(Source: ECI/ABP News/ABP Majha)
"இதெல்லாம் உண்மையாப்பு.. நீ பாத்த..” : காலம் காலமாக பரவிவரும் ஹெல்த் ரூமர்ஸை தெரிஞ்சுகோங்க..!
இதுவரை நாம் உண்மை என்று நம்பி ஏமாந்த 10 உடல் நலம் சார்ந்த ரூமர்ஸ் என்னென்ன தெரியுமா மக்களே?
நவீன உலகத்தில் எவ்வளவு தகவல் பரிமாற்றம் எளிதோ அதே அளவிற்கு தவறான தகவல்களும் பரவுவது எளிது. அதிலும் குறிப்பாக வாட்ஸ் அப் வருவதற்காக முன்பாகவும் ஒரு வதந்திகள் பரவலாக உண்மை என்று நம்பி கொண்டிருந்தோம். அவ்வாறு நாம் உண்மை என்று நம்பிய சில உடல்நலம் சம்பந்தப்பட்ட வதந்திகள் என்னென்ன?
1. பத்து சதவிகித மூளை பயன்பாடு:
பல ஆண்டுகளாக மனிதர்கள் தங்களுடைய மூளையின் 10 சதவிகித பகுதியை மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்ற நம்பிக்கை அனைவரிடமும் உண்டு. ஆனால் உண்மையில் நாம் அனைவரும் நம்முடைய மூளையின் எல்லா பகுதிகளையும் பயன்படுத்துகிறோம்.
2. ஒருநாளைக்கு 8 டம்ளர் தண்ணீர்:
தண்ணீர் குடிப்பது நமது உடம்பிற்கு மிகவும் தேவையான ஒன்று. இந்த தண்ணீர் குடிக்கும் பழக்கம் தொடர்பாகவும் நீண்ட நாட்களாக ஒரு செய்தி உண்டு. அதாவது ஒருவர் ஒருநாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதுதான். மருத்துவ உண்மைப்படி ஒருவர் ஒரு நாளைக்கு 2 முதல் 2.5 லிட்டர் தண்ணீர் அருந்தினால் போதுமானது.
3. இருட்டில் படித்தால் அல்லது அருகே அமர்ந்து டிவி பார்த்தால் கண்ணுக்கு கெடுதல்:
கண் தொடர்பாக நீண்ட நாட்களாக உள்ள கூற்று ஒன்று உள்ளது. அதாவது இருட்டில் புத்தகத்தைப் படித்தால் அல்லது அருகே அமர்ந்து டிவி பார்த்தால் கண்ணில் பாதிப்பு ஏற்படும் என்பதுதான் அது. எனினும் மருத்துவப்படி இந்தக் கூற்றில் உண்மை இல்லை.
4. ஷேவிங் செய்தால் அதிகமாக முடி வளரும்:
பல இளம் பருவ ஆண்களிடம் உள்ள முக்கியமான நம்பிக்கை ஷேவிங் செய்தால் அதிகமாக முடி வளரும் என்பது தான். ஆனால் அறிவியல் பூர்வமாக இதற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. ஷேவிங் செய்வதற்கும் முடி வளர்வதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
5. உணவு சப்ளிமெண்ட் சாப்பிடுவது நல்லது:
உணவு சப்ளிமெண்ட் என்று கூறப்படும் வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடுவது நமது உடலுக்கு நல்லது. இருப்பினும் இந்த வைட்டமின் அளவு நம்முடைய உடம்பில் தேவையைவிட அதிகமாக இருந்தால் புற்றுநோய் உண்டாக்கும் அபாயம் உள்ளது. ஆகவே மருத்துவர் அறிவுரையின்றி உணவு சப்ளிமெண்ட் சாப்பிடுவது எப்போதும் உடம்பிற்கு நல்லது அல்ல.
6. மாதவிடாய் காலத்தில் கருத்தரிக்க முடியாது:
பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் கருத்தரிக்க வைப்பு குறைவு என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. ஆனால் அறிவியல் படி பார்த்தால் பெண்ணின் உடம்பில் ஸ்பெர்ம்ஸ் ஒரு வாரம் இருக்கும் தன்மையுடையது. ஆகவே அந்த ஸ்பெர்ம்ஸ் உதவியுடன் மாதவிடாய் காலத்திலோ அல்லது அதற்கு பிறகோ கருத்தரிப்பு ஏற்படலாம்.
7.பபுள் கம் விழுங்கினால் 7ஆண்டுகள் வரை வயிற்றில் இருக்கும்:
பபுள் கம் சாப்பிடும் போது தெரியாமல் அதை விழுங்கி விட்டால் அது 7 ஆண்டுகள் வரை நம்முடைய வயிற்றில் இருக்கும் என்ற வதந்தி உள்ளது. ஆனால் உண்மையில் பபுள் கம் நம் உடம்பில் நாற்சத்துகள் எப்படி செறித்து வெளியேறுகிறதோ அதேபோல் அதுவும் செறிமானமாகி வெளியேறும்.
8.காரமான உணவு சாப்பிட்டால் அல்சர்:
நீண்ட நாட்களாக காரணமான உணவு சாப்பிட்டால் வயிற்றில் புண் ஏற்பட்டு அல்சர் நோய் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. காரணமான உணவைவிட அதிகமாக வலி நிவாரணத்திற்கு உட்கொள்ளும் மருந்துகள் மற்றும் ஹெலிகோபாக்டர் பைலோரி என்ற பாக்டீரியா ஆகியவை அல்சர் நோயை ஏற்படுத்தும்.
9. அதிகமாக சொடக்கு முறித்தால் வாதநோய் வரும்:
பலருக்கு இயல்பாக அதிகமாக சொடக்கு முறிக்கும் பழக்கம் உள்ளது. அப்படி அடிக்கடி சொடக்கு முறித்தால் அவர்களுக்கு வாதம் நோய் வரும் என்ற கூற்று உள்ளது. ஆனால் உண்மையில் அடிக்கடி சொடக்கு முறிப்பவர்களுக்கு எலும்பு சற்று வலு இழந்து இருக்கும். ஆனால் வாதம் நோய் வர அது காரணமாக இருக்காது.
10.குளிர் காலத்தில் அதிகமாக சளி பிடிக்கும்:
எப்போதும் குளிர்காலம் வந்துவிட்டால் பலருக்கு சளி பிரச்னை வரும். இதை பார்த்து பலரும் கோடை காலத்தில் சளிவராது குளிர்காலத்தில் மட்டும்தான் வரும் என்ற கருத்தை கொண்டுள்ளனர். ஆனால் குளிர் காலம் மற்றும் கோடைக்காலம் ஆகிய இரண்டிலும் சளி பிடிக்கும் வாய்ப்பு அதிகம்தான். குளிர் காலத்தில் கிருமிகள் வேகமாக பருவும். இதன் காரணமாக அதிக பேருக்கு எளிதாக சளி பிடிக்கும். குளிரால் நேரடியாக சளி பிடிக்கும் என்பதில் உண்மையில்லை
மேலும் படிக்க: Vegetarian Soups in Monsoon: சுவையும், ஆரோக்கியமும் - மழைக்காலத்துக்கு நச்சுனு 5 வெஜ் சூப்!