Vettiver Oil: வெட்டிவேர் எண்ணெயின் பயன் தெரியுமா? இவ்ளோ மேஜிக் பலன்கள் இருக்கா?
Vetiver Essential Oil Beauty Benefits: வெட்டிவேரின் வாசத்தைப் பற்றி பாட்டு இருப்பதாலோ என்னவோ நாம் வெட்டிவேரை வாசனையுடன் மட்டுமே தொடர்புபடுத்திக் கொள்கிறோம்.
Vetiver Essential Oil Beauty Benefits: வெட்டிவேரின் வாசத்தைப் பற்றி பாட்டு இருப்பதாலோ என்னவோ நாம் வெட்டிவேரை வாசனையுடன் மட்டுமே தொடர்புபடுத்திக் கொள்கிறோம்.
ஆனால், வாசனையைத் தாண்டி அத்தனை நன்மைகளை உடலுக்கும் உள்ளத்திற்கும் கொடுக்கக் கூடியது வெட்டிவேர். ஆயுர்வேதத்தில் அரோமாதெரபியில் இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் வெட்டிவெஇயா ஜிஜானியோடிஸ். இது மனப்பதற்றம், தூக்கமின்மை, சோர்வு, மனச்சோர்வு ஆகியனவற்றை குணப்படுத்தக் கூடியது. நினைவாற்றலையும், மனதினை ஒருமுகப்படுத்தவும் உதவும்.
இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வெட்டிவேர் எண்ணெய் பயன்பாடு அதிகம். இதனை கஸ்கஸ் எண்ணெய்(Khus Khus Oil) என்று பொதுவாக அழைக்கின்றனர்.
சருமப் பொலிவுக்கு வெட்டிவேர்..
வெட்டிவேர் எண்ணெய்யில் ஆன்ட்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம். அதனால் அதன் நோய்க்கிருமி எதிர்ப்பாற்றலும், சரும எரிச்சலை குணப்படுத்தும் தன்மையும். டெர்மாடிடிஸ் போன்ற சாதாரண சருமப் பிரச்சினைகளை குணமாக்கும். அரிப்பை நிக்கும். இது சருமத்தில் ஆழமாக ஊடுருவி குணப்படுத்தக்கூடியது. முகத்தின் சருமத்தில் உள்ள துளைகளை அடைப்பு நீக்க சருமம் பொலிவு பெறச்செய்யும். பிளாக் ஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸைப் போக்கும். வெட்டிவேர் எண்ணெய் 2 துளி, ரோஸ் வாட்டர் 2 துளி அத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து சிறு பஞ்சு உருண்டைகளால் முகத்தில் ஒத்தி எடுத்தால் அது சருமத்தை பொலிவு பெறச் செய்யும்.
கரும்புள்ளிகளைக் களையும்..
பெண்கள், கரும்புள்ளிகளை(Blackheads) பெரும் பிரச்சனையாகக் கருதுகின்றனர். ஹார்மோன் தடுமாற்றம், புற மாசு, ஆரோக்கியமற்ற உணவு ஆகியன கரும்புள்ளிகளை ஏற்படுத்துகின்றன. வெட்டிவேர் எண்ணெய்யுடன், டீ ட்ரீ எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசி வர இந்தக் கரும்புள்ளிகள் நீங்கும்.
தழும்புகளை நீக்கும்...
காயங்களால் ஏற்பட்ட தழும்புகளை நீக்க வெட்டிவேர் எண்ணெய் முக்கியமான தீர்வு. தழும்புகள், பருக்கள், கரும்புள்ளிகளை நீக்கும். சின்னம்மையால் ஏற்படும் தழும்புகளையும் நீக்கும்.
பொடுகை குணப்படுத்தும்..
தலையில் ஏற்படும் வறட்சியால் உருவாகும் பொடுகுத் தொல்லைக்கு(Dandruff) வெட்டிவேர் நல்ல தீர்வு. பொடுகால் தலையில் அரிப்பு, செதில் செதிலாக உதிர்வது ஆகியன நீங்கும். இதில் நுண்ணுயிரிகளை அழிக்கும் திறன் உள்ளது. வெட்டிவேர் எண்ணெய்யுடன், பாதாம் எண்ணெய்யையும் சேர்த்து தூங்கும் முன் தேய்த்தால் நல்ல பலன் கிடைக்கும். இதனை இரவு முழுவதும் தலையில் வைத்துவிட்டு காலையில் எலுமிச்சை சாற்றை தலையில் தேய்த்து பின்னர் ஷாம்பூ போட்டு தலையை அலசினால் கூந்தல் பளிச் என இருக்கும். பொடுகும் நீங்கும்.
வெட்டிவேர் குளியல் பொடி.. வீட்டிலேயே செய்வது எப்படி?
வெட்டிவேர் குளியல் பொடியை வீட்டிலேயே செய்ய வேண்டுமென்பதற்கான டிப்ஸ் இது.
வெயிலில் உலர்த்திய வெட்டிவேர் 4 முதல் 5 டேபில் ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு டேபில் ஸ்பூன் சர்க்கரை கலந்து கொள்ளவும், அத்துடன் 2 டேபில் ஸ்பூன் கடலைமாவு கலந்து கொள்ளவும். மேலும் 3 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்க்கவும். இதனை நல்ல பேஸ்ட் பதத்துக்கு கலந்து உடல் முழுவதும் தேய்க்கவும். பின்னர் 5 நிமிடங்கள் உடல் முழுவதும் நன்றாக தேய்த்துவிடவும். அதன் பின்னர் குளிச்சியான தண்ணீரில் நீராடவும். இது சருமத்தை இயற்கையான க்ளென்ஸராக குணப்படுத்தும்.
வாசனை திரவியம் உருவாக்குவது எப்படி?
ஒரு கோப்பை டிஸ்டில்ட் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். அத்துடன் 10 துளி வெட்டிவேர் எண்ணெய், 20 துளி மல்லிகை எண்ணெய், 10 துளி லேவண்டர் எண்ணெய் சேர்க்கவும். பின்னர் அவற்றை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும். அதை நன்றாக குலுக்கி கழுத்துப் பகுதியில் தெளித்துக் கொள்ளலாம்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )