மேலும் அறிய

Intimate Hygiene | மாதவிடாயின்போது ரத்தம் பழுப்பு நிறத்தில் இருக்கிறதா? தொற்று என குழப்பமா? இதோ விளக்கம்..

மாதவிடாயின் இறுதி நாட்களில் வெளியேறும் ரத்தம் பழுப்பு நிறத்தில் இருப்பதைப் பார்த்து குழம்புகிறீர்களா?

Dr.Cuterus என்னும் பெயரில் பாலியல் நலன் நிபுணரான டாக்டர் தனாயா, மாதவிடாயின்போது வெளியேறும் ரத்தத்தின் நிறம் குறித்து நமக்கு ஏற்படும் குழப்பங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். மாதவிடாயின் கடைசி நாட்களில், ரத்தம் பழுப்பு நிறத்தில் வெளியேறுவதைக் குறித்து விளக்கும்போதும், அது அமிலத்தால் ஏற்படும் மாற்றம் மட்டுமே என்கிறார். மாதவிடாயின் கடைசி நாட்களில் ரத்தம் வெளியேறுதல் வேகம் குறையும்போது, அது பிறப்புறுப்பின் PH லெவலுடன் இணைந்து பழுப்பு நிறத்தில் வெளியேறுவதாகவும், அதில் பயப்பட எதுவுமில்லை என்கிறார்.

View this post on Instagram
 
A post shared by Dr. Tanaya | Millennial Doctor (@dr_cuterus)

டாக்டர் தனாயா, சில முக்கியமான விஷயங்களை முழுமையான விளக்கத்துடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். பெண்கள் தங்கள் பிறப்புறுப்பை எப்படிச் சுத்தம் செய்ய வேண்டும்? எந்த தயாரிப்புகளைப் பயன்படுத்தி சுத்தம் செய்வது நல்லது? என்னும் மிக அடிப்படையான, ஆனால் மிக முக்கியமான விஷயங்களுக்கு விளக்கமளித்திருக்கிறார். மிதமான, அதிக வேதிப்பொருட்கள் அற்ற சோப்பைப் பயன்படுத்தலாம். அல்லது மிதமான Intimate Wash பயன்படுத்தலாம். ஆனால் அதில் எந்த நறுமணமும், அல்லது க்ளிட்டர் போன்ற தயாரிப்புகளும் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் நறுமணமூட்டப்பட்ட வாஷ்கள் நிச்சயம் அரிப்பை ஏற்படுத்தும் என்கிறார்.

மேலும் பிறப்புறுப்பை சுத்தம் செய்யும்போது, பிறப்புறுப்புக்குள் விரலைவிட்டு சுத்தப்படுத்துவது தவறானது. ஏனெனில் பிறப்புறுப்புக்குள் எந்த திரவமும், அல்லது திடப் பொருளாக அழுக்கும் சென்று சேர்வதில்லை. விரல்களை உள்ளே விட்டு சுத்தம் செய்வதால் தேவையற்ற தொற்று ஏற்படலாம். பிறப்புறுப்பின் பக்கவாட்டு பகுதி, அதாவது உதடு போன்ற பகுதியை மட்டுமே சுத்தம்செய்ய வேண்டும் என்கிறார் தனாயா. சிலருக்கு சோப்பு பயன்படுத்துவது அரிப்பு ஏற்படுத்தலாம் என்பதால், மிதமாக சூடுசெய்யப்பட்ட நீரையே பயன்படுத்தி பிறப்புறுப்பைச் சுத்தப்படுத்தலாம் என்கிறார்.

மேலும், பிறப்புறுப்பை சுத்தம்செய்யும்போது, மேலிருந்து கீழாக, (அதாவது இடுப்புப் பகுதியில் இருந்து கீழ்நோக்கி சுத்தம் செய்ய வேண்டும்) கீழிருந்து மேல்பக்கமாக சுத்தம் செய்தால், பின்புறத்தில் இருக்கும் அழுக்கின் மூலம் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் விளக்குகிறார்.

இனி பாலியல் ஆரோக்கியம், மனநலம், மருத்துவர்களின் முக்கியமான ஆலோசனைகளைக் குறித்து அறிந்துகொள்ள Abpநாடு தளத்தை பின்பற்றுங்கள்..

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Embed widget