரத்தை தனியாக செல்வது செய்வது அவசியம்.