Tea Tree Oil : தேயிலை மர எண்ணெயால் இத்தனை நன்மைகளா? இந்த லிஸ்ட்ட படிங்க..
டீ ட்ரீ ஆயில் பிரபலமான எசென்ஷியல் ஆயில் ஆகும். பல நூற்றாண்டுகளாக அதன் மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
டீ ட்ரீ ஆயில் (தேயிலை மர எண்ணெய்) பிரபலமான எசென்ஷியல் ஆயில் ஆகும். தேங்காயெண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்று தான் இதுவும். டீ ட்ரீ ஆயில் தேயிலை எண்ணெய் என்பதால் இதை தேயிலையிலிருந்து தயாரிக்கிறார்களோ என்று நினக்கலாம். ஆனால் இரண்டும் வெவ்வேறு.
பல நூற்றாண்டுகளாக அதன் மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியா வைச் சேர்ந்த மெலலூக்கா ஆல்டெர்னிஃபொலியா என்னும் செடியின் இலைகளில் இருந்து பெறப்படும் இந்த டீ ட்ரீ ஆயில் ஏராளமான சரும பராமரிப்பு பொருட்களின் மூலப் பொருளாக உபயோகிக்கப்படுகிறது. சருமத்தில் மேலோட்டமாக பயன்படுத்துகையில் முகப் பருக்களை போக்குவது, தோல் எரிச்சலை ஆற்றுவது, ஃபங்கல் தொற்றுக்களை எதிர்ப்பது , தோல் அரிப்பை போக்குவது மற்றும் சருமத்தில் எண்ணெய் பிசுக்கை அகற்றுவது ஆகிய வேலைகளை இந்த டீ ட்ரீ ஆயில் சிறந்து செயல்படுகிறது.
முகப்பருவை நீக்குதல்
டீ ட்ரீ ஆயில் ஆண்டி பேக்டீரியல் அன்பதால் முகப்பருவை உண்டாக்கும் பேக்டீரியாவை எதிர்த்து செயலாற்றி முகப்பருவை நீக்குகிறது, முகப்பருவால் ஏற்படும் எரிச்சலையும் நீக்குகிறது.
சரும எரிச்சலை ஆற்றுகிறது
டீ ட்ரீ ஆயில் ஆண்டி இன்ஃப்லமேட்டரி மற்றும் ஆண்டி செப்டிக் பண்புகளை கொண்டுள்ளதால் சருமத்தில் ஏற்படும் எரிச்சலை குறைப்பதோடு எரிச்சல் ஏற்படுத்தும் பருக்களை ஆற்றவும் செய்கிறது. எக்ஸேமா, ஸொரியாஸிஸ் அல்லது டெர்மடிடிஸ் ஆகிய சரும நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டீ ட்ரீ ஆயில் மிகவும் பயனலிக்கும்.
பூஞ்சை தொற்றுக்களை எதிர்க்கும்
டீ ட்ரீ அயிலில் ஆண்டி ஃபங்கல் பண்புகள் உள்ளதால் இது சேற்றுப் புண் மற்றும் படை போன்ற பூஞ்சை தொற்றுக்களை எதிர்த்து போறாடும்.
சரும அரிப்புக்கு நிவாரணம் தரும்
டீ ட்ரீ ஆயிலின் ஆண்டி இன்ஃப்லமேட்டரி பண்பு பூச்சிக்கடி, அலர்ஜியால் ஏற்படும் சரும அரிப்பை நீக்க உதவும்.
சருமத்தில் எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும்
சிலரது சருமம் என்னதான் சோப்பு போட்டு தேய்த்துக் குளித்தாலும் அதில் ஒருவித எண்ணெய் பிசுபிசுப்பு ஏற்படும். அதனைப் போக்க டீ ட்ரீ ஆயில் நல்ல பலன் தரும்.
பருவ கால மாற்றங்கள், சருமத்தில் படியும் மாசுக்கள், ஹார்மோன் பிரச்சினைகள் போன்ற பல காரணங்களால் முகத்தில் பருக்கள் உண்டாகின்றன. இந்த பருக்களை சரிசெய்ய டீ ட்ரி ஆயில் உதவுகிறது. சருமத்தில் சீபம் சுரப்பையும் அதிகப்படியான எண்ணெய் சுரப்பையும் கட்டுப்படுத்துவதன் மூலம் முகப்பருக்களை அடியோடு விரட்டுவதோடு, வராமலும் தடுக்கிறது.
View this post on Instagram