"அப்புறம், எப்போ கல்யாணம்?..." : கேள்வியை எதிர்கொள்வது சிரமமா இருக்கா? இதோ வழி!
இந்த கேள்வியை எதிர்கொள்வது எப்படி? இந்த அழுத்தத்திற்கு என்னதான் வழி… பின்வரும் கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், அதற்கான வழி உங்களுக்கி கிடைக்கும்.
"அப்புறம், எப்போ கல்யாணம்?", இந்த கேள்வியை 24 வயதானால் எதிர்கொள்ளாத இளைஞர்கள் கிடையாது. பெண்கள் என்றால் இன்னும் சிரமம். பள்ளி முடித்தது முதலே இந்த கேள்வியை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் நம் ஊரில் உண்டு. இந்த கேள்வியால் பல நேரங்களில் மன அழுத்தத்தை சந்தித்திருப்போம். அதனை எதிர்கொள்வதே சிரமமாக இருக்கும். அதன் காரணாமாகவே சிலர் குடும்ப நிகழ்வுகளில் கலந்து கொள்வதைஎ தவிர்ப்பார்கள். பலர் உறவினர்கள் வீட்டுற்கு செயல்வதை தவிர்ப்பார்கள். இந்த கேள்வியை எதிர்கொள்வது எப்படி? இந்த அழுத்தத்திற்கு என்னதான் வழி… பின்வரும் கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், அதற்கான வழி உங்களுக்கி கிடைக்கும்.
நீங்கள் திருமணத்திற்கு தயாரா?
- நீங்கள் திருமணம் செய்து கொள்ள தயாரா, இல்லையா? என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
- ஆம் எனில், அது உண்மையிலேயே உங்கள் சொந்த விருப்பமா? அல்லது உங்கள் குடும்பத்தையும் சமூகத்தையும் மகிழ்விப்பதற்கா?
- நீங்கள் உண்மையிலேயே திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருந்தாலும், மேலும் வேறென்னவோ தயக்கங்கள் இருப்பதாக உணர்ந்தால், நீங்கள் என்ன தேடுகிறீர்கள் என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
- நீங்கள் பொறுப்புகளை ஏற்க தயாரா? என்ற கேள்வியை கேட்டுக்கொள்ளுங்கள்.
பதில் கண்டறிய சிரமமாக இருக்கிறதா?
- உட்கார்ந்து உங்கள் முன்னுரிமைகள் என்னென்ன என்று வரிசைப்படுத்துங்கள்.
- ஒருவேளை நீங்கள் மேலதிக கல்வியைத் தொடர விரும்பலாம் அல்லது ஒரு சிறந்த வேலையைப் பெறும் முயற்சியில் இருக்கலாம், இதையெல்லாம் யோசித்து பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம். அதிலேயே உங்களுக்கான பதிலும் அடங்கி இருக்கும்.
அதே காரணத்தை சுற்றத்தாரிடம் தெரிவியுங்கள்
- அதையே உங்கள் குடும்பத்துடனும் சொல்லுங்கள். உங்கள் நண்பர்களையோ அல்லது குடும்பத்தினரையோ அழைத்து, அவர்களிடம் இருந்து உங்களுக்கு என்ன தேவை என்பதை அவர்களிடம் சொல்லுங்கள்.
- இது குறித்து பேசுவது உங்களை மென்மேலும் அழுத்தத்தை தருகிறது என்றாலோ, உங்களை அது கவலையடையச் செய்தாலோ அவர்களிடம் அதனைத் தெரிவிக்கவும்.
- அவசரப்பட்டு திருமண முடிவை எடுக்க வேண்டாம். பின்னர் வருந்துவதை விட அதிக நேரம் எடுத்து சிந்திப்பது நல்லது.
விரும்புபவரை எப்போது மணப்பது?
- திருமணம் செய்துகொள்ள போகிறவரை பற்றி தெரிந்துகொள்ள உங்களுக்கு அதிக நேரம் தேவைப்பட்டால், உங்களுக்குத் தேவையான நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
- திருமணம், எதிர்பார்ப்புகள், கவலைகள் போன்றவற்றைப் பற்றிய உங்கள் எண்ணங்களைப் பற்றி உங்கள் துணையுடன் வெளிப்படையாகப் பேசுங்கள்.
- உங்கள் முடிவுகளில் நம்பிக்கையுடன் இருங்கள், இதனிடையே உங்கள் துணைக்கு ஆதரவாகவும் இருங்கள்.
- இதற்கிடையில், விருந்துகளுக்குச் செல்லுங்கள், நிகழ்வுகளுக்குச் செல்லுங்கள், பயணங்களுக்குச் செல்லுங்கள், உங்கள் கனவுப் பல்கலைக்கழகத்தில் பதிவுசெய்து, நீங்கள் விரும்பும் பட்டத்தைப் பெறுங்கள், வேலையை தேடுங்கள்.
முடிவெடுக்கவேண்டியது யார்?
- ஒரு முக்கியமான விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள், அழுத்தம் எப்போதும் நம்மோடு இருக்கும். அதற்கு அடிபணியாத உங்கள் மன உறுதியைக் கண்டறியவும், அதுவே அதனை கடந்து வர ஒரே வழி.
- எல்லாவற்றிற்கும் மேலாக, திருமணம் செய்துகொள்ள வேண்டுமா வேண்டாமா என்று முடிவெடுக்க வேண்டியது நீங்கள் மட்டும்தானே ஒழிய, உங்கள் மீது விழும் அழுத்தம் அல்ல.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்