Watch Video : மாலைபோட போனபோது பின்வாங்கிய மாப்பிள்ளை.. மணப்பெண் செய்த கெத்து சம்பவம்..
வடக்கத்தியர்களின் இந்து திருமணத்தில் மாலை மாற்றும் வைபவத்தின் பின்னணியில் ஒரு கதையே இருக்கிறது. மாலை மாற்ற பெண் வரும்போது மணமகன் அதற்கு இடையூறு செய்வார்.
மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள். மாலடைந்து மதிலரங்கன் மாலை அவர்தன் மார்பிலேமையலாய் தையலாள் மாமலர் கரத்தினால்
மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்
இந்தப் பாடலை திருமாள் திருக்கல்யாண வைபவத்தில் மட்டுமல்ல வீட்டுத் திருமண வைபவங்களிலும் பாடுவதுண்டு. இந்து திருமணத்தில் மாலை மாற்றுதல் மிக முக்கியமான வைபவம். அதுவும் வடக்கத்தியர்களின் இந்து திருமணத்தில் மாலை மாற்றும் வைபவத்தின் பின்னணியில் ஒரு கதையே இருக்கிறது. மாலை மாற்ற பெண் வரும்போது மணமகன் அதற்கு இடையூறு செய்வார். அதையும் மீறி பெண் முதலில் மாலை போட்டுவிட்டால் அவளின் கைதான் வீட்டில் ஓங்கியிருக்குமாம் .
View this post on Instagram
அண்மையில் வடக்கே நடந்த ஒரு திருமணத்தில் மாலை மாற்றும் போது நடந்த சுவாரஸ்யம் இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது. மணப்பெண் மாலை மாற்ற வர மணமகன் மிடுக்கு காட்டுகிறார். சற்றும் தயங்காமல் மணப்பெண் உடனே மணமாலையுடன் நடையைக் கட்டுகிறார். அதிர்ந்துபோன மணமகன் தலையைக் குணிந்து மாலையை வாங்கிக் கொள்கிறார்.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த வீடியோவில் மணப்பெண்ணின் சாதுர்யத்தைப் பாராட்டி வருகின்றனர்.
பாருல் கார்க் என்ற மேக்கப் கலைஞரே இந்த வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பாருல் கார்க் பிரபல ப்ரைடல் மேக்கப் ஆர்ட்டிஸ்ட். டெல்லி, குர்கானில் இவர் ப்யூட்டி சலூன் வைத்துள்ளார். அடிப்படையில் வழக்கறிஞரான இவர் தற்போது மணப்பெண் அலங்கார தொழிலில் கொடிகட்டி பறக்கிறார். பாலிவுட் பிரபலங்கள் தொடங்கி தொழிலதிபர்கள் வரை இவருக்கு கஸ்டமர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ப்ரைடல் மேக்கப்பில் புதுப்புது ட்ரெண்டை உருவாக்குவதில் இவர் கெட்டிக்காரர்.