உடலுறவை வெறுக்கும் தம்பதிகள்; ஆய்வில் தகவல்!
லாக்டவுன் காலத்தில் தம்பதிகள் இடையே தாம்பத்ய உறவு எப்படி உள்ளது என்பது தொடர்பான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக பரவி வருகிறது. இதன் காரணமாக 2020ஆம் ஆண்டு முதல் பல நிறுவனங்கள் தங்களது பணியாளர்களுக்கு வீட்டிலிருந்து பணி செய்ய அனுமதித்துள்ளன. அதனால் தம்பதிகள் பலர் அதிக நேரம் வீட்டில் செலவு செய்ய வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த காலத்தில் இயல்பாக ஒருவருக்கு ஒருவர் அதிகம் புரிந்து கொண்டு அவர்களிடையே காதல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆய்வு தகவல்கள் கூறுவது இதற்கு முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ளது.
இந்தியாவை பொருத்தவரை லாக்டவுன் காலத்தில் அதிகளவில் திருமணங்கள் நடைபெற்று வருகிறது ஒரு பக்கம் செய்திகள் வெளியாகி வருகிறது. அதேபோல் மறுபக்கம் இந்த காலத்தில் விவகாரத்து தொடர்பான பிரச்னைகள் மற்றும் பெண்கள் மீதான குடும்ப வன்முறை சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இந்தச் சூழலில் உலகத்தின் பல்வேறு நாடுகளில் லாக்டவுன் காலத்தில் தம்பதிகள் இடையே ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
அதன்படி அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் ஜெர்னல் ஆஃப் செக்ஸூயல் ரிசர்ச் என்ற ஜெர்னலில் பதிவாகியுள்ளது. அதில் வீட்டில் பணி புரிவதால் தம்பதிகள் இருவருக்குமே அதிகளவில் மன அழுத்தம் இருப்பது கண்டறியபட்டுள்ளது. மேலும் அவற்றில் 30 சதவிகிதம் தம்பதிகள் லாக்டவுன் காலத்தில் உடல் உறவு வைத்து கொள்ளும் எண்ணமே குறைவாக தான் இருந்தது என்றும் தெரிவித்துள்ளனர். கொரோனா காலத்திற்கு முன்பாக அதிகளவில் உடல் உறவு வைத்து கொண்ட தம்பதிகள் கூட கொரோனா காலத்திற்கு பிறகு அதை மிகவும் குறைத்துள்ளதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
அதன்படி 30 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தம்பதிகள் இந்த பதிலையே அதிகம் தெரிவித்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் தம்பதிகளிடையே உடல் உறவு வைத்து கொள்ளும் ஆர்வமும் குறைந்துள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கு அவர்களிடம் அதிகமாக இருக்கும் வேலை சுமை மற்றும் மன அழுத்தம் காரணம் என்று மனநல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் சரியான மனநல மற்றும் உடல் நல ஆலோசனை உதவிகள் கிடைக்கததால் பல தம்பதிகள் பெரும் சிக்கலை சந்தித்துள்ளனர் என்று இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கொரோனா லாக்டவுன் காலத்தில் ஆண்களை பெண்களுக்கு அதிகளவில் இந்த உடல் உறவு குறித்த எண்ணம் குறைந்துள்ளதும் தெரியுவந்துள்ளது. அதற்கு அவர்களின் வீட்டுப் பணி மற்றும் அலுவலக பணியும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா காலம் தொற்று பாதிப்பு உடன் சேர்த்து இதுபோன்று பல முக்கியமான பிரச்னைகளை நமக்கு அளித்துள்ளது. இந்த மாதிரியான உடல் மற்றும் உளவியல் பிரச்னைகளிலிருந்து விரைவில் நாம் மீண்டு வரவேண்டும் என்பதே மனநல ஆர்வலர்களின் எண்ணமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Vitamin C | ‘தி கோல்டன் விட்டமின்’ - ஆரோக்கியத்துக்கு மிக முக்கியமான விட்டமின் சி.!