Pongal 2024 Nalla Neram: பொங்கல் வைக்க நல்ல நேரம் இதுதான்! ஜோதிட நிபுணர்கள் சொல்வது என்ன?
Pongal 2024 Nalla Neram: பொங்கல் வைக்க நல்ல நேரம் குறித்து ஜோதிட நிபுணர்கள் சொல்பவை..
பொங்கல் பண்டிகையின் போது பூஜை செய்வதற்கான நல்ல நேரம் என்ன என்பது குறித்து ஜோதிட நிபுணர்கள் சொல்லும் பரிந்துரைகளை காணலாம்.
பொங்கல் பண்டிகை
தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளும் பொங்கல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதிலும், குறிப்பாக தென்னிந்தியாவில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் இந்த விழா முக்கியமாக கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல் வாரத்தில் ஆண்டுதோறும் வரும் ’பொங்கல்’ என்று அழைக்கப்படும் இந்த திருவிழா உழவர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் ஒரு பெருவிழாவாக பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரத்தில் மகர சங்கராந்தியைப் போலவே இந்த பண்டிகையும் சூரியன் வழிப்படும் நாளாகும். தை மாதத்தில் பயிர் அறுவடை செய்யப்பட்டு மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 18-ஆம் தேதி நிறைவடைகிறது. போகிப் பொங்கல், தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் கொண்டாட்டம். போகி பண்டிகை ஜனவரி 15, தை பொங்கல் ஜனவரி 16, மாட்டுப் பொங்கல் ஜனவரி 17 மற்றும் காணும் பொங்கல் ஜனவரி 18 அன்று கொண்டாடப்படுகிறது.
நல்ல நேரம்
போகிப் பண்டிகை நாளில் அன்றை தினத்தில் நல்ல நேரத்தில் பூஜை செய்வது நல்லது. நல்ல காரியங்கள் எதையும் உகந்த நேரத்தில் மட்டுமே செய்ய வேண்டும். பொங்கள் அன்று (ஜனவரி,15) காலை 6.30 முதல் 7.30 அல்லது 9.30 முதல் 10.30 மணி வரையில் பொங்கல் வைத்து வழிபடலாம்.
மாட்டுப் பொங்கல் கொண்டாட்டத்தில் மாடுகளை குளிப்பாட்டி மாலை அணிவித்து வழிபட வேண்டும். பொங்கல் வைத்து காலை 11.00 முதல் மதியம் 01.00 மணி வரையில் பொங்கல் வைத்து மாடுகளுக்கு பூஜை செய்யலாம்.
பொங்கல் பூஜையில் வைப்பதற்கு கல் உப்பு, துவரம் பருப்பு, வெல்லம் உள்ளிட்டவற்றை வாங்கி வைக்கலாம். இதனால் வீட்டில் செல்வமும் வளமும் பெருகும் என்று நம்பப்படுகிறது. பொங்கல் தினத்தில் பால் பொங்கும் போது ‘பொங்கலோ...பொங்கல்..’ என்று சொல்லி கொண்டே பொங்கல் வைப்பது சிறந்தது. அதோடு, வாழை இலையில் இனிப்பு பொங்கல், பால் பொங்கல், பாயசம், வடை, கரும்பு, பழங்கள் என வைத்து நல்ல நேரத்திற்குள் பூஜை செய்து முடித்துவிட்ட வேண்டும். ராகு காலம், நல்ல நேரம் இல்லாத நேரத்தில் பூஜை செய்யாமல் இருப்பது நல்லது.
உங்களுக்குப் பிடித்தவாறு வீட்டிலை அலங்கரித்து விடுமுறை தினத்தில் பொங்கல் வைத்து குடும்பத்துடன் நண்பர்களுடன் மகிழலாம்.
2024ம் ஆண்டில் புத்தாண்டு முடிந்து பொங்கல் நெருங்கி வரும் நிலையில், ஜனவரி மாதம் எத்தனை நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது என்ற முழு பட்டியலை இங்கே பார்க்கலாம். மேலும் வாசிக்க..
விழா | தேதி | நாள் |
புத்தாண்டு தினம் | ஜனவரி 1 | திங்கட்கிழமை |
பொங்கல் | ஜனவரி 15 | திங்கட்கிழமை |
திருவள்ளுவர் தினம் | ஜனவரி 16 | செவ்வாய் |
உழவர் திருநாள் | ஜனவரி 17 | புதன் |
தைப்பூசம் | ஜனவரி 25 | வியாழன் |
குடியரசு தினம் | ஜனவரி 26 | வெள்ளி |