மேலும் அறிய

Hair Detox | தலைமுடி அழகா மிருதுவா இருக்கணுமா... மாதம் ஒருமுறை இந்த டீடாக்ஸ் போதும்..

தலைமுடி ஒவ்வொரு பருவநிலைக்கும் ஏற்றவாறு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு ஆரோக்கியமற்றதன்மையையும் நமக்கு ஏற்படுத்துவதால் அதற்கேற்ற வகையில் முடிக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

தலைமுடி ஆரோக்கியமாக வளர்வதற்கு ஸ்கிரப்பிங் முதல் மாஸ்டரைசிங் போன்றவற்றை முறையாக மேற்கொண்டாலே போதும். நிச்சயம் உங்களது தலைமுடி பளபளப்பாகவும் மென்மையாகவும் வைத்திருக்க முடியும்.

நம்முடைய சருமம் மற்றும் உடலைப்போல நம் தலைமுடிக்கும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக தலைமுடி ஒவ்வொரு பருவநிலைக்கும் ஏற்றவாறு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு ஆரோக்கியமற்ற தன்மையையும் ஏற்படுத்துவதைப் பார்த்திருப்போம். எனவே உச்சந்தலையை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் நிர்வகிப்பதில் நாம் அக்கறையுடன் செயல்பட வேண்டும். இல்லாவிடில் உங்கள் தலைமுடியில் அழுக்குபிடித்தும், பல்வேறு ரசாயனங்கள் நிறைந்தும் ஆரேக்கியமான முடி வளர்ச்சியைக் கெடுத்துவிடும். எனவே ஸ்கால்ப் ஸ்கரப்பிங்கை முதல் முடிக்கு தேவையான சிகிச்சை போன்றவற்றை நீங்கள் பின்பற்ற வேண்டும்.  எனவே பருவநிலைக்கு ஏற்றவாறு உங்களது தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்காக சில வழிமுறைகள் குறிந்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.

Hair Detox | தலைமுடி அழகா மிருதுவா இருக்கணுமா... மாதம் ஒருமுறை இந்த டீடாக்ஸ் போதும்..

சரியான தயாரிப்புகள் அவசியம்:

குளிர்காலம், வெயில்காலம் என எந்த பருவநிலையாக இருந்தாலும் நம் தலைமுடியை பராமரிப்பது என்பது எளிதான விஷயம் தான். அதற்கு முதலில் நாம் செய்ய வேண்டியது நம்முடைய முடியின் தன்மைக்கு ஏற்றவாறு சரியான தயாரிப்பு கொண்ட பொருள்களை தேர்ந்தெடுக்க வேண்டும். பளபளப்பாக மாற்றும், முடி விரைவில் வளரும் என்று வரும் விளம்பரங்களைப்பார்த்து வாங்காமல் உங்களுக்கு தேவையான மற்றும் மிகவும் பயன்படக்கூடிய பொருள்களைத் தேர்ந்தெடுப்பது அவசியமான ஒன்று.

ஸ்கால்ப் ஸ்கிரப்பிங் ( Sculp Scrubbing)

அடுத்ததாக உங்கள் முடியில் உள்ள அழுக்கு மற்றும் எண்ணெய் பிசுக்கை நீக்க ஸ்கால்ப் ஸ்கிரிப்பிங் செய்வது உங்களுக்கு நல்ல பலனளிக்கும். குறிப்பாக உங்களது உச்சந்தலையின் மேற்படலத்தைப்பிரித்து வேர்கள் வரை அழுத்தி தேய்த்து ஸ்க்ரப் செய்வதால் அழுக்கு, தூசு, எண்ணெய் பிசுபிசு போன்றவை இல்லாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும். இதனால் உங்களது புத்துணர்ச்சியும் கிடைக்கிறது. எனவே உங்கள் தலைமுடி ஆரோக்கியத்திற்கும் உதவியாக உள்ளது.

இதுபோன்று  மாதத்திற்கு ஒரு முறையாக நீங்கள் மேற்கொள்ள வேண்டும். இதற்காக நீங்கள் அழகு நிலையங்கள்தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களது வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே நீங்கள் ஸ்கிரப்பிங் மேற்கொள்ளலாம். இவ்வாறு தொடர்ந்து மேற்கொள்ளும் போது உங்களது தலைமுடி பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்க உதவியாக உள்ளது.

தலைமுடிக்கு ஏற்ற எண்ணெய் மற்றும் ஷாம்புகளைத் தேர்ந்தெடுத்தல்..

நம்முடைய சருமத்தைப் பாதுகாக்க பயன்படுத்தும் பியூட்டி பொருள்களைப்போல நமது தலைமுடிக்கும் ஆரோக்கியமான பொருள்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியமான ஒன்று. குறிப்பாக தலைமுடிக்கு தேர்ந்தெடுக்கும் ஷாம்புகளில் அதிக ரசாயனங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முடி வளர்வதற்கு மற்றும் ஆரோக்கியமாக பாதுகாத்துக்கொள்வதற்கு ஏற்றவகையில் கற்றாழை, ஆப்பிள் சைடர் வினிகர்  போன்ற இயற்கையாக பொருள்களைத் தேர்ந்தெடுக்கலாம். இதனைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னதாக உங்கள் தலைமுடியின் வகை மற்றும் உங்களது முடி பிரச்சனைகளுக்கு ஏற்ற வகையில் நீங்கள் தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டும். இது போன்று மேற்கொள்ளும் போது உங்களது தலைமுடிக்கு புதிய தோற்றத்தை அளிக்கவும், அவற்றை வலுப்படுத்தவும் உதவியாக இருக்கும்.

Hair Detox | தலைமுடி அழகா மிருதுவா இருக்கணுமா... மாதம் ஒருமுறை இந்த டீடாக்ஸ் போதும்..

முடியை ஒழுங்காக ட்ரிம் செய்யலாம் (Trim Your Hair)

உங்களது தலைமுடி ஆரோக்கியமாக வளர வேண்டும் என்றால், தலைமுடியை ஒழுங்கமைக்க வேண்டும். இதற்கு உங்கள் வளர்ச்சி இல்லாத மற்றும் தலைமுடிக்கு அடியில் இரண்டாக பிரிந்திருக்கும் முடியை வெட்டி விட வேண்டும். இவ்வாறு மேற்கொள்ளும்போது தான் உங்களது முடி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். இதோடு மட்டுமின்றி உங்களது தலைமுடிக்கு அவ்வப்போது மாஸ்டரைசிங் செய்வதையும் நீங்கள் மறந்துவிடக்கூடாது. மேற்கண்ட முறைகளை நீங்கள் பின்பற்றினாலே உங்களது தலைமுடி ஆரோக்கியமாக வளர உதவியாக இருக்கும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி Aadhav Arjuna ED Raid |ஆதவ் வீட்டில் ED ரெய்டு! சிக்குகிறாரா லாட்டரி மார்டின்? பரபரப்பில் விசிகPriyanka Gandhi Wayanad|ராகுலை தாண்டுவாரா பிரியங்கா?ட்விஸ்ட் கொடுத்த வயநாடு!கதறும் பாஜக, கம்யூனிஸ்ட்DOGE Elon musk | ‘’வாங்க எலான் மஸ்க்..’’ ட்ரம்ப் கொடுத்த ASSIGNMENT! கலக்கத்தில் அமெரிக்கர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
Embed widget