மேலும் அறிய

குளிர் காலம் முடிந்தும் விடாது விரட்டும் பனி.. குளிரை தடுக்க அருந்த வேண்டிய பானங்கள்...!

குளிர் காலம் முடிந்தும் பனிமூட்டமானது காலை பாடாய் படுத்தி வருகிறது. அந்த நேரத்தில் நம் உள்ளம் தேடுவதெல்லாம் இதமான ஒரு பானம்.

குளிர் காலம் முடிந்தும் பனிமூட்டமானது காலை பாடாய் படுத்தி வருகிறது. அந்த நேரத்தில் நம் உள்ளம் தேடுவதெல்லாம் இதமான ஒரு பானம். அது சிலருக்கு தேநீராக இருக்கும். இன்னும் சிலரும் கடுங்காப்பியாக இருக்கும். ஆனால் குளிர் காலத்தில் சுவைக்காக மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்காகவும் சில பானங்களை நாம் பருக வேண்டும்.

துளசி தேநீர்:

துளசி தேநீர் என்பது உடலில் எதிர்ப்பு சக்தியை சேர்க்கும். இதில் கொஞ்சம் இஞ்சியும், தேனும் கலந்து சில துளிகள் எலுமிச்சை சேர்த்து அருந்தினால் அதன் ருசியே தனி. ஒரு பாத்திரத்தில் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும் அதில் சில துளசி இலைகளையும், இஞ்சியையும் சேர்க்கவும். வாசனைக்காக கொஞ்சம் ஏலக்காய் சேர்க்கலாம். சில துளிகள் எலுமிச்சை சாறும் சேர்க்கலாம். பின்னர் அடுப்பை மிதமான தீயில் வைத்து அந்தத் தண்ணீர் இரண்டு கோப்பை அளவாகக் குறைக்கவும். துளசி தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும். அதில் கொஞ்சம் எலுமிச்சை சாறும், தேனும் சேர்த்தால் அட்டகாசமாக இருக்கும்.

காஷ்மீரி காவா:

குளிர் காலத்தில் காஷ்மீர் மக்கள் வழக்கமாக ஒரு பானத்தை அருந்துவார்கள். நடுக்கும் குளிரில் அவர்களுக்கு அது பரம இதம் தரும் பானம். நாமும் கூட குளிர் காலத்தில் அதை அருந்த முயற்சிக்கலாம். இதற்கு லவங்க பட்டை, ஏலக்காய், குங்குமப்பூ, ரோஜா இதழ் ஆகியன தேவை. தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதில் ஏலக்காய் தட்டிப் போடவும். அதன் கூடவே லவங்கப் பட்டையை சேர்க்கவும்.5 முதல் 6 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர் அதில் கொஞ்சம் ரோஜா இதழ், க்ரீன் டீ தூள் சேர்க்கவும். அடுப்பை அனைத்துவிட்டு 6 முதல் 7 நிமிடங்களுக்குப் பின்னர் பருகலாம்.
 
 லவங்கப்பட்டை தேநீர்: 

லவங்கப்பட்டை தேநீர் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். பல பெரிய நோய்களின் அபாயத்தைக் குறைக்க இது செயல்படுகிறது. மறுபுறம், இலவங்கப்பட்டை பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும். மெக்னீசியம், இரும்பு, புரதம், தாமிரம் போன்ற சத்துக்கள் இதில் காணப்படுகின்றன.

இரண்டு கப் தண்ணீர், ஒரு அங்குல இலவங்கப்பட்டை மற்றும் ஒரு அங்குல இஞ்சியை ஒரு பாத்திரத்தில் கொதிக்கவிடவும். பாத்திரத்தை மூடி, சிறிது நேரம் கொதிக்கவிடவும். இதன் காரணமாக இலவங்கப்பட்டையின் சுவை மற்றும் அதன் பண்புகள் தண்ணீரில் இரங்கும். சிறிது நேரம் கழித்து, இலவங்கப்பட்டை தண்ணீரில் அரை டீஸ்பூன் கிரீன் டீ சேர்த்து, அதன் பிறகு கேஸை அணைக்கவும். பிறகு 3 நிமிடம் கழித்து வடிகட்டி வடிகட்டவும். இப்போது அதில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கவும்.

மிளகு தேநீர்:

என்னது மிளகில் தேநீரா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் இதன் நன்மைகள் அதிகமென்பதால் இதை நீங்கள் நிச்சயமாக ட்ரை பண்ண வேண்டும். மிளகை நுணுக்கி கொதிக்கும் நீரில் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் அதில் எலுமிச்சை சாறு சேர்க்கவும். விரும்பினால் அதில் கொஞ்சம் தேன் சேர்க்கலாம். விரும்பினால் கொஞ்சம் இஞ்சியும் சேர்க்கலாம். தலைவலி, சளி தொந்தரவு இருக்கும்போது இதனைப் பருகலாம். உடல் எடை குறைப்புக்கும் இந்த தேநீர் உதவும்.

க்ரீன் டீ வித் ஹனி லெமன்:

க்ரீன் டீ உடல் எலுமிச்சை சாறு சேர்த்து அருந்தினால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். உங்கள் உடலுக்கு வைட்டமின் சி யை கொண்டு சேர்க்க இதைவிட வேறு சிறந்த வழியில்லை. தண்ணீரை கொதிக்க வைத்து அதில் க்ரீன் டீ இலைகளை சேர்க்கவும். பின்னர் அதை சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இதில் கொஞ்சம் எலுமிச்சை தோலும் சேர்க்கலாம். தேவையான அளவு தேன் சேர்த்து அருந்தலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
India GDP Japan: புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
RailOne App Discount: முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
India GDP Japan: புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
RailOne App Discount: முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
Trump Warns Iran: “அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அழித்துவிடுவோம்“; ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரான் பதிலடி
“அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அழித்துவிடுவோம்“; ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரான் பதிலடி
Affordable Mileage Cars 2026: புத்தாண்டு பிறந்ததும் கார் வாங்கப் போறீங்களா.? குறைந்த விலை, நிறைந்த மைலேஸ் தரும் கார்கள் லிஸ்ட்
புத்தாண்டு பிறந்ததும் கார் வாங்கப் போறீங்களா.? குறைந்த விலை, நிறைந்த மைலேஸ் தரும் கார்கள் லிஸ்ட்
Ukraine Putin Trump: புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
Embed widget