Dating App Love : டேட்டிங் ஆப்ஸில் சாட்டிங்..! காதலித்து திருமணம் செய்த தன்பாலின இளைஞர்கள்...! எப்படி சாத்தியமானது..?
அகன்ஷா, அலோக் இருவரும் ஒரு டேட்டிங் ஆப்பில் தான் பழக ஆரம்பித்தனர். அவர்களுக்குள் வேவ் லெந்த் பொருந்திப்போக அந்தப் பழக்கம் நட்பானது.
![Dating App Love : டேட்டிங் ஆப்ஸில் சாட்டிங்..! காதலித்து திருமணம் செய்த தன்பாலின இளைஞர்கள்...! எப்படி சாத்தியமானது..? Swipe for love We eloped and married when our parents didn’t approve of our relationship Dating App Love : டேட்டிங் ஆப்ஸில் சாட்டிங்..! காதலித்து திருமணம் செய்த தன்பாலின இளைஞர்கள்...! எப்படி சாத்தியமானது..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/01/67eed71bd1f2878e0066f0e1e2605a72_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அகன்ஷா, அலோக் இருவரும் ஒரு டேடிங் ஆப்பில் தான் பழக ஆரம்பித்தனர். அவர்களுக்குள் வேவ் லெந்த் பொருந்திப்போக அந்தப் பழக்கம் நட்பானது. நட்பு நாளடைவில் காதலானது. இருவருமே திருமணம் செய்து கொள்ள விரும்பினர். விருப்பதை வீட்டில் தெரிவிக்க, இரு குடும்பங்களும் முட்டுக்கட்டை போட்டுள்ளன. அதிலிருந்து எப்படி மீண்டு கரம் பிடித்தனர் என்ற காதல் கதையை அலோக்கும் அகன்ஷாவும் பகிர்ந்துள்ளனர்.
ஆன்லைனில் லவ் செட்டாகும் என நினைத்தீர்களா?
நான் ஒருபோதும் ஆன்லைனில் எனக்கு பிடித்தமான நபரை சந்திப்பேன் என்று நினைத்தே இல்லை. என் காதல் சொல்லப்படும் இடம் ஓர் அழகிய காஃபி ஷாப்பாகவோ இல்லை, மும்பை தாதர் பீச்சாகவோ தான் இருக்கும் என நினைத்தேன். ஆனால் ஆன்லைனில் ப்ரபோஸ் செய்து கொண்டோம் என்று அகன்ஷா கூறினார். அவரது காதலர் அலோக், நான் டேட்டிங் ஆப் பக்கம் தலைவைத்துப் படுப்பேன் என்ரு கனவிலும் நினைத்ததில்லை. அது நடந்தது. அதைவிட ஆச்சர்யப்படும் விதமாக நடந்தது தான் எங்களின் காதல். இப்போது நினைக்கிறேன், அகன்ஷாவை டேட்டிங் ஆப்பில் பார்த்ததே என் அதிர்ஷ்டம்.
ஆன்லைன் டேட்டிங்குக்கும், காதலுக்கும் என்ன வித்தியாசம் என நினைக்கிறீர்கள்?
ஆன்லைன் டேட்டிங்கில் அந்த நபருடன் நீங்கள் வெர்ச்சுவலாக மட்டுமே பரிச்சியப்பட்டிருப்பீர்கள். ஒருவேளை அந்த நபரை நீங்கள் துணையாக தேர்ந்தெடுக்க விரும்பினால் சில சிக்கல்களும் இருக்கும். அவரைப் பற்றிய பின்புலம் எதுவுமே நேரடியாக தெரியாதல்லவா. அதே வேளையில் நோ சொல்வது ஈஸி. ஆனால், நேரில் நெருங்கிப் பழகியவரிடம் அப்படி சட்டென்று சொல்லிவிட முடியாதல்லவா?
டேட்டிங் ஆப்பில் உங்களுக்கு பிடிக்காத விஷயம் என்ன?
டேட்டிங் ஆப்பில் நான் முதன்முதலில் அலோக்கை மேட்ச் செய்தபோது அவருடன் நேருக்குநேர் நேரில் சந்தித்துக் கொள்ள முடியவில்லை. நாங்கள் ஒருவொருக்கொருவர் சில நாட்கள் பேசிக் கொண்டே இருந்தோம். அதன் பின்னர் தான் நாங்கள் இருவரும் பரஸ்பரம் நம்பிக்கை பெற்று நேரில் சந்தித்தோம் என்றார்.
அலோக் கூறும்போது, இதுபோன்ற டேட்டிங் ஆப்பில் நிறைய மிஸ்லீடிங் ப்ரொஃபைல்ஸும் இருக்கும். அதுதான் இதன் பெரும் பின்னடைவு. நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நான் அகன்ஷாவை ஆன்லைனில் சந்தித்த பின்னரும் கூட நேரில் பார்க்கும் வரை புரிதல் வரும்வரை அந்த உறவை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ரொம்பவே தயங்கினேன் என்றார்.
இது மாதிரியான விஷயங்களில் எப்போதும் உங்களின் உள்ளுணர்வு சொல்வதைக் கேளுங்கள். அது உங்களை சரியாக வழிநடத்தும்.
நானும் அலோக்கும் சந்தித்து புரிதலை ஏற்படுத்தினோம். ஒழிவுமறைவின்றி பேசினோம். எங்களுக்குப் பிடித்திருந்தது. நம்பிக்கை வந்தது. காதலும் மலர்ந்தது. ஆனால் டேட்டிங் ஆப்பில் வந்த காதல் என்பதால் எங்கள் இருவீட்டருமே ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தாலும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம். 5 ஆண்டுகளாகிவிட்டது எங்கள் இரு வீட்டாருமே வரவில்லை. ஆனாலும் நாங்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம் என்றார் அகன்ஷா.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)