Vastu Kitchen Tips : உங்கள் சமையலறையை எப்படி வைத்திருந்தால் நலமும், வளமும் சேரும்: வாஸ்து டிப்ஸ்
வாஸ்து சாஸ்திரம் என்பது அண்மைக்காலமாக மக்கள் மத்தியில் பிரபலமாக பேசுபொருளாகியுள்ளது. வாஸ்து சாஸ்திரம் இந்திய பாரம்பரியம், கலாச்சாரத்துடன் ஒன்றியது எனக் கூறும் வாஸ்து நிபுணர்கள் வீட்டின் சமையலறை எப்படி இருக்க வேண்டும் என்று பட்டியலிடுகின்றனர்.
வாஸ்து சாஸ்திரம் என்பது அண்மைக்காலமாக மக்கள் மத்தியில் பிரபலமாக பேசுபொருளாகியுள்ளது. வாஸ்து சாஸ்திரம் இந்திய பாரம்பரியம், கலாச்சாரத்துடன் ஒன்றியது எனக் கூறும் வாஸ்து நிபுணர்கள் வீட்டின் சமையலறை எப்படி இருக்க வேண்டும் என்று பட்டியலிடுகின்றனர்.
அடுக்களையில் செய்யக் கூடியது; கூடாதது
1. மஞ்சளையும் உப்பையும் அருகருகே வைக்காதீர்கள். அது குழப்பத்தை உண்டாக்கும்.
2. அடுக்களையில் ஒருபோதும் கண்ணீர் சிந்தாதீர்கள்.
3. உங்கள் சமையலறை சுத்தமாக இருக்க வேண்டும். ஒரு கோயிலைப் போல் சுத்தமாக இருக்க வேண்டும்.
4. சமையலறை தென் கிழக்கு அல்லது தென் மேற்கு திசையில் இல்லாவிட்டால் உங்கள் அடுப்பையாவது அந்த திசையை நோக்கி வையுங்கள்.
5. உங்கள் அடுப்படியில் உள்ள குவளைகள் 3 என்ற அளவில் மட்டும் இருக்கக் கூடாது.
6. அடுக்களையில் எப்போதும் வெல்லம் இருக்க வேண்டும்.
7. உடைந்த பாத்திரங்களை உபயோகிக்கக் கூடாது.
8. இருளில் அடுப்பு எரித்தால் குழந்தைகளுக்கு நல்லதல்ல
அடுக்களைக்கான அடிப்படை சாஸ்திரம்
1. சமைக்கும்போது சமைப்பவர் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். இது நேர்மறையான சிந்தனைகளை உருவாக்கும்
2. சமைக்கும் இடத்திற்கு அருகே வாஷ்பேசின் இருந்தால் அது தம்பதிகளுக்கு இடையே விரிசலை உண்டாக்கும்.
3. வடக்கு அல்லது வடகிழக்கு திசைகளில் வாஷ் பேசின் வைத்திருக்க வேண்டும்.
4. தண்ணீர் தொட்டி வடக்கு அல்லது வடகிழக்கு திசை நோக்கி இருக்கக் கூடாது.
5. சமையலறையின் வடக்கு, கிழக்கு, வடகிழக்கு திசையில் ஜன்னல் இருக்க வேண்டும்.
6. ஃப்ரிட்ஜ் எனப்படும் குளிரூட்டும் பெட்டியை தென் மேற்கு திசை நோக்கி வைக்க வேண்டும்.
7. தானியங்களை தென் மேற்கு நோக்கி வைக்க வேண்டும். அவ்வாறு வைத்தால் வளம் பெருகும்.
8. வடகிழக்கில் அடுப்பு எரித்தால் அது நோய் தரும்
9. தென் மேற்கில் அடுப்பு எரிந்தால் வீட்டில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக நோய் நொடியின்றி வாழ்வார்கள்.
10. வடக்கு நோக்கி நெருப்பு எரிந்தால் சம்பாத்தியம் செலவாகும்.
11. தென் கிழக்கில் அடுப்பு எரிந்தால் மகிழ்ச்சி தங்கும்.
12. அடுப்பை சமையலறைக்கு நடுவில் வைக்கக் கூடாது.
சமையலறையில் வாஸ்துப்படி அழகான நிறங்களான வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு, இளஞ்சிவப்பு, மற்றும் பச்சை நிற பெயிண்ட்டுகளை அடிப்பது சிறந்தது. உணவு உண்ணும் அறைக்கு வாஸ்துப் படி பெயிண்ட் அடிக்க விரும்புபவர்கள் வெளிர் நிறங்களைத் தான் அடிக்க வேண்டும். அதிலும் பிங்க், பச்சை மற்றும் நீலம் போன்ற வண்ணங்களை தீட்டுவதால் புத்துணர்வை தரும். குறிப்பாக, சமையல், டைனிங் அறைகளுக்கு கருப்பு அல்லது கருப்பு மற்றும் வெள்ளை கலந்த நிறங்களை அடிக்காமல் தவிர்ப்பது நல்லது.