மேலும் அறிய

வாஸ்து டிப்ஸ்: இந்த 10 செடிகளை வீட்டுக்குள் வளர்த்து பலன்களை அள்ளுங்கள்!

வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் வைத்து வளர்க்க உகந்த செடிகள் பற்றி மைபண்டிட் என்ற வாஸ்து நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் கல்பேஷ் ஷா பல்வேறு ஆலோசனைகளைக் கூறியுள்ளார்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி சில செடிகளை வீட்டில் வைத்து பராமரிப்பது நிறைவான நலனைத் தரும். அது குறித்து மைபண்டிட் என்ற வாஸ்து நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் கல்பேஷ் ஷா பல்வேறு ஆலோசனைகளைக் கூறியுள்ளார்.

ஸ்நேக் ப்ளான்ட்:

இது மிகக்குறைந்த பராமரிப்பு மட்டுமே தேவைப்படும் ஒரு செடி. இது இரவிலும் கார்பன் டை ஆக்ஸைடை ஆக்சிஜனாக மாற்றித்தரும் எனக் கூறப்படுகிறது. சுற்றுப்புறத்தில் உள்ள காற்றின் நச்சுக்களை அகற்றும். இது நாசாவின் உயர் தர காற்று சுத்திகரிப்பு செடிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

பீஸ் லில்லி

பீஸ் லில்லி செடியும் காற்றை சுத்திகரிக்கக் கூடியது. அறையில் ஈரப்பதத்தை தக்கவைக்கும். ஆனால் இந்தச் செடி விஷத்தன்மை கொண்டது. அதனால் குழந்தைகள் இருந்தால் கவனம் தேவை.

லாவண்டர்

லாவண்டர் செடிகள் பொதுவாக எண்ணெய் தயாரிக்க பயன்படுகின்றன. லாவண்டர் ஆயில் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். மன அழுத்தத்தைக் குறைக்கும். மனதிற்கு அமைதி நல்கும். நன்றாக தூக்கம் தரும்,

ஃபிலிப்பைன் எவர்கிரீன்

ஃபிலிப்பைன் எவர்கிரீன் செடியை சைனீஸ் எவர்கிரீன் என்றும் கூறுகின்றனர். இதனை வீட்டினுள் வளர்ப்பது எளிது. இதற்கு நிறைய சூரியஒளி தேவையில்லை. 

இங்கிலிஷ் ஐவி

இது தோட்டச் செடிகளில் மிகவும் முக்கியமானது. இது காற்றில் உள்ள பென்சீன், ஸைலீன், ஃபார்மால்டிஹைட் ஆகியனவற்றை கலையும் என்று கூறப்படுகிறது. அதனால் இதனை படுக்கையறையில் வைப்பது உகந்ததாகும். இது பல ஒவ்வாமைகளில் இருந்து விடுவிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெவில்ஸ் ஐவி

இதுவும் நாசாவின் உயர்தர காற்று சுத்திகரிப்பு தன்மை கொண்ட செடிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. காற்றில் உள்ள நச்சுத் தன்மையை அகற்றவல்லது.

ரப்பர் ஃபிக்

இது பார்ப்பதற்கு அழகான செடி மட்டுமல்ல இதில் ஒவ்வாமை எதிர்ப்புத் தன்மை நிறைவாக உள்ளது. இது காற்றை தூய்மைப்படுத்துகிறது. இதுவும் வளர்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் மிகவும் எளிதானது. இதில் நிறைய ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி பண்புகள் உள்ளன.

ஃபெர்ன்ஸ்

இது மற்றுமொரு அழகான செடி. இது காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைட், ஸைலீன், டொலுவீன் ஆகியனவற்றை வடிகட்டி சுத்தமான காற்றாக தரும். இது அறையை சுத்தமாக வைக்க உதவும். இது ஒரு சிறந்த உள் அலங்கார செடி.

கற்றாழை

கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளர்ப்பதற்கு ஏற்ற ஒரு மருந்துச் செடி ஆகும். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு அழகுச் சாதனங்கள் மருந்துப் பொருட்கள் தயாரிப்பதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுகின்றது. கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்” எனப்படும் “கூழ்” சருமத்தின் ஈரத்தன்மையை (Moisture) பாதுகாக்கப் பயன்படுகிறது. இரவிலும் ஆக்சிஜன் தரக்கூடியது கற்றாழை.

சாமந்தி பூ

செவ்வந்திப்பூவை சாமந்திப்பு, சிவந்திப்பூ என பலவாறு அழைக்கின்றனர். இந்தியா முழுவதும் வளரக் கூடிய செடியான இது, மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை, நீலம் போன்ற நிறங்களில் பூக்கும். இவற்றோடு சீமைச் சாமந்திப்பூ என வேறொரு பிரிவும் உண்டு. ஆனால் இவற்றின் மருத்துவக் குணங்கள் அனைத்தும் ஒன்றே. உடலில் எத்தகைய பாதிப்பு ஏற்பட்டாலும் அதன் பாதிப்பு முதலில் தலைவலியாகத்தான் வெளிப்படும். இந்தத் தலைவலி நீங்க செவ்வந்திப் பூவின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து சாப்பிடலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைப்பு செய்திகள்

பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மை? முன்னோர்களின் பழக்கத்தில் மறைந்திருக்கும் அறிவியல்
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மை? முன்னோர்களின் பழக்கத்தில் மறைந்திருக்கும் அறிவியல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
Embed widget