கட்டிப்பிடி வைத்தியம் சும்மா இல்ல.. இதுல இவ்ளோ ஹெல்த் நன்மைகள் இருக்கா?
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமல்ஹாசன் ஜாகிருக்கு செய்த கட்டிப்பிடி வைத்தியம் அதன்பின்னர் ரொம்பவே பிரபலமாச்சு. உண்மையில் ஒருவொருக்கொருவர் ஆரத் தழுவிக் கொண்டால் உலகில் பல பிரச்சனைகளும் முடிந்துவிடும் எனலாம்.
முன்பின் அறிமுகமற்ற புதிய நபர்களை கட்டியணைத்து அவர்களுக்கு வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கென்றே 'ஃப்ரீ ஹக்ஸ்' எனப்படும் கட்டிப்புடி இயக்கம் ஒன்று உதயமாகியுள்ளது.
இந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் தற்போது உலகம் முழுவம் பரவி வருகின்றனர். முக்கிய நகரங்களில் புதிய நபர்களை பார்க்கும்போது அவர்களின் அருகே சென்று மார்போடு ஆரத்தழுவி வாழ்த்துவது இவர்களின் வாடிக்கை.
அதை எல்லோருமே பின்பற்றலாம் எனக் கூறுகின்றனர் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்.
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமல்ஹாசன் ஜாகிருக்கு செய்த கட்டிப்பிடி வைத்தியம் அதன்பின்னர் ரொம்பவே பிரபலமாச்சு. உண்மையில் ஒருவொருக்கொருவர் ஆரத் தழுவிக் கொண்டால் உலகில் பல பிரச்சனைகளும் முடிந்துவிடும் எனலாம்.
அட என்னங்க கட்டுக்கதையெல்லாம் சொல்றீங்க என்று கேட்காதீர்கள்.. கட்டிப்பிடிப்பதால் உடலில் அறிவியல் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளும் தெரிவித்துள்ளன. கட்டிப்பிடிப்பதன் மூலம் உடலில் ஆக்ஸிடோசின் ஹார்மோன் சுருக்குமாம். இது மகிழ்ச்சியை உருவாக்கும் ஹார்மோன். இந்த ஹார்மோன் சுரப்பதால் மனம் லேசாகி உடல் உபாதைகள் சீராகும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
ஸ்ட்ரெஸ் பஸ்டர்:
கட்டிப்பிடிப்பதால் ஏற்படும் மிகப்பெரிய நன்மை ஸ்ட்ரெஸ் ரிலீஸ். அதாவது மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம் அதனாலேயே இது பரவலாக பரிந்துரைக்கப்படுகிறது. நாம் ஒருவரை ஆரத்தழுவும்போதோ அல்லது நம்மை ஒருவர் கட்டிப் பிடிக்கும்போது ஸ்ட்ரெஸ்ஸை உருவாக்கும் ஹார்மோன்களை உருவாக்கும் மூளையின் செல்கள் ஹைபர் ஆக்டிவ் ஆகும். இதனால், அந்தப் பகுதி ஹைபர் ஆக்டிவாகி மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரக்கும் எனக் கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
நோய்களைத் தடுக்கும்
சைக்காலஜிக்கல் சயின்ஸ் என்ற மருத்துவ இதழில் பிரசுரிக்கப்பட்ட ஓர் ஆய்வுக் கட்டுரையில் கட்டிப்பிடி வைத்தியத்தால் நோய் உருவாகும் ஆபத்து பலமடங்கு குறைவது உறுதி செய்யப்பட்டது.
இதயத்திற்கு நல்லது:
அதுமட்டுமல்லாமல் கட்டிப்பிடிப்பதால் இதய நலன் பேணப்படுகிறது என்பதும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதற்காக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நபர்கள் ஒருவர் கையை ஒருவர் 10 நிமிடங்கள் பிடித்திருக்குமாறும், ஒருவரை ஒருவர் 20 வினாடிகள் கட்டிப்பிடிக்குமாறும் சொல்லப்பட்டனர். இன்னொரு குழுவினர் அமைதியாக இருக்குமாறு சொல்லப்பட்டனர். கட்டிப்பிடித்தவர்களின் உயர் ரத்த அழுத்தம் குறைந்து, இதய துடிப்பு சீராக இருந்தது. இதுவே போதுமான ஆராய்சி என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மகிழ்ச்சியைத் தரும்:
நாம் ஏற்கெனவே குறிப்பிட்டது போல் கட்டிப்பிடித்தல் ஆக்ஸிடாசின் என்ற ஹேப்பி ஹார்மோனை சுரக்கச் செய்து நமக்கு மகிழ்ச்சியை நல்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும்
அது மட்டுமல்லாமல் கட்டிப்பிடித்தல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நாம் ஒருவரை கட்டி அணைக்கும்போது நம் ரத்த ஓட்டத்தை அந்த அரவணைப்பு சீராக்கும். அப்படியென்றால் அதன் பின்னர் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்படும்.
அடடா அன்பைப் பறிமாறிக் கொண்டால் இத்தனை நன்மைகளா என்று ஆச்சரியப்படாமல் முதலில் உங்கள் குடும்பம், நட்பு சுற்று வட்டாரத்திலாவது அன்போடு பழகுங்கள், அன்பை விதையுங்கள். அது பல மடங்காக திரும்பி வரும்.