(Source: ECI/ABP News/ABP Majha)
Raksha Bandhan 2022: இந்த வருடம் ரக்ஷா பந்தன் எப்போது ? ஆகஸ்ட் 11 ? ஆகஸ்ட் 12 ?
Raksha Bandhan 2022 Date: இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் தேதி குறித்து பெரும் குழப்பம் நிலவுகிறது.
ரக்ஷா பந்தன் :
சகோதர சகோதரிகளின் உறவை பலப்படுத்தும் பண்டிகையாக கருதப்படுவது ரக்ஷா பந்தன்(Raksha Bandhan) . இந்த பண்டிகை தென்னிந்தியாவில் ஒரு சில இடங்களில் கொண்டாடப்பட்டாலும் , வட இந்தியாவில் பெரும்பாலானோர் கொண்டாடும் பண்டிகையாக உள்ளது. இந்த பண்டிகையின் போது வித விதமாக அலங்காரம் செய்யப்பட்ட அல்லது வெவ்வேறு வகைகளிலான ராக்கி என்னும் கயிற்றினை சகோதரிகள் , சகோதர்களின் கைகளில் கட்டி அவர்களுக்கு ஆரத்தி எடுத்து இனிப்புகளை வழங்குவார்கள். இது அவர்களின் நலம் மற்றும் வளம் வேண்டி சகோதரிகள் செய்யும் முறையாக கருதப்படுகிறது. பதிலுக்கு சகோதர்கள் அவர்களுக்கு ஆசி வழங்கி , பரிசுப்பொருட்களை வழங்கி அவர்களின் பாதுகாப்பிற்காக உறுதி அளிக்கிறார்கள் என்பதுதான் பண்டிகையின் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.
View this post on Instagram
ரக்ஷா பந்தன் 2022 எப்போது?
இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் தேதி குறித்து பெரும் குழப்பம் நிலவுகிறது. ரக்ஷா பந்தன் ஆகஸ்ட் 11, வியாழன் அன்று வரும் என்று சிலர் நம்புகிறார்கள், மற்றவர்கள் ஆகஸ்ட் 12 வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படும் என்று கூறுகின்றனர்.த்ரிக் பஞ்சாங்கத்தின் கூற்றுப்படி, ராக்கி கட்டுவதற்கும், ரக்ஷா பந்தனில் சடங்குகளைச் செய்வதற்கும் சிறந்த நேரம் அபராஹ்னா ஆகும் என்கின்றனர்.பத்ராவின் போது ரக்ஷா பந்தன் சடங்குகள் செய்யக்கூடாது, ஏனெனில் இது தீங்கிழைக்கும் நேரம் என்று இந்து மத நூல்கள் நம்புகின்றன, இது அனைத்து மங்களகரமான வேலைகளுக்கும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும், எந்த ஒரு சுப காரியத்தையும் தொடங்கும் முன் பத்ரா முடிவடையும் வரை காத்திருக்க வேண்டும் என சிலர் நம்புகின்றனர்.
ட்ரிக் பஞ்சாங்கத்தின்படி, ரக்ஷா பந்தன் பத்ரா முடிவு நேரம் இரவு 08:51 மணிக்கு இருக்கும். எனவே, ரக்ஷா பந்தன் ஆகஸ்ட் 11, வியாழன் மாலை தொடங்கி ஆகஸ்ட் 12 வெள்ளிக்கிழமை வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram