மேலும் அறிய

Tirupati Laddu: அசைக்க முடியல.. லட்டு வயசு 308... திருப்பதி லட்டு சுவையின் ஃபார்முலா தெரியுமா?

Tirupati: திருப்பதி லட்டு ஏன் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. திருப்பதியில் மூன்று வகையான லட்டு தயாரிக்கப்படுகின்றன

திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும் என்பது பலரது நம்பிக்கையாக இருந்து வருகிறது. திருப்பதி ஏழுமலையானை தரிசித்து வந்தால் வாழ்க்கையில் திருப்பம் எற்படும் என்பதற்காக கோயிலுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பதி என்றதும் ஏழுமலையான் நினைவோடு அங்கு பிரசாதாமக வழங்கப்படும் ‘லட்டு’ சேர்ந்துகொள்வதை தவிர்க்க முடியாது. திருப்பதி லட்டு என்றால் அவ்வளவு பிரபலம். லட்டின் தனித்துவ சுவைக்கு அடிமையாகாதோர் இல்லை என்றே சொல்லலாம். அதுவும் தரிசனத்திற்கு சென்று திரும்புவர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது; கூடுதல் லட்டு வேண்டுமானால் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். 

’திருப்பதி போயிட்டு வந்தேன்’ என்று யாரிடம் சொன்னாலாலும் ‘லட்டு எங்கே’ என்பதுதான் உடனடியாக வரும் கேள்வியாக இருக்கும். திருப்பதி லட்டுவிற்கு மட்டும் எப்படி தனிச்சுவை இருக்கிறது? இது எப்படி செய்யப்படுகிறது? திருப்பதியில் பிரசாதமாக லட்டு கொடுக்கும் வழக்கம் எப்படி வந்தது உள்ளிட்டவற்றை இக்கட்டுரையில் காணலாம். 

308 ஆண்டுகால வரலாறு

1715 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2- ஆம் தேதியில் இருந்து பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கும் நடைமுறை தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், 1803 ஆம் ஆண்டிலிருந்துகோயிலில் லட்டு விற்பனை செய்யப்படும் நடைமுறை தொடங்கியது. 308 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட இந்த லட்டு பிரசாதம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தனியே ஒரு துறை அமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டு வருகிறது.

நாள்தோறும் பல லட்சக்கணக்கான லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. உற்சவ நாட்களில் குறைந்தது 5 லட்சம் லட்டுகள் வரை ஸ்டாக் இருக்கும் என்று கூறப்படுகிறது. இத்தனை அண்டுகளும் இதன் சுவை, மணம் மாறமால் இருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் ஒன்றாக உள்ளது. மேலும், இதை கல்யாணம் என்பவர் வடிவமைத்துள்ளார். அலங்கார பிரியரான பெருமாளுக்கு பெரிய அளவில் லட்டு பிரசாதமாக வழங்கப்பட வேண்டும் என முடிவெடுத்து பெருமாளை வழிபட வருபவர்களுக்கு பெரிய திருப்பதி லட்டு வழங்கப்பட்டு வந்தது. இதன் அளவு நாளடைவில் சிறிதாக மாறிவிட்டது. 

திருப்பதியில் மூன்று வகையான லட்டு தயாரிக்கப்படுகின்றன. ‘அஸ்தானம்’, கல்யாணோத்வசம் புரோக்தம் என மூன்று வகைகளாக தயாரிக்கப்பட்டு வருகிறது. திருப்பதியில் மூன்று வகையான லட்டு தயாரிக்கப்படுகின்றன. ‘அஸ்தானம்’, கல்யாணோத்வசம் புரோக்தம் என மூன்று வகைகளாக தயாரிக்கப்பட்டு வருகிறது. விஷேச நாட்களில் 750 கிராம்  எடையுடன் தயாரிக்கப்படும் லட்டு முக்கியமானவர்களுக்கு வழங்கப்படுகிறது. iது பிற லட்டுக்களைவிட மிகுதியான அளவில் முந்திரி, பாதாம், குங்குமப்பூ போன்றவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. கோயிலில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளின்போது கல்யாணோத்வ லட்டு தயாரிக்கப்படும். இது அளவில் சற்று பெரியதாக இருக்கும். கோயில் உற்சவங்களில் கலந்துகொள்பவர்களுக்கு இது பிரசாதமாக வழங்கப்படுகிறது. அதோடு, 175 கிராம் எடை கொண்ட புரோக்தம் லட்டு பக்தர்களுக்கு கட்டணமின்றி (ஒரு லட்டு) வழங்கப்படுவதாகும். இப்படி பல வகைகளில் லட்டு வழங்கப்படுகிறது. டோக்கன் பெற்று கொண்டு லட்டு வாங்கலாம். பணம் செலுத்தி கூடுதல் லட்டு பெற்று கொள்ளலாம். 

புவிசார் குறியீடு

 2009 ஆம் ஆண்டு திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீட்டு வழங்கப்பட்டது. பின்னர், திருப்பதி லட்டுக்கு காப்புரிமையும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பதி லட்டு என்ற பெயரில் யாராலும் இதை தயாரிக்க முடியாது.

திருப்பதி லட்டு ஸ்பெஷல் ஃபார்முலா

 கடலை மாவு, சர்க்கரை, முந்திரி, நெய், ஏலக்காய், எண்ணெய், கற்கண்டு, பாதாம் பருப்பு, உலர் திராட்சை என பல பொருட்கள் சேர்ந்த்து திருப்பதியில் லட்டு தயாரிக்கப்படுகிறது. முன்பு, ஏராளமான நபர்கள் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இப்போது இயந்திரங்கள் பயன்படுத்தியும் லட்டு தயாரிக்கப்படுகிறது. திருப்பதி லட்டு சாப்பிடுவதற்கு ஒரு கதையே சொல்லப்படும். திருப்பதி லட்டை நினைத்தப்படி, யார் வேண்டுமானும் சாப்பிட்டுவிட முடியாது. ஏழுமலையான் யாரை காண விரும்புகிறாரோ அவர்களே திருப்பதி லட்டு சாப்பிட கொத்து வைத்தவர்கள் - இப்படியான நம்பிக்கைகளும் பக்தர்களிடையே சொல்லப்படுவதுண்டு.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget